இந்த ஏப்ரலில் Toyota Kia Honda மற்றும் பிற கார்களின் விலை உயரவுள்ளது
published on மார்ச் 29, 2024 06:13 pm by rohit
- 60 Views
- ஒரு கருத்தை எழுதுக
அதிகரித்து வரும் தயாரிப்பு செலவுகள் மற்றும் செயல்பாட்டுச் செலவுகள் ஆகியவை விலை மாற்றத்துக்கு பின்னால் உள்ள முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
வாகனத் துறையின் விதிமுறைப்படி ஆண்டு முழுவதும் சில சுற்று விலை உயர்வுகள் தவிர்க்க முடியாதவை. வழக்கமாக புதிய காலண்டர் மற்றும் நிதியாண்டுகளின் தொடக்கத்தில் முதல் இரண்டு விலையில் மற்றங்கள் வரும். இப்போது வரவிருக்கும் நிதியாண்டில் (FY) 24-25 உட்பட பல கார் தயாரிப்பாளர்கள் டொயோட்டா அவர்களின் இந்திய வரிசையில் மாடல்களின் விலை உயர்த்துவதற்கான திட்டங்களை அறிவித்துள்ளனர்.
டொயோட்டா
டொயோட்டா ஒரு சில மாடல்களின் சில வேரியன்ட்களுக்கான விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. விலை ஒரு சதவீதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதிகரித்து வரும் தயாரிப்பு செலவுகள் மற்றும் செயல்பாட்டுச் செலவுகள் காரணமாக ஏப்ரல் 1 முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என டொயோட்டா தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தற்போது டொயோட்டா ரூ.6.86 லட்சம் முதல் ரூ.2.10 கோடி வரையிலான 10 மாடல்களை விற்பனை செய்து வருகின்றது.
கியா
கியா நிறுவனமும் விலையை உயர்த்துவதாக சமீபத்தில் அறிவித்துள்ளது. சோனெட், செல்டாஸ் மற்றும் கேரன்ஸ் ஆகிய கார்களின் விலை மூன்று சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும். அதிகரித்து வரும் பொருட்களின் விலை தயாரிப்பு செலவுகள் மற்றும் விநியோகச் சங்கிலி தொடர்பான உள்ளீடுகள் ஆகியவை விலை உயர்வுக்கான காரணங்களாக கியா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது
கியா நிறுவனம் தற்போது இந்தியாவில் முழுமையாக இறக்குமதி செய்யப்பட்ட EV6 உட்பட நான்கு மாடல்களை விற்பனையில் செய்கின்றது. இதன் விலை ரூ.7.99 லட்சம் முதல் ரூ.65.95 லட்சம் வரை உள்ளது.
மேலும் பார்க்க: பாருங்கள்: கியா EV9 எலக்ட்ரிக் எஸ்யூவியின் விலை கிட்டத்தட்ட ரூ. 1 கோடியாக இருப்பதற்கான 5 காரணங்கள்
ஹோண்டா
விலை உயர்வு பற்றிய சரியான விவரங்களை அதிகாரப்பூர்வமாக ஹோண்டா இன்னும் வெளியிடவில்லை. என்றாலும் கூட ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனம் அதன் மாடல்களின் விலையை உயர்த்தும் என்று பல ஆன்லைன் அறிக்கைகள் தெரிவித்துள்ளன. இந்தியாவில் போர்ட்ஃபோலியோவில் உள்ள மூன்று மாடல்களும் அதாவது அமேஸ், சிட்டி (மற்றும் சிட்டி ஹைப்ரிட்) மற்றும் எலிவேட் ஆகியவற்றின் விலை உயரும்.
ஹோண்டாவின் இந்திய போர்ட்ஃபோலியோ -வில் உள்ள கார்களின் விலை தற்போது ரூ.7.16 லட்சம் முதல் ரூ.20.39 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மாருதி, ஹூண்டாய், டாடா மற்றும் மஹிந்திரா உள்ளிட்ட பிற கார் தயாரிப்பாளர்கள் இன்னும் விலை உயர்வை அறிவிக்கவில்லை என்றாலும் விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கூடுதலான அப்டேட்களுக்கு கார்தேக்கோ உடன் இணைந்திருங்கள்.
குறிப்பிடப்பட்டுள்ள விலை விவரங்கள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா -வுக்கானவை ஆகும்.