போர்ஷ் நிறுவனத்தின் அடுத்த ஜெனரேஷன் பாக்ஸ்டெர்: 718 பாக்ஸ்டெர் என்ற பெயரில் அறிமுகம்
modified on ஜனவரி 27, 2016 06:34 pm by raunak for போர்ஸ்சி பாக்ஸ்டர்
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
புதிய பிளாட்-4 டர்போ சார்ஜ்ட் பாக்ஸர் மோட்டார் மூலம், புதிய 2016 718 பாக்ஸ்டெர் சக்தியூட்டப்படுகிறது.
உலகின் தலைசிறந்த பந்தய கார்களில் ஒன்றான பாக்ஸ்டெர் காரின், புதிய ஜெனரேஷன் மாடலை போர்ஷ் நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது. அது மட்டுமல்ல, இதன் S வேரியண்ட்டிற்கு 718 பாக்ஸ்டெர் மற்றும் 718 பாக்ஸ்டெர் S என்று பெயரிட்டுள்ளது. கடந்த வருட டிசம்பர் மாதத்தில், இந்த ஜெர்மானிய கார் தயாரிப்பு நிறுவனம், தனது பாக்ஸ்டெர் மற்றும் கேமேன் என்ற இரு கார்களுடன் 718 என்ற எண்ணை இணைத்து, புதிய பெயரிட்டு அழைக்கப்போவதாக அறிவித்தது. மேலும், அவை இரண்டிலும் ஒரே ஆற்றலைக் கொண்ட, சக்திவாய்ந்த பிளாட் 4 சிலிண்டர் டர்போ பாக்ஸர் இஞ்ஜின்கள் பொருத்தப்படும் என்றும் அறிவித்திருந்தது. கடந்த 1957 –ஆம் வருடத்தில், போர்ஷ் நிறுவனத்திற்காக எண்ணிலடங்கா பந்தயங்களில் வெற்றியை பெற்றுத் தந்த, அந்நிறுவனத்தின் புகழ் பெற்ற பிளாட்-4 சிலிண்டர் (பாக்ஸர்) இஞ்ஜின் மூலம் இயங்கிய காரின் பெயரில் இருந்து, 718 என்ற எண்ணை எடுத்து, இந்த காருக்கு புதிய பெயர் சூட்டியுள்ளது. அது மட்டுமல்ல, இந்நிறுவனத்தின் பிரபலமான பந்தய கார்களின் பெயருடன், பிரபலமான எண்களை சீராக இணைத்துள்ளது. இனி, 718 பாக்ஸர், 911 கரேரா, 918 ஸ்பைடர் மற்றும் 919 ஹைபிரிட் என்ற பெயர்களில் உள்ள போர்ஷ் கார்களை நீங்கள் வாங்கலாம். தற்போது, புதிய போர்ஷ் 718 பாக்ஸ்டெர், மற்றும் 718 பாக்ஸ்டெர் S ஆகிய கார்களுக்கான முன்பதிவு இங்கிலாந்தில் தொடங்கி விட்டது. இதன் விலை £41,739.00 -யில் (சுமார் ரூ. 40 லட்சங்கள்) இருந்து தொடங்குகிறது. தற்போது முன்பதிவு தொடங்கி விட்டாலும், இந்த வருட கோடை காலத்தில்தான் இதன் முதல் பேட்ச் கார்களின் விநியோகம் ஆரம்பமாகும்.
2016 718 பாக்ஸ்டெர் மாடலின் பிரதானமான சிறப்பம்சம் எது என்று கேட்டால், இதன் புதிய 4 சிலிண்டர் மோட்டார்களைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். புதிய 2.0 லிட்டர் பிளாட் 4 சிலிண்டர் டர்போ மோட்டரின் ஆற்றலைப் பெற்று, இந்தப் புதிய 718 பாக்ஸ்டெர் கார் இயங்கும். 1,900 – 4,500 rpm என்ற அளவில் 300 hp குதிரைத் திறனையும், அதிகபட்சமாக 380 Nm டார்க்கையும், இந்த இஞ்ஜின் உற்பத்தி செய்கிறது. அதே நேரம், 718 பாக்ஸ்டெர் S வேரியண்ட்டில் இடம்பெற்றுள்ள 2.5 லிட்டர் பிளாட் 4 மோட்டார், 350 hp குதிரைத் திறன் மற்றும் அதிகபட்சமாக 420 Nm டார்க் ஆகியவற்றை, 1,900 – 4,500 rpm என்ற அளவில் உற்பத்தி செய்கிறது. முந்தைய பாக்ஸ்டெர் மாடல்களுடன் ஒப்பிடும் போது, இந்த புதிய வாகனம் அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. அது மட்டுமல்ல, இதன் எரிபொருள் திறன் கிட்டத்தட்ட 13 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க விவரமாகும். புதிய கார் சக்திவாய்ந்ததாக மட்டுமல்லாது, PDK இரட்டை கிளட்ச் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டு செயல்திறன் மிகுந்ததாகவும் திகழ்கிறது. மேலும், இதில் உள்ள ஸ்போர்ட் க்ரோனோ பேக்கேஜ்ஜைத் தேர்ந்தெடுத்தால், கிளம்பிய 4.7 வினாடிகளில் இந்த கார் 100 கிலோ மீட்டரைத் தொட்டுவிடும் செயல்திறன் கொண்டதாக விளங்குகிறது. அது போல, இதற்கு இணையான 718 பாக்ஸ்டெர் S வேரியண்ட், 4.2 வினாடிகளிலேயே 100 கிலோ மீட்டர் வேகத்தைத் தொட்டு விடுகிறது. 718 பாக்ஸ்டெர் வேரியண்ட்டின் அதிகபட்ச வேகம் மணிக்கு 275 கிலோ மீட்டர் (மணிக்கு 170 மீட்டர்) ஆகும். அதே சமயம், போர்ஷ் நிறுவனத்தின் 718 பாக்ஸ்டெர் S வேரியண்ட், அதிகபட்சமாக 285 km/h (177 mph) என்ற வேகத்தில் செல்லும் திறன் வாய்ந்தது.
இஞ்ஜின் திறன்களை மட்டும் கருத்தில் கொள்ளாது, புதிய ஜெனரேஷன் பாக்ஸ்டெரின் தோற்றத்திலும் ஒரு சில மேம்பாடுகளை போர்ஷ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. உள்ளும் புறமும் ஒரு சில மாறுதல்களைக் கொண்டிருந்தாலும், இதற்கு முன் வெளிவந்த மாடல்களின் சாயலிலேயே இவை உள்ளன. முன்புற பம்பரில் பெரிய ஏர் டேம்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், போர்ஷ் நிறுவனம் இதில் ஆப்ஷனலாக, காலையிலும் எரியும் LED 4 பாயிண்ட் ஹெட் லைட்களைத் தருகிறது. பின்புற தோற்றமும் அழகாக மறுவடிவமைக்கப்பட்டுள்ளது. இரு புறமும் உள்ள 4 பாயிண்ட் டெய்ல் லைட்களை, வித்தியாசமான கருப்பு நிற அக்செண்ட் ஸ்ட்ரிப் இணைக்கிறது. மேலும், அதன் மேல் தெளிவாக போர்ஷ் நிறுவனத்தின் சின்னம் இடம்பெறுகிறது. எனினும், உட்புற அமைப்பில் பளீரென்று தெரியும் விதத்தில் எந்த மாற்றங்களையும் பார்க்க முடியவில்லை. முந்தைய மாடலைப் போலவே, போர்ஷ் கம்யூனிக்கேஷன் மானேஜ்மென்ட் இன்ஃபோடைன்மெண்ட் அமைப்பு இதிலும் இடம் பெற்றுள்ளது.
இதையும் படியுங்கள் ரூ.1.04 கோடியில் பனமேரா டீசல் பதிப்பை, போர்ஸ் இந்தியா அறிமுகம் செய்தது
was this article helpful ?