• English
  • Login / Register

ரெனால்ட் நிறுவனத்தின் HHA ப்ரீமியம் SUV பற்றிய தகவல்கள் கசிந்தது.

published on அக்டோபர் 16, 2015 11:42 am by manish

  • 13 Views
  • 3 கருத்துகள்
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்பூர் :

Renault Captur Concept

ரெனால்ட் க்விட் மற்றும் டஸ்டர் வாகனங்கள் பெற்றுள்ள அமோக வெற்றிக்கு பின் இந்த பிரெஞ்சு நட்டு கார் தயாரிப்பாளர்கள் முற்றிலும் புதிய UV ( பயன்பாட்டு வாகனங்கள்) வாகனங்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. . இந்த வரிசையில் மொத்தம் 6 கார்களை 2020 ஆம் ஆண்டுக்குள் ரெனால்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தும் என்று தெரிகிறது. இந்த வரிசையில் முதலாவதாக HHA என்று குறியீட்டு பெயர் சூட்டப்பட்டுள்ள ப்ரீமியம் SUV வாகனங்களே முதலில் அறிமுகமாகும் என்று தெரியவந்துள்ளது. இந்த SUV அக்டோபர் மாதம் 2017 ஆம் ஆண்டு அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரெனால்ட் நிறுவனத்தின் மிகவும் வெற்றிகரமான கேப்டர் பிளேட்பார்மை அடிபடையாகக் கொண்டு இந்த HHA உருவாக்கப்படும் என்று தெரிகிறது. இந்த SUV வாகனத்தை தொடர்ந்து ஒரு MPV மற்றும் இன்னொரு SUV வாகனம் ஆகியவற்றை வெளியிட ரெனால்ட் முடிவு செய்துள்ளது. 2018 ஆம் ஆண்டு அடுத்த தலைமுறை ரெனால்ட் டஸ்டர் அறிமுகம் ஆவதற்கு முன்பாக மேற்கூறிய வாகனங்கள் அறிமுகமாகும்.

ரெனால்ட் நிறுவனத்தின் முக்கியமான ப்ரீமியம் SUV வாகனமாக இந்த HHA விளங்கும். மேலும் ரெனால்ட் கேப்டர் மினி ஸ்போர்ட்ஸ் யுடிலிடி வெஹிகல் ( சிறிய ஸ்போர்ட்ஸ் பயன்பாட்டு வாகனம் ) ப்ளேட்பார்மில் இந்த வாகனங்கள் இடம் பெறும். ரெனால்டின் தனித்துவமான ஐரோப்பிய பாணி வடிவைமைப்புடன் ரெனால்ட்' ஸ் லோகன் M0-B  தொழில்நுட்பத்தை (ப்ளேட்பார்ம்) அடிப்படையாக கொண்டு இந்த புதிய HHA உருவாக்கப்படுள்ளது. இந்த ப்ரீமியம் SUV வாகனம் செவென் சீட்டர் (ஏழு இருக்கைகள்) வசதி கொண்டதாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திரா XUV500  மற்றும் டாடா சபாரி ஸ்டார்ம் வாகனங்களுடன் இந்த HHV போட்டியிடும்.

கடந்த சில ஆண்டுகளாக காம்பேக்ட் SUV மற்றும் SUV பிரிவுகளின் மீது வாடிக்கையாளர்களின் ஆர்வம் அதிகரித்து வருகிறது. மேலும் இப்போது உள்ள வாடிக்கையாளர்களின் மனப் போக்கும் பெரிய பிரிவைச் சேர்ந்த வாகனங்களை வாங்குவதிலேயே அதிக ஆர்வம் காட்டுகிறது. வாடிக்கையாளரின் இந்த மாறிவரும் மனபோக்கிற்கு ஏற்ப, பெரிய கார்கள் பிரிவில் (SUV) பல கார்கள் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டன. அவைகளில் மாருதி நிறுவனத்தின் எஸ் - க்ராஸ், போர்ட் நிறுவனத்தின் ஈகோஸ்போர்ட் ( மேம்படுத்தப்பட்டது) மற்றும் ஹயுண்டாய் நிறுவனத்தின் க்ரேடா ஆகியன குறிப்பிடதக்கவை.

இந்த பிரிவு கார்களுக்கான தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் கூடி வரும் இத்தகைய ஒரு சூழ்நிலையில் ரெனால்ட் நிறுவனத்தின் இந்த புதிய ப்ரீமியம் SUV, சிறப்பம்சங்கள் மற்றும் விலை ஆகிய இரண்டிலும் எவ்வாறு போட்டுயிடப்போகிறது என்பது ஒரு சுவாரஸ்யமான விஷயமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை

இதையும் படியுங்கள்:

was this article helpful ?

Write your கருத்தை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience