• English
  • Login / Register

ரெனால்ட் தனது புதிய க்விட் காரைப் பற்றிய தகவல்களை வெளியிட்டு ஆவலை கூட்டுகிறது : இன்னும் சில வாரங்களில் அறிமுகம் ஆகும் என எதிர்பார்ப்பு

published on செப் 04, 2015 10:43 am by manish

  • 13 Views
  • 18 கருத்துகள்
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்பூர்: 

ரெனால்ட் நிறுவனம் அறிமுகமாகவுள்ள தனது க்விட் கார்களின் மேலும்  சில அழகான படங்களை தன்னுடைய வலைத்தள பக்கங்களிலும் சமூக வலைத்தள பக்கங்களிலும் வெளியிட்டிள்ளது. இந்த பிரெஞ்சு கார் தயாரிப்பாளர்கள் தங்களுடைய இந்த புதிய படைப்பு இந்த வருடத்தில் மிக அதிகமாக எதிர்பார்க்கப்படும்  கார் இதுதான் என்றும் கூறியுள்ளது.  வெளியிடப்பட்டுள்ள சிகப்பு நிறத்திலான க்விட் காரின் புகைப்படம் உண்மையிலேயே மிகவும் நேர்த்தியாக கண்ணைப் பறிக்கும் விதத்தில் இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். வரும் வாரங்களில் இந்த கார் அறிமுகமாகும் என்று எதிர்பார்கப்படுகிறது.   ரெனால்ட் நிறுவனத்தின் கூற்று படி இந்த வாகனம் ' எக்ஸ்ப்ளோர் ' அதாவது நெடும் தூர சவால் நிறைந்த சாலைகளில் பயணிக்க தயாரிக்கப்படும் வாகனங்களில்  ரெனால்ட் நிறுவனத்தினர் பின்பற்றும்   வடிவமைப்பு உத்தி, அசாத்தியமான வலிமை ,  சீறிடும் செயலாற்றல் ஆக்கியவற்றை  இந்த வாகனத்தில் தெளிவாக உணர முடியும் என்று கூறுகிறது . இந்த கார்  SUV -  க்ராஸ் ஓவர் பிரிவு வாகனங்களின்  பாதிப்புக்கள் அதிகம் கொண்டுள்ளது.  இது இந்த பிரிவில் ரெனால்ட் நிறுவனத்தினரின் முதல் அறிமுகமாகும்.

இந்த கார் ரூ .3 – 4 லட்சத்திற்குள் விலை நிர்ணயம் செய்யப்படும் என்றும்  டஸ்டரைப் போன்ற  அம்சங்களுடன்  ஒரு கிராஸ் ஓவர் நிலைப்பாட்டில் இருக்கும் என்று   எதிர்பார்க்கப்படுகிறது.  கிரௌண்ட் கிலியரன்ஸ் விஷயத்தில் இந்த வகை வாகனங்களிலேயே க்விட் கார்களில் தான் சிறப்பான கிரௌண்ட் க்லியரன்ஸ் இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் வலுத்து வருகிறது. வீல் கவர்களுடன் கூடிய 13 - அங்குல ஸ்டீல் ரிம்களை ரெனால்ட் நிறுவனம் காட்சிக்கு வைத்தது. சமீபத்தில் வேவு பார்க்கப்பட்ட போது ஏராளமான குரோம் பூச்சுடன் கூடிய கிரில் மற்றும் பெரிய அல்லாய் வீல்களுடன் கூடிய  மாதிரியையும் பார்க்க முடிந்தது. இதன் மூலம் ரெனால்ட் நிறுவனம் க்விட் கார்களின் லாட்ஜி - ஸ்டெப்வே வெர்ஷன் ஒன்றையும் வெளியிடலாம் என்று பெரிதும் நம்பப்படுகிறது.

இன்னும் உள்ளார்ந்து பார்ப்போமானால் இந்த வகை கார்களிலேயே மிக சிறந்த அளவில் மேம்படுத்தப்பட்ட 800cc  என்ஜின் பொருத்தப்பட்டுள்ளதைக் காண முடிகிறது.  பவர் பாய்ன்ட் குறித்து எந்த விதமான அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படாத  நிலையில் காரின் மற்ற கட்டமைப்பு விஷயங்கள் பற்றி யூகிக்க மட்டுமே முடிகிறது.  உட்புற வடிவமைப்பைப் பொறுத்தவரை இந்த பிரிவில் முதல் முறையாக தொடுதிரை இன்போடைன்மன்ட் சிஸ்டம் இணைக்கப்படும் என்று தெரிகிறது. மேலும், டஸ்டர் மற்றும் லாட்ஜி மாடல்களைப் போல் செயற்கைகோள் நேவிகேஷன் அமைப்பும் கொடுக்கப்பட்டிருக்கும். இவைகளைத்தவிர  வேகத்தைக் காட்டும்  பெரிய மத்திய டிஸ்ப்ளே, அதற்கு பக்கத்தில் எரிபொருள் அளவை காட்டும் பியுவல் இன்டிகேட்டர் மற்றும் எச்சரிக்கை விளக்குகள் ஆகியவற்றை உள்ளடக்கிய டிஜிடல் இன்ஸ்ட்ரூமண்டேஷன் க்ளஸ்டர் அமைப்பையும் காண முடிகிறது.

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience