ரூ.1.04 கோடியில் பனமேரா டீசல் பதிப்பை, போர்ஸ் இந்தியா அறிமுகம் செய்தது
published on ஜனவரி 22, 2016 09:42 am by raunak for போர்ஸ்சி பனாமிரா 2017-2021
- 24 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஒரு புதிய பனமேரா டீசல் பதிப்பை நம் நாட்டில் ரூ.1,04,16,000 (எக்ஸ்-ஷோரூம் மகாராஷ்டிரா) விலையில், போர்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த வாகனத்தின் உள்புறம் மற்றும் வெளிபுறத்தில் பல புதிய தரமான அம்சங்களின் ஒரு தொகுப்பை பெற்று, 250 hp 3.0l V6 டீசலை தாங்கி வருகிறது.
இந்த நவீன பனமேரா மாடல் வகையின் அறிமுகத்தை குறித்து கருத்து தெரிவித்த போர்ஸ் இந்தியாவின் இயக்குனர் பவன் ஷெட்டி கூறுகையில், “விறுவிறுப்பை அளிக்கும் நான்கு-டோரை கொண்ட ஸ்போர்ட்ஸ் காரான இந்த பனமேரா டீசல் பதிப்பு, ஓட்டுவதற்கு அளவற்ற குதூகலத்தை அளிப்பதோடு, ஸ்டைலான அசென்ட்களை கொண்டு, போர்ஸிடம் இருந்து வெளிவரும் மாதிரித் தன்மையுள்ள ஒரு சிறப்பு மாடல் ஆகும். தரமான கூடுதல் உபகரணங்களின் ஒரு குவியலை அளித்து, இந்த பிரிமியம் மாடலை எங்கள் ஆர்வலர்களிடையே ஒரு உண்மையான கவர்ச்சி மிகுந்த தயாரிப்பாக மாற்றியுள்ளோம்.” என்றார்.
வெளிபுற அமைப்பியலில் இருந்து துவங்குவோம். இதில் தேர்விற்குரிய போர்ஸ் என்ட்ரி & டிரைவ் ஆகியவை உடன் அதிக பளபளப்பான கருப்பு டிரிம் ஸ்ட்ரிப்கள், அதே நிறத்தில் அமைந்த டோர் ஹேண்டில்கள் மற்றும் பக்கவாட்டு விண்டோக்களில் காணப்படுகின்றது. பனமேரா டர்போ II டிசைனில் தரமான 19-இன்ச் அலாய் வீல்களை கொண்டு, வீல் ஹப் கவர்கள் உடன் ஒரு நிறமிகுந்த போர்ஸ் கிரிஸ்ட் ஆகியவை இதில் உட்படுகின்றன. இதில் தரமான பை-ஸீனன் ஹெட்லெம்ப்கள் உடன் போர்ஸ் டைனாமிக் லைட் சிஸ்டமும் (PDLS) காணப்படுகிறது.
உட்புற அமைப்பியலுக்கு வந்தால், இந்த பனமேரா பதிப்பில் கருப்பு-லூக்சர் பழுப்பு என்ற இரு நிற பரப்பில் பாதி லேதரால் அமைந்த அப்ஹோல்ஸ்டரியை கொண்டு, இதனுடன் எல்லா ஹெட்ரேஸ்ட்களிலும் புடைத்து நிற்கும் போர்ஸ் கிரிஸ்ட், ஸ்போர்ட்ஸ் டிசைன் ஸ்டீயரிங் வீல் மற்றும் டோர் சில் கார்டுகள் உடன் “பதிப்பு” எழுத்துக்கள் ஆகியவற்றை காண முடிகிறது. தரமான போர்ஸ் கம்யூனிகேஷன் மேனேஜ்மெண்ட் (PCM) சிஸ்டம் உடன் ஆடியோ, நேவிகேஷன் மற்றும் தொடர்பு அம்சங்களை உட்படுத்திய ஒரு 7-இன்ச் டச்ஸ்கிரீன் மானிட்டரை கொண்டுள்ளது. இந்த ஆடியோ சிஸ்டத்திற்கு, 14 ஸ்பீக்கர்களுடன் கூடிய ஒரு 585-வாட்ஸ் போஸ்® சரவுண்டு சவுண்டு சிஸ்டம் ஆற்றலை அளிக்கிறது.
இது தவிர பனமேரா டீசலில், அடாப்டிவ் ஏர் சஸ்பென்ஸன் உடன் கூடிய போர்ஸ் ஆக்டிவ் சஸ்பென்ஸன் மேனேஜ்மெண்ட் (PASM), ரிவர்ஸிங் கேமரா, எலக்ட்ரிக் ஸ்லைடு மற்றும் டில்ட் சன்ரூஃப், 4-ஸோன் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் பலவற்றை கொண்ட பார்க் அசிஸ்ட் (முன்பக்கம் மற்றும் பின்பக்கம்) போன்ற தரமான அம்சங்களை கூடுதலாக பெற்றுள்ளது.
மேலும் வாசிக்க அடுத்து தலைமுறை போர்ஸ் பாக்ஸ்டர் மற்றும் கேமேன் ஆகியவை 718 டேக் பெறுகின்றன
0 out of 0 found this helpful