2016 ஆட்டோ எக்ஸ்போ: ரெனால்ட் தரப்பில் புதிதாக நாம் என்னென்ன எதிர்பார்க்கலாம்?
published on ஜனவரி 28, 2016 05:49 pm by saad
- 17 Views
- ஒரு கருத்தை எழுதுக
இன்னும் ஒரு வார காலத்தில் 13வது பதிப்பான 2016 ஆட்டோ எக்ஸ்போ நடைபெற உள்ளது. கடந்த எக்ஸ்போ-வை காட்டிலும், அடுத்து நடைபெற உள்ள எக்ஸ்போவின் மீது அதிக ஆர்வம் எழுந்துள்ளதால், இது உற்சாகமான ஒன்றாக இருக்கும் என்று தெரிகிறது. இந்நிலையில் மற்ற முக்கியத்துவம் வாய்ந்த வாகன தயாரிப்பாளர்களுடன் சேர்ந்து, பிரான்ஸ் நாட்டு கார் தயாரிப்பாளரான ரெனால்ட் நிறுவனமும், இதன் வாகனங்களை வரிசைப்படுத்தி காட்சிக்கு வைக்க உள்ளது. ஓரிரு வாகனங்களே காட்சிக்கு வைக்கப்பட இருந்தாலும், அவை மதிப்பு மிகுந்தவை என்பதோடு, இந்திய சந்தையில் அவை அறிமுகம் செய்யப்பட்டது முதல் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியவை.
புதுப்பிக்கப்பட்ட டஸ்டர்
கச்சிதமான SUV பிரிவின் முன்னோடியான டஸ்டர், இப்போது இந்தியாவில் நன்கு அறியப்பட்ட ஒரு பெயராக உள்ளது. ஃபோர்டு ஈகோஸ்போர்ட் மற்றும் ஹூண்டாய் க்ரேடா ஆகியவற்றின் வருகையினால், அந்த காரின் வசீகரம் கொஞ்சம் கொஞ்சமாக இழக்க ஆரம்பித்தது. எனவே இந்த முறை அதற்கு ஒரு அட்டகாசமான மேம்பாட்டை அளிக்க, ரெனால்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த புதுப்பிக்கப்பட்ட வாகனம் ஏற்கனவே பிரேசில் சந்தையில் அறிமுகம் செய்துள்ள நிலையில், நம் நாடெங்கிலும் உள்ள பல்வேறு நகரங்களில் சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இதில் காணப்படும் முக்கிய மாற்றங்களாக, ஒரு புதிய ஒற்றை ஸ்லாட் கிரில், புதுப்பிக்கப்பட்ட ஹெட்லெம்ப் கிளெஸ்டர், புதிய ஜோடி அலாய்கள் மற்றும் சீரமைக்கப்பட்ட டெயில்லைட்கள் ஆகியவற்றை காணலாம். புதிய டஸ்டரில் உள்ள என்ஜினை பொறுத்த வரை, அதே 1.5 லிட்டர் DCi மில்லை தொடர்ந்து பயன்படுத்தி, ட்ரிம்மிற்கு ஏற்ப 89bhp மற்றும் 109bhp ஆற்றலை வெளியிடும். அதே நேரத்தில் இதில் 1.6 லிட்டர் பெட்ரோல் ஆற்றலகத்தையும் பெற்று, அதிலிருந்து 102bhp ஆற்றலையும் 148Nm முடுக்குவிசையையும் வெளியிடும்.
ரெனால்ட் க்விட் AMT 1.0 லிட்டர்
கடந்த 2015 ஆம் ஆண்டு, ரெனால்ட் நிறுவனம் மூலம் எல்லோரையும் வியக்க வைக்கும் வகையில் வெளியிடப்பட்ட ஒரு தயாரிப்பு க்விட். SUV-யின் தோற்றத்தோடு கூடி சிறிய காரான இது, இப்பிரிவில் முன்னனி மைலேஜ்ஜையும், போட்டியிடும் விலை நிர்ணயத்தையும் கொண்டு போட்டியாளர்களை மூக்கில் விரல் வைக்க வைத்தது. இப்போது ஒரு நேர்த்தியான தோற்றத்தை கொண்ட க்விட் காரின் 1.0 லிட்டர் வகையை அறிமுகம் செய்யும் பணியில் ரெனால்ட் நிறுவனம் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. இதன்மூலம் K10 போன்ற சக்திவாய்ந்த பதிப்புகளை இந்த கார் தயாரிப்பாளர் மேற்கொள்வது மிகவும் எளிதாக இருக்கும். இந்த புதிய என்ஜின் மூலம் 77bhp ஆற்றலை, அதாவது 24 குதிரைகளின் சக்தியை அளிக்கும். எனவே இது 800cc பதிப்பை விட சிறந்தது ஆகும். மேலும், என்ஜின் உடன் ஒரு AMT தொகுதி (மோடியூல்) இணைக்கப்படுவதால், இதன் டிரான்ஸ்மிஷன் சிஸ்டத்திலும் வேறுபாடு இருக்கும். இந்த புதிய வகையில் ABS-யையும் கொண்டிருக்க வாய்ப்புள்ளது.
மற்ற கார்கள்
மேலே குறிப்பிட்ட இரண்டு முக்கியத்துவம் வாய்ந்த அறிமுகங்களை தவிர, பிளெக்-இன் ஹைபிரிடு காரான இலோலாப்-பையும், லாட்ஜி MPV-யின் ஒரு சிறப்பு பதிப்பையும் கொண்டுவர ரெனால்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மற்றபடி ரெனால்ட் தரப்பில் கவர்ச்சிகரமாக அமையப் போவது F1 ரேஸிங் காரான RS01 தான்.
மேலும் வாசிக்க
0 out of 0 found this helpful