இந்தியாவிற்கு வெறும் டீசல் ப்ரீஸா மட்டும் தானா ?
published on ஜனவரி 28, 2016 03:38 pm by sumit for மாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020
- 11 Views
- ஒரு கருத்தை எழுதுக
காம்பேக்ட் SUV பிரிவில் தனது விடாரா ப்ரீஸா மூலம் கால் பதிக்க மாருதி சுசுகி நிறுவனம் தயாராக உள்ளது. இந்த இந்தோ - ஜப்பானிய கூட்டு கார் தயாரிப்பு நிறுவனம் , காம்பேக்ட் SUV பிரிவில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் போர்ட் ஈகோஸ்போர்ட் மற்றும் ஹயுண்டாய் க்ரேடா கார்களுடன் மோத தயாராக உள்ளது. ET ஆட்டோ வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவில் வெறும் டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட வெர்ஷன் மட்டும் தான் விற்பனைக்கு வெளியிடப்படும் என்றும் பெட்ரோல் வெர்ஷன் வாகனங்கள் துவக்கத்தில் ஏற்றுமதிக்காக மட்டும் தயாரிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த விடாரா ப்ரீஸா கார்களின் டீஸர்களை வெளியிட்டு கார் ஆர்வலர்கள் மத்தியில் பெரிய பரபரப்பை மாருதி சுசுகி நிறுவனம் ஏற்படுத்தி உள்ளது. இந்த புதிய ப்ரீஸா கார்களில் பகலிலும் ஒளிரும் (DRL) LED பொருத்தப்பட்ட முகப்பு விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. இது காம்பேக்ட் SUV பிரிவில் வேறு எந்த கார்களிலும் இல்லாத அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது. TUV 300 மற்றும் ஈகோஸ்போர்ட் கார்களுடன் இந்த ப்ரீஸா போட்டியிடும் என்று தெரிகிறது. TUV மற்றும் ஈகோஸ்போர்ட் ஆகிய இரண்டு கார்ளுமே இந்தியா முழுக்க அமோகமாக விற்பனை ஆகி வரும் வாகனங்கள் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
மாருதியின் ஹேட்ச்பேக் பிரிவு காரான ஸ்விப்ட் கார்களில் பயன்படுத்தப்பட்டு வரும் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் தான் இந்த புதிய விடாரா ப்ரீஸா கார்களிலும் பொருத்தப்படும் என்று தெரியவந்துள்ளது. 74Bhp அளவு சக்தியையும் ,அதிகபட்சமாக 190nm அளவுக்கான டார்க்கையும் ஸ்விப்ட் கார்களில் இந்த என்ஜின் உற்பத்தி செய்கிறது. ஏற்றுமதிக்காக மட்டும் தயாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் பெட்ரோல் வேரியன்ட்கள் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் மூலம் சக்தியூட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாதம் ஒன்றுக்கு 10,000 ப்ரீஸா வாகனங்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்று மாருதி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அடுத்த மாதம் நடக்க உள்ள 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய விடாரா ப்ரீஸா கார்களை மாருதி சுசுகி நிறுவனம் காட்சிக்கு வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை 6 – 9 லட்சங்கள் வரை இருக்கலாம் என்றும் யூகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் வாசிக்க
0 out of 0 found this helpful