• English
  • Login / Register

போலோ ஜிடிஐ (Gti) இந்திய சாலைகளில் சோதனை ஓட்டத்தின் போது தென்பட்டது. அறிமுக தினத்தைப் பற்றிய எந்த அறிவிப்பும் இல்லை

published on ஆகஸ்ட் 13, 2015 10:54 am by nabeel for வோல்க்ஸ்வேகன் போலோ 2015-2019

  • 13 Views
  • ஒரு கருத்தை எழுதுக

வோல்க்ஸ்வேகன் நிறுவனம் தனது புதிய போலோ ஜிடிஐ கார்களை இந்திய வாடிக்கையாளர்களுக்கு சரிவர காட்டாமல் அவர்களின் ஆவலை தூண்டுகிறது என்றே சொல்ல வேண்டும். இந்தியாவின் பல்வேறு வகையான சாலைகளில் சோதனை ஓட்டத்தில் இந்த கார்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. என்றாலும் இந்த கார்களின் அறிமுகதைப்பற்றிய எந்த விதமான அதிகார பூர்வ தகவலையும் இந்த ஜெர்மன் கார் தயாரிப்பாளர்கள் இன்னும் வெளியிடவில்லை. . இந்த கார் அறிமுகமாகும் போது இந்த ஹாட்ச் பேக் (சிறிய ரக கார்கள்)பிரிவிலேயே வேகமானதாக இந்த கார் இருக்கும் என்று சொல்லலாம். அபர்த் பண்டோ ஈவோ கார்களை இந்த போலோ ஜிடிஐ பின்னுக்கு தள்ளிவிடும் என்றே தோன்றுகிறது. . இந்த காரில் பெரும் சக்தி கொண்ட 1.8 லிட்டர் EA888 டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் இஞ்சின்கள் பொருதப்பட்டுள்ளன என்பது முக்கியமான சிறப்பம்சமாகும். இந்த வகை எஞ்சின்கள் இந்தியாவில் அறிமுகமாகியுள்ள ஆடி Q3 மற்றும் ஸ்கோடா ஆக்டேவியா கார்களில் மற்றுமே தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த எஞ்சின்கள் கைகளால் இயக்கக்கூடிய (மேனுவல்)ஆறு கியர் அமைப்புடன் இணைக்கப்படும் போது 190 பிஎச்பி என்கிற அளவுக்கு வேக சக்தியையும் 320nm என்ற அளவுக்கு மாபெரும் முறுக்கு விசையும் தரவல்லது. அதுவே இந்த எஞ்சின்கள் தானியங்கி 7 கியர் DSG அமைப்புடன் இணைக்கப்படும் போது 250 nm என்ற அளவுக்கு முறுக்கு விசையை வெளிப்படுத்துகிறது.. இந்த பேராற்றல் மிக்க என்ஜின் அமைப்பினால் மணிக்கு 0 – 100 கி.மீ. வேகத்தை வெறும் 7 நொடிகளிலேயே அடைந்து நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்துகிறது. அதுமட்டுமின்றி அதிகபட்சமாக மணிக்கு 230 கி மீ வேகத்தாயும் எட்டுகிறது..

பெரிய அல்லாய் சக்கரங்கள் நன்கு அழுத்தமாக அமைக்கப்பட்ட முன் மற்றும் பின்புற பம்பர்கள், தனித்துவமான பக்கவாட்டு வளைவுகள் மற்றும் முன்புற ஹனிகோம்ப் க்ரில்கள் என முந்தைய போலோ கார்களில் இருந்து இந்த புதிய போலோ ஜிடிஐ கார்கள் சற்று வேறுபட்டு காணப்படுகின்றன. நீங்கள் ஒரு கார் பித்தராக இருந்தால் மட்டுமே வடிவமைப்பில் உள்ள மாற்றங்களை எளிதில் கண்டுபிடிக்க இயலும். ஆகவே கவலை கொள்ள வேண்டாம். இதைதவிர இந்த போலோ ஜிடிஐ கார்கள் பெருமிதத்துடன் ஜிடிஐ முத்திரையை தனது முன்புற க்ரில் மற்றும் பூட் லிட் பகுதியிலும் அணிந்துள்ளன. உட்புறத்திளும் சில மாற்றங்களை பார்க்க முடிகிறது. வோல்க்ஸ்வேகன் ஜிடிஐ வகை கார்களில் பயன்படுத்தப்படும் ஸ்டீரிங் வீல் இந்த கார்களிலும் பயன் படுத்தப்பட்டு உள்ளது. பந்தய கார்களில் உள்ளதை போன்ற இருக்கைகள் (ஸ்போர்ட் பக்கெட் சீட்) மற்றும் அலுமினியம் பெடல்களும் பொருத்தப்படுள்ளது..

சார் அறிமுகமாவதை பற்றிய எந்த விதமான அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவராத நிலையில் தீபாவளி சமயத்தில் அறிமுகம் ஆகலாம் என்ற யூகங்கள் உலவுகின்றன.. ஒரு சில தீவிரமான கார் ஆர்வலர்களைத் தவிர மற்ற பெரும்பான்மையான இந்திய வாடிக்கையாளர்களை இந்த கார் அதிகமாக கவராது என்றே சொல்லலாம். காரணம், முழுமையாக வெளிநாட்டில் தயாராகி இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்பட்டு (CBU) முறையில் விற்பனைக்கு வர உள்ளதால் விலையும் சற்று கூடுதலாக

18 – 20 லட்சம் வரை விலை நிர்ணயிக்கப்படும் என்று அறியப்படுகிறது. 

வெளியிட்டவர்
was this article helpful ?

Write your Comment on Volkswagen போலோ 2015-2019

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending ஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • பிஒய்டி seagull
    பிஒய்டி seagull
    Rs.10 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • நிசான் லீஃப்
    நிசான் லீஃப்
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • ரெனால்ட் க்விட் இவி
    ரெனால்ட் க்விட் இவி
    Rs.5 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மாருதி எக்ஸ்எல் 5
    மாருதி எக்ஸ்எல் 5
    Rs.5 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி 3
    எம்ஜி 3
    Rs.6 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience