இந்தியாவில் Skoda Kodiaq விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது
இந்தியாவில் கோடியாக் ஆனது ஸ்கோடா -வின் ஃபிளாக்ஷிப் எஸ்யூவி -யாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. 2025 மே மாதத்துக்குள்ளாக புதிய ஜெனரேஷன் கார் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
கோடியாக் ஆனது ஸ்கோடா -வின் இந்திய இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
-
புதிய தலைமுறை மாடல் 2025 மே மாதத்துக்குளாக அறிமுகப்படுத்தப்படவுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
-
விற்பனையில் இருந்து நிறுத்தப்பட்ட ஸ்கோடா எஸ்யூவி ஒரே ஒரு LK வேரியன்ட்டில் விற்பனை செய்யப்பட்டது. மேலும் அதன் விலை ரூ.40.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது .
-
காரில் 190 PS மற்றும் 320 Nm அவுட்புட்டை கொடுக்கும் 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் இருந்தது.
-
வரவிருக்கும் கோடியாக் ஆட்டோ எக்ஸ்போ 2025 நிகழ்வில் சற்று அப்டேட் செய்யப்பட்ட வடிவமைப்புடன் காட்சிப்படுத்தப்பட்டது.
-
2025 கோடியாக்கின் விலை ரூ.45 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய தலைமுறை கோடியாக் ஸ்கோடாவின் இந்திய இணையதளத்தில் இருந்து இப்போது நீக்கப்பட்டுள்ளது. முன்னர் புதிய தலைமுறை ஸ்கோடா கோடியாக் கார் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்தியாவில் ஸ்கோடாவின் ஃபிளாக்ஷிப் எஸ்யூவி -யாக இருந்த முந்தைய கோடியாக் ஆனது ஒரு லாரின் மற்றும் க்ளெமென்ட் (எல்கே) வேரியன்ட் -ல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. மற்றும் இறுதியாக அதன் விலை ரூ. 40.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக இருந்தது.
2024 ஸ்கோடா கோடியாக் பற்றிய விவரங்களை பார்ப்போம்:
ஸ்கோடா கோடியாக்: ஒரு கண்ணோட்டம்
நிறுத்தப்பட்ட ஸ்கோடா கோடியாக் ஆனது பெரும்பாலான ஸ்கோடா கார்களை போலவே குரோம் எலமென்ட்களுடன் கூடிய ஸ்கோடா கிரில் மற்றும் அதன் கீழே ஃபாக் லைட்களுடன் கூடிய LED ஹெட்லைட்களுடன் வந்தது. பம்பரின் கீழ் பகுதி பிளாக்டு அவுட் செய்யப்பட்டு அறுங்கோண வடிவத்தில் இருந்தது. இதில் 18-இன்ச் சில்வர் அலாய் வீல்கள் மற்றும் ரேப்பரவுண்ட் டெயில்லைட்கள் இருந்தன.
இது பிளாக் மற்றும் பெய்ஜ் கலர் கேபின் தீம், 8-இன்ச் டச் ஸ்கிரீன், ஆம்பியன்ட் லைட்ஸ், 12-ஸ்பீக்கர் கேன்டன் சவுண்ட் சிஸ்டம் மற்றும் 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே ஆகியவற்றுடன் வந்தது. பாதுகாப்புக்காக இது 9 ஏர்பேக்குகள், ESC மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் இருந்தது. ஆனால் எந்த அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) தொகுப்பும் கொடுக்கப்படவில்லை.
புதிய தலைமுறை ஸ்கோடா கோடியாக் இந்த ஆண்டு மே மாதத்துக்குள்ளாக அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு புதிய வெளிப்புற வடிவமைப்பில் ஆனால் முற்றிலும் புதிய டாஷ்போர்டை கொண்டுள்ளது. புதிய கோடியாக் உடன் கிடைக்கும் அனைத்தையும் இங்கே சுருக்கமாகப் பார்ப்போம்:
மேலும் படிக்க: Renault Kwid, Kiger மற்றும் Triber இப்போது CNG ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது
2025 ஸ்கோடா கோடியாக்
2025 ஸ்கோடா கோடியாக் ஆனது நேர்த்தியான LED ஹெட்லைட்கள் மற்றும் புதிய பம்பர் உள்ளிட்ட வடிவமைப்புடன் வரும். மேலும் இது புதிய 20-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் கறுப்பு நிறத்துடன் கூடிய வட்டமான வீல் ஆர்ச்களை கொண்டிருக்கும். பின்புறத்தில் சி வடிவ LED டெயில் லைட்ஸ்கள் இருக்கும்.
புதிய 2-ஸ்போக் ஸ்டீயரிங் வீலுடன் ஸ்கோடா எழுத்துகள் மற்றும் லேயர்டு டேஷ்போர்டு வடிவமைப்பு உள்ளது. இன்ட்டீரியரில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கியர் லீவர் ஸ்டீயரிங் வீலுக்கு பின்னால் ஒரு ஸ்டால்க் ஆக இருக்கும், இது வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் உள்ளிழுக்கும் மூடியுடன் கூடிய ஸ்டோரேஜ் இடத்தைக் கொண்டிருக்கும். இது சென்டர் கன்சோலில் அதிக இடத்தை கொடுக்கும்.
இது 13-இன்ச் ஃப்ரீ-ஸ்டாண்டிங் டச் ஸ்கிரீன், 10.25-இன்ச் ஆல் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் பிராண்டட் சவுண்ட் சிஸ்டம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது பனோரமிக் சன்ரூஃப், ஆம்பியன்ட் லைட்ஸ், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் ஹீட்டட் மற்றும் வென்டிலேட்டட் முன் சீட்கள் இருக்கும்.
மல்டி ஏர்பேக்குகள், ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் மற்றும் ஹில் ஹோல்ட் அசிஸ்ட் உள்ளிட்டவற்றுடன் பாதுகாப்புத் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், பிளைண்ட் ஸ்பாட் டிடெக்ஷன், லேன் அசிஸ்ட் மற்றும் பார்க்கிங் அசிஸ்ட் செயல்பாடுகள் போன்ற அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) -களின் முழு தொகுப்பையும் இது பெறலாம்.
2025 ஸ்கோடா கோடியாக்: பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
2025 ஸ்கோடா கோடியாக் 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இப்போது அதிக செயல்திறன் உடன் வருகிறது. அதன் விவரம் இங்கே:
இன்ஜின் |
2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் |
பவர் |
204 PS |
டார்க் |
320 Nm |
டிரான்ஸ்மிஷன் |
7-ஸ்பீடு DCT* |
டிரைவ்டிரெய்ன் |
AWD^ |
*DCT = டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்
^AWD= ஆல்-வீல்-டிரைவ்
மேலும் இதனுடன் கிடைக்கும் வேறு சில ஃபியூல் ஆப்ஷன்களின் விவரங்கள் அதன் வெளியீட்டிற்கு முன்னதாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றன.
2025 ஸ்கோடா கோடியாக்: எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
2025 ஸ்கோடா கோடியாக் விலை ரூ. 45 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது தொடர்ந்து டொயோட்டா ஃபார்ச்சூனர், எம்ஜி குளோஸ்டர் மற்றும் ஜீப் மெரிடியன் ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.