கார் விற்பனையை அதிகரிக்க உதவும் மழை
manish ஆல் ஆகஸ்ட் 03, 2015 05:28 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
- 1 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
மோட்டார் சைக்கிள் வசதியானது என்ற கருத்தை நாம் எல்லாரும் ஏற்றுக் கொள்ளக் கூடியதே. ஆனால் அதற்குரிய சில தன்மைகள் அவற்றில் இருந்தால் மட்டுமே அது உண்மையாகும். கடந்த மாத விற்பனை திட்ட மதிப்பீட்டை பார்த்தால், மேற்கூறிய கருத்து உண்மை என்பது விளங்கும். கடந்த 3 மாதங்களில், ஜூலை மாதத்தில் தான் கார் விற்பனை மிக அதிகமாக இருந்தது. இதற்கு எரிபொருள் விலை குறைவு, புதிய மாடல்களின் அறிமுகம் மற்றும் அதிக மழை பொழிவு ஆகியவற்றை முக்கிய காரணங்களாக எடுத்துக் கொள்ளலாம்.
கடந்த ஓராண்டில், ஜூலை மாதத்தில் ஒட்டுமொத்த கார் விற்பனை 13% அதிகரித்துள்ளது. அதிலும் எரிபொருள் சிக்கனத்தை கருத்தில் கொண்ட சிறிய வகை கார்களின் தேவை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் சுசுகி போன்ற வாகன உற்பத்தியாளரின், வேகனார் மற்றும் ஆல்டோ ஆகிய கார்கள் அமோகமாக விற்பனையாக நிறுவனத்திற்கு நல்ல லாபத்தை ஈட்டி தந்தன. கடந்தாண்டில் இருந்து மாருதியின் விற்பனை 22.5% அதிகரித்து 110,405 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டு இந்த கார் விற்பனை அதிகரிப்பு, மூன்றில் ஒரு பங்கிற்கு சற்று அதிகமாக இருந்து 37,752 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது.
இந்த கார் விற்பனை அதிகரிப்பு நிலை மேலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த மழைக் காலத்தை தொடர்ந்து வரும் பண்டிகை கால தேவையை பூர்த்தி செய்யும் வகையில், டீலர்கள் இப்போதே கார்களை வாங்கி சேர்த்து வைக்க துவங்கி உள்ளனர். மேலும் புதிய மாடல்களான போர்டு ஆஸ்பைர், மாருதி சுசுகி எஸ்-கிராஸ் மற்றும் மஹிந்திரா டியூவி 300 ஆகியவற்றின் அறிமுகம் கார் விற்பனையை மேலும் அதிகரிக்க உதவும்.
கடந்த ஜூலை மாதத்தில் ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடேட் நிறுவனத்தின் விற்பனை 24.7% ஆக உயர்ந்து 36,500 யூனிட்கள் விற்றது. கொரியன் வாகன தயாரிப்பாளரான இந்நிறுவனம், கச்சிதமான ஸ்போர்ட் பயன்பாட்டு வாகனமான கிரிடாவை, ஜூலை 29ம் தேதி அறிமுகப்படுத்தியது.
இந்தாண்டிற்கு முன்னதாக, கிரிடா அறிமுகமாகும் முன்பே 10,000 யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டதாக ஹூண்டாய் கூறியது. தற்போது இந்த கச்சிதமான எஸ்யூவிக்கு இன்னும் 6-8 மாதங்கள் நேரம் இருக்கிறது.
இந்தியாவின் 3வது பெரிய கார் தயாரிப்பாளரான ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடேட் நிறுவனத்தின் விற்பனையை கடந்த ஒரு ஆண்டோடு ஒப்பிட்டால், 18% அதிகரித்து 18,606 யூனிட்கள் விற்றுள்ளது. இதில் மூன்றில் ஒரு பங்கு விற்பனை, இந்நிறுவனத்தின் புதிய-தலைமுறையை சேர்ந்த ஜாஸ் மூலம் கிடைத்துள்ளது.
எளிய கார் லோன்கள் மற்றும் எரிபொருள் விலை குறைவு ஆகியவை கார் உரிமையாளர்களின் செலவை குறைக்க உதவுகிறது. இதனுடன் புதிய மாடல்களின் அறிமுகமும் சேர்ந்துள்ளதால், கார் விற்பனை அதிகரித்துள்ளது.