இப்போதைக்கு ஸ்கோடா விஷன் S தொழில்நுட்பம் தான், ஒரு மாறுபட்ட SUV
published on பிப்ரவரி 03, 2016 05:00 pm by அபிஜித்
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
விஷன் S தொழில்நுட்பத்தின் வெள்ளோட்டத்துடன் (ப்ரிவ்யூ) கூடிய சில விரிவான படங்களையும், செக் குடியரசு நாட்டு வாகனத் தயாரிப்பாளர் வெளியிட்டுள்ளார். அடுத்து வரவுள்ள SUV-யில் மூன்று வரிசையில் அமைந்த சீட்களை பெற்று, அதிகளவில் நடைமுறைக்கு ஏதுவானதாக இருக்கும். ஆனால், இதன் உலக அரங்கேற்றம் அல்லது வெளியீட்டிற்கான சரியான தேதி எதுவும் தெரியவில்லை.
ஸ்கோடாவின் குறியீட்டை பெற்ற பெரிய உருவத்தைக் கொண்ட ஒரு SUV-யாக இருந்தாலும், டிஜிட்டல் ஒழுங்கமைவு மூலம் ஸ்போர்ட்டியாகவே தோற்றம் அளிக்கிறது. இந்த கார் நிஜ உருவத்திற்கு மாறும் போது, பார்வைக்கு மிகவும் வசீகரமாக இருக்கும். கோபத்தை வெளிப்படுத்தும் ஹெட்லெம்ப்களுடன் கூடிய வழக்கமான ஸ்கோடாவின் முன்பக்க கிரில் காணப்படுகிறது. மேலும் எட்டியின் முந்தைய தலைமுறை காரில் இருந்தது போல, ஹெட்லைட்டிற்கு நேராக கீழே ஒரு தனிப்பட்ட ஃபேக் லெம்ப் உள்ளது.
இந்த தொழிற்நுட்பத்தின் நீளம் - 4700 mm, அகலம் - 1910 mm மற்றும் உயரம் 1680 mm என்ற பரிமாணத் தகவலை (டைமன்ஸ்னல் டேட்டா), ஸ்கோடா நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேற்கண்ட வெளிப்புற விவரங்களுடன் கூடிய இந்த கார், ஹூண்டாய் சாண்டா பி-யின் பிரிவில் சேர்ந்து போட்டியிட தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த விஷன் S அல்லது அதற்கு எதிர்பார்க்கப்படும் பெயரான கோடீயாக், வோல்க்ஸ்வேகனின் MQB பிளாட்பாமை அடிப்படையாக கொண்டது ஆகும். ஒரு உயர்தரமான மோட்டாரை கொண்ட வாகனங்களை குறிக்க (வோல்க்ஸ்வேகன் குடையின் கீழ் வருபவை மட்டும்), இதுவே பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் இவை முன்பக்க வீல் டிரைவ் / சார்புடையவை ஆகும்.
அதிகம் கவனிக்கப்படாத நுட்பமான விஷயங்களையும் சற்று ஆழ்ந்து பார்க்கும் போது, சூப்பர்ப் காரிடம் இருந்து 1.6-லிட்டர் டர்போடீசலை, விஷன் S பெற்றுக் கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 4-வீல் டிரைவ் அம்சத்தை ஒரு கூடுதல் தேர்வாக கொண்ட ஒரு டீசல்-ஹைபிரிடு பதிப்பையும் எதிர்பார்க்கலாம்.
இது குறித்து ஸ்கோடா நிறுவன செய்தித் தொடர்பாளர்கள் கூறுகையில், “கடந்த சில ஆண்டுகளாக ஸ்கோடா நிறுவனம், தனது மாடல் ரேஞ்சை முழுமையாக புதுப்பித்து வருகிறது. அடுத்தப்படியாக SUV பிரிவை சேர்ந்த மாடல்களின் ரேஞ்சை விரிவுப்படுத்துவதில் ஈடுபட போகிறது” என்றார்.
இதன் இந்திய அரங்கேற்றம் குறித்து கூறுகையில், இந்தாண்டே இந்த கார் இங்கு கொண்டு வரப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. அதிலும் ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதிய காரை கொண்டு வர வேண்டும் என்று இந்த கார் தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க
0 out of 0 found this helpful