அறிமுகமானது Kia EV4: இந்தியாவுக்கு வரும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
ஆல்-எலக்ட்ரிக் கியா EV4 செடான் மற்றும் ஹேட்ச்பேக் என் இரண்டு பாடி ஸ்டைல்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்பெயினில் இப்போது நடைபெற்று வரும் அதன் 2025 EV நாள் நிகழ்வில் கியா நிறுவனம் தயாரிப்புக்கு தயாரக உள்ள EV4 காரை அறிமுகம் செய்துள்ளது. இந்த லேட்டஸ்ட் மாடல் இரண்டு உடல் பாணிகளில் கிடைக்கிறது: செடான் மற்றும் ஹேட்ச்பேக். இவை இரண்டும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான கியா -வின் பிரத்யேக தளமான E-GMP அடிப்படையாகக் கொண்டவை. புதிய EV4 -யை பற்றி விரிவாக பார்க்கலாம்.
Kia EV4: வெளிப்புற வடிவமைப்பு
சந்தைக்கு வரும் ஒவ்வொரு புதிய கியா கார்களையும் போலவே இதுவும் "ஆப்போசிட்ஸ் யுனைட்டட்" என்ற வடிவமைப்பை அடிப்படையாக EV4 ஆனது ஒரு ஃபன் நிறைந்ததாக உள்ளது. முன்பக்கம் பிரபலமான டைகர் முகத்தைக் கொண்டுள்ளது. மேலும் குளோஸ்டு-ஆஃப் கிரில்லுடன், வெர்டிகல் LED ஹெட்லைட்கள் உள்ளன. அதன் கீழே ஒரு பெரிய ஏர் டேம் ஒன்றும் உள்ளது. இது முன்பக்கத்துக்கு ஒரு ஒரு ஆக்ரோஷமான தோற்றத்தை அளிக்கிறது.
இரண்டு மாடல்களின் பக்கவாட்டு தோற்றமும் ஒரு தனித்துவமான தோற்றத்துடன் உள்ளன. ஆனால் ஹேட்ச்பேக் அதன் ரேக் செய்யப்பட்ட ஏ-பில்லர், நேர்த்தியான கோடுகள் மற்றும் ஃப்ளஷ் டோர் ஹேண்டில்களுடன் மிகச் சிறப்பான தோற்றத்தை கொண்டுள்ளது என நாங்கள் நினைக்கிறோம். பெரிய அலாய் வீல்கள் தோற்றத்தைக் கூட்டுகின்றன. துரதிர்ஷ்டவசமாக செடானின் ஸ்டைலிங் பெரிய ஈர்ப்பை கொடுக்கவில்லை ஏனெனில் பூட் பகுதியானது நாட்ச்பேக் போன்ற ஸ்டைலிங்கை உருவாக்க அதன் மீது ஒட்ட வைத்தது போல் தெரிகிறது.
பின்புறத்தில் வெளிப்படையாக, EV4 இரண்டு பாடி பாணிகளில் கிடைக்கிறது. மாடலின் அடிப்படையில் தனித்துவமான ஸ்டைலிங்கை இது கொண்டுள்ளது. நேர்த்தியான L-வடிவ LED டெயில் லேம்ப்கள் ஒட்டுமொத்த வடிவமைப்பை முழுவதுமாகச் சுற்றிலும் உள்ளன.
கியா EV4: உட்புறம்
இதன் கேபின் வடிவமைப்பு மிகவும் பரிச்சயமானது. ஒட்டிமொத்த வடிவமைப்பும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கியா சிரோஸை நினைவூட்டுகிறது. இரண்டு 12.3-இன்ச் ஸ்கிரீன்கள் மற்றும் கிளைமேட் கன்ட்ரோலுக்கான 5-இன்ச் யூனிட் கொண்ட 3-ஸ்கிரீன் செட்டப் ஆகியவை உள்ளன. இது டூ-ஸ்போக் ஸ்டீயரிங் வீலுடன் வருகிறது மற்றும் கிளைமேட் கன்ட்ரோல் போன்ற முக்கியமான ஃபங்ஷன்களுக்கான பாடி கன்ட்ரோல்களும் உள்ளன.
கீழ் சென்டர் கன்சோல் பகுதியில் வயர்லெஸ் ஃபோன் சார்ஜருக்கான இடம் மற்றும் பெரிய ஸ்டோரேஜ் இடம் ஆகியவை உள்ளன.
கியா EV4: ஆன்போர்டு வசதிகள்
வழக்கமான கியா பாணியில் EV4 வசதிகளுக்கு எந்த குறையும் இல்லை. மேற்கூறிய ஸ்கிரீன்கள், வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, டூயல்-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், ஆம்பியன்ட் லைட்ஸ், 8-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், ரிலாக்சேஷன் வசதியுடன் இயங்கும் முன் இருக்கைகள், சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள் மற்றும் மழையை உணரும் வைப்பர்கள் ஆகியவையும் இதில் உள்ளன.
பாதுகாப்புக்காக மல்டி ஏர்பேக்குகள், EBD உடன் ABS, முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை உள்ளன.
இதில் நவீன இவி -களில் இருப்பதை போன்றே வெஹிகிள் டூ லோட் (V2L) மற்றும் வெஹிகிள் டூ வெஹிகிள் (V2V) போன்ற வசதிகள் உள்ளன. மேலும் கியா ஒரு படி மேலே சென்று EV4 -யில் வெஹிகிள் டூ கிரிட் (V2G) அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மின்சாரம் தடைபடும் போது வாகனத்தின் பேட்டரி பேக்கிலிருந்து சார்ஜ் மூலம் உங்கள் வீட்டில் உள்ள அடிப்படை வீட்டு உபயோகப் பொருட்களுக்கு சக்தி அளிக்கலாம்.
கியா EV4: பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
கியா EV4 -யில் இரண்டு பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் உள்ளன. இரண்டும் மாறுபட்ட பேட்டரி பேக் ஆப்ஷன்களை கொண்டுள்ளன. இது ஒரே எலக்ட்ரிக்-மோட்டருடன் வருகிறது. விரிவான விவரங்கள் கீழே உள்ளன:
அளவுகள் |
கியா EV4 பேஸ் |
கியா EV4 டாப் |
பவர் (PS) |
204 PS |
|
பேட்டரி பேக் |
58.3 kWh |
81.4 kWh |
WLTP கிளைம்டு ரேஞ்ச் |
430 கி.மீ வரை |
630 கி.மீ வரை |
10 - 80 சதவீதம் ஃபாஸ்ட் சார்ஜிங் நேரம் |
29 நிமிடங்கள்* |
31 நிமிடங்கள்* |
0-100 கிமீ/மணி நேரம் |
7.4 வினாடிகள் |
7.7 வினாடிகள் |
* ஃபாஸ்ட் சார்ஜிங் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை
கியா EV4: இந்தியா வெளியீடு உறுதி செய்யப்பட்டது
இப்போது EV4 -யை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான எந்த திட்டத்தையும் கியா அறிவிக்கவில்லை. இருப்பினும் இந்த பெயரை இந்தியாவில் கியா நிறுவனம் டிரேட்மார்க் செய்துள்ளது. இந்தியாவில் ஏற்கனவே அதிக பிரீமியமான கியா EV6 மற்றும் கியா EV9 கார்கள் விற்பனையில் உள்ளன. ஆகவே அதை வைத்து பார்க்கையில் இந்தியாவில் இது எதிர்காலத்தில் அறிமுகம் செய்யபடுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளன.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.