டஸ்டர் எக்ஸ்ப்ளோர் லிமிடேட் எடிசனை ரெனால்ட் அறிமுகம் செய்கிறது
published on செப் 02, 2015 11:46 am by arun for ரெனால்ட் டஸ்டர் 2016-2019
- 11 Views
- ஒரு கருத்தை எழுதுக
ரெனால்ட் இந்தியா நிறுவனம், ரெனால்ட் டஸ்டர் எக்ஸ்ப்ளோரை இன்று அறிமுகம் செய்கிறது. இது குறித்து ரெனால்ட் நிறுவனம் கூறுகையில், இந்த லிமிடேட் எடிசன் டஸ்டர் எக்ஸ்ப்ளோர், சாகசங்களின் சாராம்சங்களை கொண்டாடி, செல்ல முடியாத இடங்களிலும் கடந்து செல்லும் தன்மையை கொண்டுள்ளதைக் குறிப்பதாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளது.
இந்த லிமிடேட் எடிசனில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள ஆரஞ்சு நிறம் (‘நௌவ்யா ஆரஞ்சு’) ஒரு குறிப்பாக (தீம்) தெரிகிறது. ஏனெனில் டஸ்டர் எக்ஸ்ப்ளோரின் உட்புற மற்றும் வெளிபுற பகுதிகளில் எண்ணற்ற ஆரஞ்சு நிற சேர்ப்புகளின் அலங்காரத்தை காண முடிகிறது.
வெளிபுறத்தை பொறுத்த வரை, டஸ்டர் அட்வென்ச்சர் பதிப்பில் உள்ளது போன்ற அதே பம்பர்களையும், 2 அக்ஸிலரி லெம்ப்களையும் கொண்டுள்ளது. அதை தவிர, அடர் சாம்பல் நிறத்திலான அலாய்களில் இடம் பெற்றுள்ள ரெனால்ட் லோகோவிலும், போனட் உடன் சேர்ந்து செல்லும் ஆப்-செட் கோடுகளிலும் ஆரஞ்சு நிறத்திலான சேர்ப்புகளை காண முடிகிறது. மேலும் கருப்பு நிறத்திலான விங் மிரர்களிலும் இந்த ஆரஞ்சு நிற பட்டைகள் உள்ளது. B மற்றும் D பில்லர்களுக்கும், ‘எக்ஸ்ப்ளோர்’ பிராண்ட்டை குறிக்கும் பக்க பகுதி போர்டில் அமைந்த ஸ்டிக்கரும், ஒளிராத கருப்பு நிறத்தை பெற்றுள்ளது.
ரெனால்ட் இந்தியா ஆப்ரேஷன்ஸின் நிர்வாக இயக்குனர் மற்றும் நாட்டின் தலைமை நிர்வாக அதிகாரியான திரு.சுமித் சாஹ்னி, இந்த புதிய லிமிடேட் எடிசன் டஸ்டர் எக்ஸ்ப்ளோரை குறித்து கூறுகையில், “இந்திய ஆட்டோமோட்டிவ் தொழில்துறையில் டஸ்டரை கொண்டு நாங்கள் ஒரு பிரிவை உருவாக்கினோம். இந்தியாவில் ரெனால்ட் நிறுவனத்தின் வளர்ச்சி திட்டங்களில், டஸ்டர் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு முன்னோக்கு பார்வை கொண்ட நிறுவனமான நாங்கள், டஸ்டரை எப்போதும் புதியதாகவும், காலத்திற்கு ஏற்றதாகவும், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதாகவும் அமைத்து, இந்தியாவின் விருப்பமான SUV-யை, அதன் பரம்பரைச் சொத்தாக மாற்ற விரும்புகிறோம். இந்த பிரிவைச் சேர்ந்த கார்களில் டஸ்டர், தொடர்ந்து சிறந்ததாக நிலைநிற்கும் என்று நம்புகிறோம். அதே நேரத்தில் புதியதாக அறிமுகம் செய்யப்படும் லிமிடேட் எடிசன் டஸ்டர் எக்ஸ்ப்ளோர் மூலம் இந்தியாவில் டஸ்டர் பிராண்ட் இன்னும் பிரபலமாகும்” என்றார்.
உள்புற அமைப்பில் தாராளமான ஆரஞ்சு நிற சேர்ப்புகளை காண முடிகிறது. AC துவாரங்களை முக்கியப்படுத்தி காட்டவும், சீட்களின் சுற்றுப்புறம் மற்றும் தரை விரிப்புகள் ஆகியவற்றில் ஆரஞ்சு நிற சேர்ப்புகள் உள்ளன. கியர் ஷிஃப்ட் பெல்லோ, லேதரால் மூடப்பட்ட ஸ்டீயரிங் வீல் ஆகியவற்றிலும் ஆரஞ்சு நிறத்திலான தையலை காணலாம். சின்ன விஷயங்களில் கூட ரெனால்ட்டின் கவனத்தை குறிக்கும் வகையில், மென்மையான தொடுதல் தேவைப்படும் ஸ்விட்சுகளின் பேக்லைட்கள், நாப்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரை சுற்றிலும் மேலோட்டமாகவும் ஆரஞ்சு நிற சேர்ப்புகள் காணப்படுவதை கட்டாயம் குறிப்பிட வேண்டியவை ஆகும்.
இயந்திரவியலை பொறுத்த வரை, லிமிடேட் எடிசன் டஸ்டர் எக்ஸ்ப்ளோரில் எந்த மாற்றமும் இல்லை. அதிகம் கவனிக்கப்படாத நுட்பமான விஷயங்களையும் சற்று ஆழ்ந்து பார்க்கும் போது, சக்தி வாய்ந்த 1.5 dCi-யை கொண்டுள்ளது தெரிகிறது. லிமிடேட் எடிசன் டஸ்டர் 85 PS RXL எக்ஸ்ப்ளோர் மற்றும் லிமிடேட் எடிசன் டஸ்டர் 110 PS RXL எக்ஸ்ப்ளோர் என்ற 2 வகைகளில், துவக்க விலையாக முறையே ரூ.9.99 லட்சம் மற்றும் ரூ.11.10 லட்சம் (எக்ஸ்-டெல்லி) என்று கிடைக்கிறது.
0 out of 0 found this helpful