சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

Skoda Epiq கான்செப்ட்: சிறிய எலக்ட்ரிக் எஸ்யூவி -யை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்

published on மார்ச் 19, 2024 02:39 pm by ansh

புதிதாக வரவிருக்கும் ஆறு ஸ்கோடா எலக்ட்ரிக் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். மற்றும் ஸ்கோடாவின் EV டிசைன் அணுகுமுறைக்கு அடித்தளமாக இது இருக்கும்.

ஸ்கோடா எபிக் சமீபத்தில் உலகளவில் ஒரு கான்செப்ட் ஆக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்கோடா தயாரித்து வரும் ஆறு புதிய EV-களில் இதுவும் ஒன்றாகும். வடிவமைப்பு ஆரம்ப கட்டத்தில் இருந்தாலும் எபிக் எதிர்கால ஸ்கோடா EV-களின் டிசைன் பற்றிய ஒரு பார்வையை நமக்கு வழங்குகிறது. மற்றும் இந்த எலக்ட்ரிக் வாகனத்தின் எதிர்பார்க்கப்படும் டிரைவர் ரேஞ்ச் மற்றும் வசதிகளைப் பற்றிய சில தகவல்களையும் வழங்குகிறது. இந்த EV கான்செப்ட் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய விஷயங்கள் இங்கே.

எதிர்காலத்திற்கேற்ற டிசைன்

ஸ்கோடா எபிக் கார் தயாரிப்பாளரின் நவீன சாலிட் டிசைன் அணுகுமுறையை ஏற்றுக்கொள்கிறது. இது வரவிருக்கும் ஸ்கோடா மாடல்களிலும் பயன்படுத்தப்படும். இது சமகால நேர்த்தியான எலமென்ட்களை உறுதியான வடிவங்களுடன் இணைக்கிறது. 4.1 மீட்டர் நீளமுள்ள குஷாக் போன்ற பரிமாணங்களுடன் எபிக் -கின் நீளம் குஷாக்கை போலவே இருக்கின்றது.

மேலும் பார்க்க: வெளிநாடுகளில் சோதனை செய்யப்பட்டு வரும் Hyundai Creta EV இந்தியாவில் 2025 ஆண்டில் அறிமுகமாகலாம் !

எபிக் ஆனது ஸ்கோடாவின் சிக்னேச்சர் கிரில் டிசைனை கொண்ட ஒரு வெர்டிகல் ஃப்ரன்ட் ப்ரொஃபைலை கொண்டுள்ளது. இது பானட் விளிம்பில் கனெக்டட் LED DRL-க்கான இல்லுமினேட்டட் எலமென்ட்களையும் கொண்டிருக்கும். பாரம்பரிய ஸ்கோடா பேட்ஜ் -க்கு பதிலாக இதில் இல்லுமினேட்டட் எழுத்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த டிசைனின் தனித்துவமான ஒரு விஷயம் அதன் பம்பர் மற்றும் ஸ்கிட் பிளேட் ஆகும். இதில் 8 வெர்டிகல் ஸ்லேட்டுகள் உள்ளன. இந்த பம்பர் டிசைன் ரியர் ப்ரொஃபைலில் பிரதிபலிக்கிறது இதில் நேர்த்தியான "T-வடிவ" லைட்டிங் அமைப்புகள் மற்றும் இல்லுமினேட்டட் ஸ்கோடா லோகோ உள்ளது.

இதன் ப்ரொஃபைல் டிசைன் எளிமையானது நீண்டிருக்கும் வீல் ஆர்ச்கள், கதவுகளின் கீழே கிளாடிங் மற்றும் ரூஃப் ரெயில்கள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும் அலாய் வீல்களின் டிசைனே இங்கு கண்களைக் கவரும் வகையில் தனித்து நிற்கிறது. இது விளிம்புகளில் மூடிய தோற்றத்துடன் இருக்கும். இது மிகவும் கவர்ச்சிகரமான தோற்றம் ஆக உள்ளது.

மினிமலிஸ்டிக் கேபின்

இன்றைய கால கட்டத்தில் மினிமலிசம் என்பது கார் தயாரிப்பாளர்கள் அனைவரும் பின்பற்றும் ஒரு விஷயம் ஆகும். மேலும் ஸ்கோடாவும் எபிக் மாடலில் அதையே பின்பற்றியுள்ளது. அதன் கேபின் மினிமலிஸ்டிக் டிஸைன் எலமென்ட்களையே கொண்டுள்ளது. இது நேர்த்தியான மற்றும் நவீன தோற்றத்தை வழங்குகிறது. உட்புறம் ஒரு பிளாட் டேஷ்போர்டு மற்றும் ஒரு புதிய டூ-ஸ்போக் ஸ்டீயரிங் வீலுடன் டூயல்-டோன் ஸ்கீமை கொண்டுள்ளது இது கீழே உயரத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. சென்டர் கன்சோல் U-வடிவ வடிவமைப்பு வசதிகளை ஆம்பியன்ட் லைட்களுடன் காட்சிப்படுத்துகிறது. இந்த மாடலில் உங்களுக்கு ஸ்போர்ட்டி பக்கெட் சீடர்களுடன் கிடைக்கிறது (இவை உற்பத்திக்கு தயாராக இருக்கும் வெர்ஷனில் இவை சேர்க்கப்படாமலும் போகலாம்).

மேலும் படிக்க: இந்தியாவில் வேகமெடுக்கும் Tesla-வின் பயணம்: புதிய EV கொள்கையானது விரைவான அறிமுகம் மற்றும் குறைந்த இறக்குமதி கட்டணங்களுக்கு உதவுகின்றது

இது நடைமுறையில் 490 லிட்டர் பூட் ஸ்பேஸையும் கொண்டுள்ளது.

நவீன வசதிகள்

எபிக் கான்செப்ட்டில் வசதிகளைப் பற்றிய விவரங்கள் குறைவாகவே உள்ளன. ஆனால் கேபினின் அடிப்படையில் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே ஆதரவுடன் வரக்கூடிய ஃப்ரீ ஃப்லோட்டிங் 13-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இதில் உள்ளதாக நாம் ஊகிக்கலாம். கூடுதலாக இது டிரைவருக்கு 5.3-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே, ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் பனோரமிக் கிளாஸ் ரூஃப் ஆகியவற்றைக் கொண்டிருக்கலாம்.

மேலும் படிக்க: Mahindra இன்னும் அதிகமான பெயர்களுக்கான வர்த்தக முத்திரைகளை பதிவு செய்கிறது

பாதுகாப்பு வசதிகளைப் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும் 6 ஏர்பேக்குகள் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), 360 டிகிரி கேமரா மற்றும் சில அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்கள் (ADAS) வசதிகளை எபிக் பெறக்கூடும்.

ரேஞ்ச் 400 கி.மீ -க்கு மேல் இருக்கலாம்

இந்த EV கான்செப்ட்டின் துல்லியமான பேட்டரி பேக் மற்றும் மோட்டார் விவரங்களை ஸ்கோடா வெளியிடவில்லை. இருப்பினும் எபிக் 400 கி.மீக்கு மேல் பயணம் செய்யும் வகையிலான ரேஞ்சை வழங்கும் என்று அறிவித்துள்ளது. பேட்டரி பேக் திறன் மற்றும் மோட்டார் செயல்திறன் பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக எபிக் ஆனது V2L திறனை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இது மற்ற எலக்ட்ரிகல் சிஸ்டம்களை சார்ஜ் செய்யவும் பவர் கொடுக்கவும் உதவுகிறது.

E -யில் தொடங்கி Q வரை

குஷாக் கோடியாக் மற்றும் கரோக் போன்ற மாடல்களில் காணப்படுவது போல் ஸ்கோடா தனது எஸ்யூவி -களுக்கு பெயரிடுவதற்கான குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை கடைபிடித்துள்ளது. இந்த பெயரிடும் முறை இந்தியாவிற்காக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட சப் காம்பாக்ட் எஸ்யூவி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் எலெக்ட்ரிக் எஸ்யூவி -களுக்கு ஸ்கோடா பெயர் 'E' என்ற எழுத்தில் தொடங்கி 'Q' உடன் முடிவடைய வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது , இதற்கு என்யாக் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இதன் விளைவாக இந்த சிறிய எலெக்ட்ரிக் எஸ்யூவி கான்செப்ட் ‘Epiq' என்று பெயரிடப்பட்டது இது 'Epic' என்ற வார்த்தையிலிருந்து பெறப்பட்டது.

ஸ்கோடா EV எப்போது அறிமுகமாகும்

ஸ்கோடா எபிக் கார் 2025 ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் தொடக்க விலை 25000 யூரோக்கள் (தோராயமாக ரூ. 22.6 லட்சம்) ஆகும். கணிசமான அளவிலான உள்ளூர்மயமாக்கலுடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டால் அது அதே விலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாடா கர்வ் EV மற்றும் ஹூண்டாய் கிரெட்டா பேஸ்டு EV போன்ற மாடல்களுக்கு எதிராக போட்டியிடும். எபிக் -க்கு முன்னதாக ஸ்கோடா இந்தியாவில் அதன் முதல் ஆல்-எலக்ட்ரிக் மாடலாக என்யா -க்கை அறிமுகப்படுத்தும். மேலும் ஸ்கோடா எல்ரோக் உலக சந்தைகளில் அறிமுகமாகவுள்ள அடுத்த EV ஆகும்.

Share via

Write your கருத்தை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

trending எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை