ஸ்கோடா ஒவ்வொரு வருடமும் புதிய தயாரிப்புக்களை அறிமுகப்படுத்த உள்ளது
published on ஜனவரி 27, 2016 04:35 pm by sumit
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஸ்கோடா நிறுவனம், இனி வரும் சில வருடங்களில் ஒன்று அல்லது இரண்டு புதிய தயாரிப்புக்களை அறிமுகப்படுத்தி சந்தையில் தனது இடத்தை வலுவாக்கிக் கொள்ள முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு நிதி ஆண்டிலும் இந்திய சந்தையில் புதிய கார்களை அறிமுகப் படுத்துவது என்று முடிவு செய்துள்ளது. என்று திரு. சுதிர் ராவ் , ஸ்கோடா இந்தியா சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார். 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டு நிர்வாக சீர்திருத்தங்களிலும் , செயல்பாடுகளை நெறி படுத்துவதிலும் ஸ்கோடா நிறுவனம் ஈடுபட்டிருந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஸ்கோடா நிறுவனத்தின் பொறியியல் வல்லுநர் குழு எந்த வித மாற்றமும் இன்றி 30 ஆண்டுகளாக பணியாற்றி வருவதாகவும் எத்தகைய சிக்கலையும் தீர்க்கமாக ஆராய்ந்து தீர்த்து வைக்கும் ஆற்றல் பெற்றவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார். பொருளாதார ரீதியிலும், அனைத்து ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு தான் ஸ்கோடா நிறுவனத்திற்கு மிகச் சிறந்த ஆண்டாக அமைந்தது என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் , “ சொகுசு கார் பிரிவில் அதி நவீன தயாரிப்புக்களை அளித்து ஒரு வலுவான இடத்தைப் பிடிக்க எங்களது கடந்த வருடத்திய பெர்பார்மன்ஸ் எங்கள் தன்னம்பிக்கையை பெரிதும் கூட்டியுள்ளது " என்றும் கூறியுள்ளார்.
ஸ்கோடா நிறுவனம் தங்களது புதிய அடையாளத்தை வெளிப்படுத்தி தனது ப்ரேன்ட் மதிப்பை உயர்த்த முனைப்புடன் செயல்படுகிறது. “ எங்களது ப்ரேன்டுக்கான புதிய ஒரு கார்பரேட் அடையாளத்தை வெளியிடுகிறோம். இந்த புதிய அடையாளமானது இளைய தலைமுறை வாடிக்கையாளர்களை கவர்ந்திழுத்து அவர்களுடைய எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யும்
ஐரோப்பிய தொழில்நுட்பத்திற்கும் இந்திய வாடிக்கையாளரின் விருப்பதிற்கும் தீனி போடும் வகையில் சரியான இடத்தில் ஒரு சிறிய ப்ரீமியம் ஹேட்ச்பேக் காரை அறிமுகப்படுத்த தக்க தருணத்திற்காக காத்திருக்கிறோம். நாங்கள் வேண்டுமென்றே தான் மாஸ் பிரிவில் மெதுவாக வாகனங்களை அறிமுகப்படுத்துகிறோம். அவ்வாறு செய்வதன் மூலம் நல்ல உயர்வான தரத்துடன் கூடிய வாகனங்களை எங்களால் தர முடிகிறது. ஸ்கோடா ஒரு முன் மாதிரியான ப்ரேன்டாக வாடிக்கையாளர்களால் பார்க்கப்பட வேண்டும் " என்று திரு. ராவ் கூறியுள்ளார்.
ஸ்கோடா நிறுவனம் 2008 ஆம் ஆண்டு பேபியா கார்களை அறிமுகம் செய்து 2013 ஆம் ஆண்டு வரை 45,000 கார்களை விற்றிருந்தது. பின்பு விற்பனை குறைந்தவுடன் அந்த காரின் தயாரிப்பை கைவிட்டது. ஒரு சிறந்த காரில் இருக்க வேண்டிய அனைத்து அம்சங்களும் இந்த பேபியா கார்களில் இருந்தும் கடைசி கட்டங்களில் கொடுக்கப்பட்ட ஏராளமான சலுகைகள் அந்த காரை மொத்தமாக கொன்று விட்டது என்று பேபியா கார்களின் நிலை குறித்து திரு. ராவ் விளக்கம் அளித்துள்ளார். “ பேபியா ஒரு அற்புதமான தயாரிப்பு , இருந்தும் இறுதி கட்டங்களில் கொடுக்கப்பட்ட அளவுக்கு அதிகமான சலுகைகள் அந்த காரை முற்றிலும் பாதித்துவிட்டது. ப்ரீமியம் ஹேட்ச்பேக் பிரிவு இந்திய சந்தையில் பிரபலமாகி வரும் சூழில் , நாங்களும் சரியான நேரத்தில் சரியான ஒரு தயாரிப்புடன் களம் இறங்குவோம் " என்று ராவ் கூறியுள்ளார்.
இந்த வருடம் ஸ்கோடா சூபர்ப் காரின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு அறிமுகமாக உள்ளது. இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் சிறிய ரக கார் ஒன்றும் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வாசிக்க தனது பேட்ஜ் கொண்ட வோல்க்ஸ்வேகன் அமியோ-வை, ஸ்கோடா வெளியிடுமா?
0 out of 0 found this helpful