அடுத்த ு தலைமுறை போர்ஸ் பாக்ஸ்டர் மற்றும் கேமேன் ஆகியவை 718 டேக் பெறுகின்றன
போர்ஸ்சி கேமேன் க்காக டிசம்பர் 10, 2015 06:11 pm அன்று raunak ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஸ்டூட்கார்ட் நகரை அடிப்படையாக கொண்ட ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பாளர், கடந்த 1957 ஆம் ஆண்டின் ‘718’ என்ற பெயரைக் கொண்ட தனது புகழ்பெற்ற ஸ்போர்ட்ஸ் காரின் தளத்தை உயிர்ப்பித்துள்ளது. வரும் 2016 ஆம் ஆண்டில் 718 பாக்ஸ்டர் மற்றும் 718 கேமேன் ஆகியவற்றை அறிமுகம் செய்ய உள்ளது.
அடுத்த தலைமுறை 2016 பாக்ஸ்டர் மற்றும் கேமேன் ஆகியவற்றை 718 என்ற பெயருடன் சேர்த்து – 718 பாக்ஸ்டர் மற்றும் 718 கேமேன் என்று போர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. மேற்கூறிய இரு ஸ்போர்ட்ஸ் கார்களும், சர்வதேச அளவில் தற்போதுள்ள வாகனங்களுக்கு மாற்றாக, அடுத்த ஆண்டு வெளியிடப்பட உள்ளது. இந்த புதிய பெயர் மட்டுமின்றி, அடுத்து வரவுள்ள இவ்விரு கார்களும், ‘ஒரே ஆற்றலை’ கொண்ட புதிய 4-சிலிண்டர் டர்போசார்ஜ்டு பாக்ஸர் என்ஜின்களில் இருந்து ஆற்றலைப் பெற்று இயங்கும். கடந்த 1957 ஆம் ஆண்டு போர்ஸ் நிறுவனத்திற்காக எண்ணிலடங்க ரேஸ்களில் வெற்றியை பெற்று தந்த, அந்நிறுவனத்தின் புகழ்பெற்ற பிளாட்-4 சிலிண்டர் (பாக்ஸர்) என்ஜின் மூலம் இயங்கிய காரின் பெயரில் இருந்து 718 என்ற பெயரை, போர்ஸ் நிறுவனம் எடுத்துள்ளது.
இந்த ரோடுஸ்டர் பதிப்பு, எடுத்துக்காட்டாக: பாக்ஸ்டரின் விலை ஒரு கூபேயை விட, அதாவது கேமேன் காருக்கு ஒப்பான 911 மாடல்களை விட அதிக விலையை கொண்டிருக்கும். இன்னும் வெளிவராத கேமேன் என்பது சாஃப்ட்-டாப் பாக்ஸ்டரின் ஒரு ஹார்ட்-டாப் பதிப்பு ஆகும். அதுமட்டுமின்றி 718 பாக்ஸ்டர் மற்றும் 718 கேமேன் ஆகியவை, இதுவரை இல்லாத அளவில் தோற்றம் மற்றும் இயந்திரவியல் ஆகிய இரண்டிலும் அதிக ஒற்றுமைகளோடு காட்சி அளிக்கும் என்று போர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய பிளாட்-4 ‘பாக்ஸர்’ என்ஜின்களை தவிர, லேமேன்ஸ் வின்னர் 919 ஹைபிரிடு ரேஸ் காரில் உள்ள தொழில்நுட்பமும், இந்த தயாரிப்பு-மாதிரி வாகனத்தில் இடம்பெறும் என்று போர்ஸ் சூசகமாக தெரிவித்துள்ளது. இந்த 919 ஹைபிரிடு காரில் ஒரு அதிக செயல்திறன் கொண்ட 2.0-லிட்டர் 4-சிலிண்டர் டர்போசார்ஜ்டு என்ஜின் காணப்படுகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு, 919 ஹைபிரிடு ரேஸ் கார் மூலம் லே மேன்ஸ் மற்றும் WEC (வோல்டு எண்டுரென்ஸ் சாம்பியன்ஷிப்) ஆகிய இடங்களின் பிரபலமான எண்டுரென்ஸ் ரேஸ் மூலம் தாங்கள் மீண்டும் உயர் பிரிவை எட்டியுள்ளதாக, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்