போர்ஷ் நிறுவனம் கேமன் GT4 கிளப்ஸ்போர்ட் என்ற புதிய ரேஸ் காரை அறிமுகப்படுத்தியது
published on நவ 20, 2015 06:32 pm by sumit
- 17 Views
- ஒரு கருத்தை எழுதுக
பந்தயங்களில் பங்கேற்பதற்கென்றே பிரத்தியேகமாக தயாரான கேமன் GT4 காரின் புதிய மாடலை போர்ஷ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய மாடலுக்கு கேமன் GT4 கிளப்ஸ்போர்ட் என்று பெயரிட்டுள்ளது. இந்த காரில் உள்ள இஞ்ஜின் மற்றும் ட்யூனிங்கள், பெரும்பாலும் இதற்கு முந்தைய மாடல்களை ஒத்தே உள்ளன. எனவே, புதிய கிளப்ஸ்போர்ட் மாடலும் அதே 3.8 லிட்டர் இஞ்ஜின் கொண்டே சக்தியூட்டப்பட்டு, கேமன் GT4 காரைப் போலவே 380 bhp சக்தியை உருவாக்குகிறது. மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட சாதாரண வகை கார் போல் அல்லாமல், இந்த பந்தய கார் வகையானது போர்ஷின் பிரத்தியேக டுயல்-கிளட்ச் PDK சாதனத்துடன் இணைக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டுள்ளது. 911 GT3 கப் என்ற ரேஸ் காரிலிருந்து பெறப்பட்ட சஸ்பென்ஷன்கள் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளன. எனவே, பந்தயங்களில் பங்கேற்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ள புதிய காரின் அம்சங்களை, இந்த சஸ்பென்ஷன்கள் அருமையாக கையாளுகின்றன.
எலெக்ட்ரானிக் ஸ்டபிலிட்டி ப்ரோக்ராம் (ESP) மூலம் செயல்படும் அருமையான 380 மிமீ ஸ்டீல் டிஸ்க்குகள் ப்ரேக் அமைப்பில் பொருத்தப்பட்டுள்ளன. 4 பிஸ்டன் காலிப்பர்கள் கொண்ட பின்புற சக்கரங்களை ஒப்பீடு செய்யும் போது, 6 பிஸ்டன் காலிப்பர்கள் கொண்ட ஸ்டீல் டிஸ்க்கள் இருக்கும் முன்புற சக்கர ப்ரேக்கின் வலிமை அதிகமாக இருக்கிறது. மேலும், 12 ட்வீக்கள் இருப்பதால், இதன் ABS அமைப்பை நமது தேவைக்கேற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்ளும் வசதி உள்ளது. உட்புறத்தில், பயணிகள் இருக்கையையும் எடுத்துவிட்டு, பந்தய கார்களுக்கான ரோல் கேஜ் பொருத்தியுள்ளனர். எப்போதும் உள்ள ஓட்டுனரின் இருக்கை போல இல்லாமல், பக்கெட் சீட் பொருத்தி உள்ளதால் ஓட்டுனரின் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.
பைரெல்லி வேர்ல்டு சேலஞ், தி கான்டினேன்டல் தயார் ஸ்போர்ட்ஸ்கார் சேலஞ் மற்றும் போர்ஷ் கிளப் ஆஃப் அமெரிக்கா நடத்தும் பலவிதமான கிளப் ரேஸ்கள் உட்பட உலகமெங்கிலும் நடக்கும் பந்தய கார்களுக்கான ரேசிங் சாம்பியன்ஷிப்களில் பங்கேற்க இந்த காரை பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக போர்ஷ் நிறுவனம் கூறுகிறது.
இதையும் படியுங்கள் : 2016 போர்ஷே 911 காரிரா காரைப் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டது !
0 out of 0 found this helpful