இந்தியாவில் மாருதி விட்டாரா: உளவாளிகளின் கண்களில் தென்பட்டது
published on நவ 23, 2015 02:51 pm by அபிஜித்
- 17 Views
- 4 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
சுசூகி விட்டாரா கார், நொய்டாவில் உள்ள மாருதி சுசூகி ஆலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததை, நமது உளவாளிகள் பார்த்து விட்டனர். ஐரோப்பிய காம்பாக்ட் SUV சிறப்பம்சங்களின் தோற்றத்தோடு உள்ள 3 விட்டாரா கார்கள் அங்கே இருந்தன. அநேகமாக, இவை அடுத்து நடக்கவிருக்கிற 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்துவதற்குத், தயாரான நிலையில் இங்கு நிறுத்தப்பட்டிருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது.
தயாரிப்பாளர்களிடமிருந்து இந்த காரின் அறிமுகத்தை பற்றிய எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை என்றாலும், இந்நிறுவனத்தின் S-க்ராஸ் மாடலின் விற்பனை மிதமாக உள்ளதால் அடுத்த ஆண்டு முடிவில் அல்லது அதற்கு முன்பே கூட இந்த காரை இந்தியாவில் மாருதி நிறுவனம் அறிமுகப்படுத்திவிடும் என்று தெரிகிறது.
2015 -யின் முற்பகுதியில் நடந்த பாரிஸ் மோட்டார் ஷோவில், இந்த மாடல் முதல்முதலாக வெளியிடப்பட்டது. விட்டாரா மாடல், 2013 ஆம் ஆண்டில் காட்சிப்படுத்தப்பட்ட iV-4 கான்செப்ட்டின் அடிப்படையில், நவீன பாக்ஸ்ஸி ஸ்டைலில் உள்ளது. எனினும், இந்தியாவில் கைவிடப்பட்ட பழைய விட்டாராவை இந்த புதிய மாடல் ஞாபகப்படுத்துவதை மறுக்க முடியாது. வெளித்தோற்றத்தில், நாம் மிக முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது, கிலாம்ஷெல் வடிவத்தில் உள்ள பான்னெட், புரொஜெக்டர் ஹெட்லாம்ப், காண்ட்ராஸ்ட் ரூஃப், சற்றே இறக்கி உள்ளடக்கி வைக்கப்பட்ட ஏர் டேம், குரோம் கிரில், சற்றே உள்ளே தள்ளி பொருத்தப்பட்டுள்ள டெய்ல் லாம்ப்ஸ், பெரிய கிராஃபைட் அலாய் சக்கரங்கள் போன்ற சிறப்பான அம்சங்களாகும்.
ஐரோப்பிய சந்தைக்கேற்ற விட்டாரா மாடலில் 120bhp சக்தியை தரவல்ல 1.6 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் மோட்டார் பொருத்தப்பட்டு, சக்தியூட்டப்பட்டுகிறது. அது தவிர, மேலும் ஒரு ஆப்ஷனாக 1.6 லிட்டர் 320 Nm டார்க்கை உற்பத்தி செயாக்கூடிய டீசல் இஞ்ஜின் பொருத்தப்பட்டும் ( S-க்ராஸ் மாடல் போல) கிடைக்கிறது. பெட்ரோல் வகையில் 5-ஸ்பீட் மேனுவல் பொருத்தப்பட்டும், 6-ஸ்பீட் ஆட்டோமேடிக் ஆப்ஷன் விருப்ப தெரிவாகவும் கிடைக்கிறது. ஆனால் டீசல் வகையில் 6-ஸ்பீட் மேனுவல் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது.
அடுத்த வருடத்தில், மாருதி நிறுவனம் இந்தியாவில் புதிய ஜெனரேஷன் வாகனங்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இக்னிஸ், மாருதி YBA SUV போன்ற கார்கள் மட்டுமல்லாது, இந்த விட்டாரா மாடலும் கூட அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிகிறது. இவை அனைத்தும் மாருதியின் உயர்தர நெக்ஸா டீலர்ஷிப் வழியாக விற்பனை செய்யப்படும்.
ஆதாரம்: பேஸ்புக்கின் ‘டீம் ஃபியட் மோட்டோ கிளப்’ மேம்பரான திரு ஆசிப் ஷெரிஃப்.
இதையும் படியுங்கள்
0 out of 0 found this helpful