2015 பிராங்பேர்ட் மோட்டார் ஷோவில், முதல் முறையாக ஆல்-எலக்ட்ரிக் சேடனான மிஷன்- E-யை போர்ஸ் காட்சிக்கு வைக்கிறது

published on செப் 16, 2015 02:37 pm by raunak

  • 11 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இது 15 நிமிடங்களில் 80 சதவீதம் ஆற்றலை திரும்ப பெற்று, டெஸ்லா மாடலான S-யை விட வேகமாக பயணித்து, 500 கி.மீ. தொலைவையும் கடக்கும் திறனோடு, 600+hp ஆற்றலையும் கொண்டுள்ளது. இது போர்ஸிடம் இருந்து வருவதால், நுஹ்ர்பர்கிரிங் லேப் டைமிங் காணப்படும். இதன்படி 8 நிமிடங்களுக்குள் மிஷன்- E, நார்த் லூப்பை அடையும் என்று அந்நிறுவனம் உறுதி அளிக்கிறது.

எதிர்காலத்திற்குரிய ஆல்-எலக்ட்ரிக் தொழில்நுட்பத்துடன் கூடிய சேடனை, தற்போது நடந்து வரும் 2015 பிராங்பேர்ட் மோட்டார் ஷோவில், போர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஜெர்மன் வாகன தயாரிப்பாளரின் மூலம் நவீன எலக்ட்ரிக் தொழில்நுட்ப அம்சங்களுடன், எல்லா கோணங்களிலும் போர்ஸ் நிறுவனத்தின் வடிவமைப்பு திறனை பெற்றுள்ள இந்த காரில், டெஸ்லா மாடல் S கில்லரின் ஜாடை தெரிகிறது. இது போர்ஸ் நிறுவனம் வெளியிடும் முதல் ஆல்-எலக்ட்ரிக், ஆல்-வீல்-டிரைவ், ஆல்-வீல்-ஸ்டீயரிங் சேடன் ஆகும். இப்போதைக்கு இதன் தயாரிப்பு திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாத நிலையில், இந்த பவர்ட்ரெயினை எதிர்காலத்திற்கான பனாமிராவாக, போர்ஸ் நிறுவனம் வைத்திருக்கலாம் என்று தெரிகிறது.

பவர்ட்ரெயின்

இதில் இரண்டு நிலையான கிளர்வுற்ற ஒத்திசைவு (பெர்மெண்ட்லி எக்ஸிடேட் சின்கோநேவஸ் - PSM) மோட்டார்கள் உடன் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் அமைப்பு உள்ளது. மோட்டார்களின் ஒருங்கிணைந்த வெளியீடு 600 hp-க்கும் அதிகமான ஆற்றலை மிஷன் E-க்கு அளித்து, 3.5 விநாடிகளில் மணிக்கு 0 – 100 கி.மீ வேகத்தை எட்டி விடுகிறது. 12 விநாடிகளுக்குள் மணிக்கு 200 கி.மீ வேகத்தையும் அடைகிறது. (டெஸ்லா மாடல் S – அதிக ஆற்றல் மற்றும் வேகம் கொண்டது)

இக்கால எலக்ட்ரிக் ட்ரைவ் ட்ரெயின்கள், குறுகிய இடைவேளைகளில் பல முறை முடுக்கம் (ஆக்ஸிலரேஷன்) அளித்தால் மட்டுமே முழுஆற்றலை அளிப்பது போல இல்லாமல், இதில் ஆற்றல் அடர்த்தி மற்றும் வெளியீடு ஆகியவை ஒருங்கே அமைந்திருக்கும் என்று போர்ஸ் நிறுவனம் தெரிவிக்கிறது. டெஸ்லா மாடல் S டூவல் மோட்டார் பதிப்பை போலவே, மிஷன்- E-லும் ஒரு ஆல்-வீல்-டிரைவ் காணப்பட்டு, போர்ஸின் டார்க் வெக்டரிங் அமைப்பின் மூலம் ஒவ்வொரு வீல்களுக்கும் தானாகவே முடுக்குவிசை பகிர்ந்து அளிக்கப்படுகிறது. இதில் உள்ள ஆல்-வீல் ஸ்டீயரிங் துல்லியமானதாகவும், விரும்பிய திசைக்கு ஏற்ப ஸ்போர்ட்டி ஸ்டீயரிங்கையும் கொண்டுள்ளது.

ரேன்ஞ் மற்றும் சார்ஜிங்

மிஷன் E-னை ஒரு முறை சார்ஜ் செய்தால், 500 கி.மீட்டருக்கு மேல் பயணிக்க முடியும் என்று போர்ஸ் நிறுவனம் கூறுகிறது. 15 நிமிடங்களுக்கு குறைவாக ஓட்டும் போதே, சுமார் 400 கி.மீ. ஓட்டுவதற்கு போதுமான ஆற்றலை, அதிலிருந்து திரும்ப பெற்றுக் கொள்ளும் என்பது ஒரு சுவாரசியமான செய்தி ஆகும். தற்போதைய எலக்ட்ரிக் வாகனங்கள் 400 வோல்ட் திறனில் ஓடி வரும் நிலையில், உலகிலேயே முதல் முறையாக 800 வோல்ட் திறனில் ஓடும் முதல் எலக்ட்ரிக் வாகனம் இதுவே ஆகும். போர்ஸ் டர்போ சார்ஜிங் சிஸ்டம் மூலம் 800-வோல்ட் போர்ட், சாதனை நிகழ்த்தும் வகையில் 15 நிமிடங்களில் சுமார் 80 சதவீதம் பேட்டரி சார்ஜாகிவிடுவது, ஒரு கூடுதல் சார்ஜிங் அம்சமாகும். 800 வோல்ட் சார்ஜிங் தவிர, இதை 400-வோல்ட் விரைவு சார்ஜிங் ஸ்டேஷன் மற்றும் கேரேஜில் வயர்லெஸ் முறையில் இன்டெக்டீவ் சார்ஜிங் மூலமும் சார்ஜ் செய்ய முடியும்.

வடிவமைப்பு மற்றும் உட்புற அமைப்பு

இதுவரை வெளியான பல போர்ஸ் வாகனங்களின் ஒரு கூட்டு கலவையாக தெரியும் இந்த வாகனம், இது ஒரு போர்ஸ் வடிவமைப்பு என்பதை வெளிப்படுத்துகிறது. போர்ஸின் குறிப்பிடத்தக்க 4-பாயிண்ட் லைட் டிசைனில், புதிய மேட்ரிக்ஸ் LED ஹெட்லைட்கள் அமைப்பு காணப்படுகிறது. மேலும், அலுமினியம், ஸ்டீல் மற்றும் கார்பன் ஃபைபர் மூலம் வலுப்படுத்தப்பட்ட பாலிமர் ஆகியவற்றால் இது செயல்பாட்டிற்கு தகுந்தாற் போல அமைக்கப்பட்டிருப்பதால், மிகவும் எடை குறைவான பாடியை பெற்றுள்ளது. கார்பனால் உருவாக்கப்பட்ட வீல்களை பெற்றுள்ள மிஷன்- E-யின் முன்புறம் 21 இன்ச் வீல்களும், பின்புறத்தில் 22 இன்ச் வீல்களும் கொண்டுள்ளது.

உட்புற அமைப்பை பொறுத்த வரை, நான்கு தனிப்பட்ட சீட்கள் காணப்படுகின்றன. டேஸ்போர்ட்டில் எந்தொரு பட்டன்களும் இல்லை என்றே கூறலாம். குறிப்பிடத்தக்க போர்ஸ் இன்ஸ்ட்ரூமென்டேஷன் கிளெஸ்டர் உடன் ஒரு OLED ஸ்கிரீன்களின் வரிசை காணப்படுகிறது. ஆனால் அவை டிஜிட்டல் அமைப்பைக் கொண்டுள்ளது.

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingகார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience