ஸ்கோடா நிறுவனம் மூன்றாம் தலைமுறை ஸ்கோடா சுபெர்ப் கார்களை சீனாவில் அறிமுகப்படுத்தியது
modified on நவ 02, 2015 02:13 pm by sumit for ஸ்கோடா சூப்பர்ப் 2016-2020
- 17 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர் :
செக் நாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான ஸ்கோடா நான்கு மாதங்களுக்கு முன் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்திய தனது மேம்படுத்தப்பட்ட மூன்றாவது தலைமுறை 'சுபெர்ப்' கார்களை தற்போது சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. MQB தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த கார்களில் கூடுதல் பாதுகாப்பு மற்றும் தொடர்பு சாதன ( கனக்டிவிடி) அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன. கவர்ச்சிகரமான வடிவமைப்பு, அசத்தலான தொழில்நுட்ப சிறப்புக்கள் மற்றும் இந்த வகை கார்களிலேயே மிக அதிக இடவசதி - இவ்வாறு தான் இந்த புதிய சுபெர்ப் கார்களை சுருக்கமாக வர்ணிக்க முடியும்.
இதையும் படியுங்கள் : ஸ்கோடா 500, 000 எட்டி கார்களை விற்றுள்ளது.
“ ஸ்கோடா சுபெர்ப் கார்களின் அறிமுகம் ஒரு மிக முக்கிய மைல்கல்லாக அமைவது மட்டுமின்றி எங்களது மிக முக்கிய சந்தையான சீன வாகன சந்தையில் எங்கள் வெற்றியை மேலும் உறுதி படுத்துவதாக அமையும். வடிவமைப்பு விஷயத்திற்கு ஸ்கோடா நிறுவனம் கொடுக்கும் கூடுதல் முக்கியத்துவமும், உணர்வுபூர்வமான வடிவமைப்பை செயல்படுத்துவதில் காட்டும் முனைப்பிற்கும் தக்க சான்றாக இந்த புதிய சுபெர்ப் விளங்கும். இந்த கோட்பாடுகளை பின்பற்றி எதிர் வரும் ஆண்டுகளில் ஸ்கோடா நிறுவனம் பல புதிய வாடிக்கையாளர்களை கவர்ந்திழுத்து, சீன சந்தையில் தங்களது இடத்தை மேலும் வலுப்பெற செய்வதையே குறிக்கோளாக கொண்டு பணியாற்றி வருகிறது " என்று ஸ்கோடா நிறுவன விற்பனை மற்றும் மார்கெடிங் பிரிவு போர்ட் உறுப்பினர் வெர்னெர் ஐஷ்ஹார்ன் கூறி உள்ளார். ஸ்கோடா சீன வாகன சந்தையில் ஏற்கனவே பிரபலமான பெயர் தான். மேலும் அண்டின்க் (ஷாங்காய்), நன்ஜின்க், ஐஷேன்க் மற்றும் நிங்போ ஆகிய இடங்களில் ஸ்கோடா தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. உலகின் மிகப்பெரிய இரண்டாவது பொருளாதார வல்லரசான சீனாவில் வருடத்திற்கு அரை மில்லியன் வாகனங்களை விற்பனை செய்து விட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது ஸ்கோடா நிறுவனம். மேலும் ஸ்கோடா சுபெர்ப் ஏற்கனவே சீனாவில் வெற்றி பெற்ற மாடல் என்பதும் இதற்கு முந்தைய மாடல் ஸ்கோடா சுபெர்ப் 2 லட்சம் கார்கள் விற்பனை ஆகி இருக்கின்றன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
சம்மந்தமான செய்திகள்:
0 out of 0 found this helpful