• English
    • Login / Register

    இதுவரை 70,000 பலேனோ புக்கிங் ஆகி உள்ளது. புக்கிங் செய்து விட்டு காத்திருக்கும் காலம் 6 - மாதங்கள் அளவுக்கு அதிகரித்துள்ளது.

    cardekho ஆல் ஜனவரி 27, 2016 02:42 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது

    20 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    பலேனோ கார்கள் பெற்றுள்ள இந்த அசாத்திய வரவேற்பின் காரணமாக  வரும் ஆட்டோ எக்ஸ்போ 2016ல்  டாப் -எண்டு மாருதி பலேனோ  RS  வெர்ஷனை  மாருதி  வெளியிட உள்ளது. 

    மாருதி சுசுகி நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடான பலேனோ கார்கள் , இந்நிறுவனத்தின் ஒரு மிகப்பெரிய வெற்றி படைப்பாக அமைந்துள்ளது.  விற்பனைக்கு வந்த நான்கே மாதங்களில் வாடிக்கையாளர்களை பரவசப்படுத்தி இன்று வரை 70,000  கார்கள் புக்கிங் ஆகியுள்ளன.  இந்த பிரிவில் முதல் இடத்தில இருந்த  i20  கார்களையும் , ஹோண்டா ஜாஸ் கார்களையும் பின்னுக்கு தள்ளி கடந்த டிசம்பரில் விற்பனையில் முதல் இடத்தைப் பிடித்தது.  கடந்த மாதம் 11,203 பலேனோ கார்களை தயாரித்து 10,572  கார்களை  விற்பனை செய்து உள்ளது. இதை  விட குறைவான எண்ணிக்கையிலேயே i20  (10,379)  கார்கள் விற்பனை ஆகி உள்ளதால் பலேனோ முதல் இடத்தைப் பிடித்தது. 

    பலேனோ கார்களுக்கு இத்தகைய அமோக வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்காத மாருதி நிறுவனம் ,  தங்களது உற்பத்தி பிரிவு பணியாளர்களிடம் பலேநோவின் உற்பத்தியை அதிகரிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இன்னும் சில காலங்களுக்கு  புக்கிங் செய்து விட்டு காத்திருக்கும் காலம் 6 மாதங்களாகவே இருக்கும் என்றும் தெரிய வருகிறது.

    பலேனோ கார்களுக்கு பெருகி வரும் டிமேன்ட் காரணமாக , வரும் காலங்கள் மாருதி  நிறுவனத்திற்கு சற்று கடினமானதாகவே இருக்கும் என்று தெரிகிறது. மேலும் இந்த மாத இறுதி  முதல், பலேனோ கார்களின் ஏற்றுமதியை தொடங்க  மாருதி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக பலேனோ கார்களின் தேவை மேலும் உயரும் என்றும் தெரிகிறது.   ஜப்பான் , மேற்கு ஐரோப்பிய நாடுகள் , இலத்தீன் அமெரிக்கா மற்றும் சில ஆப்ரிக்க நாடுகளுக்கு பலேனோ ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. 

    இந்த மாத துவக்கத்தில் பலேனோ கார்களின் விலையை மாருதி நிறுவனம் உயர்த்தியது. இப்போது ரூ. 5.11 லட்சம் முதல் 8.16 லட்சங்கள் (எக்ஸ் - ஷோரூம் டெல்லி )  வரை பலேனோ கார்களின் பல்வேறு வெர்ஷன்கள் விற்பனை ஆகின்றன. இந்த விலை உயர்வு, டிமேன்டை எவ்வாறு பாதிக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் . ப்ரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் மாருதி நிறுவனம் பலேனோ RS என்ற பெயரில் ஒரு டாப் - எண்டு மாடலை வரும் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்த உள்ளது. பாக்ஸ் டிப்யூசர் , பாடிகிட், சைட் ஸ்கிர்ட் மற்றும் பெரிய அல்லாய் சக்கரங்கள் இந்த பலேனோ RS கார்களில் சிற்பம்சங்கலாக சேர்க்கப்பட்டுள்ளது.

    மேலும் வாசிக்க  தனது இணையதளத்தில் விட்டாரா ப்ரீஸ்ஸாவை, மாருதி வெளியிட்டது

    was this article helpful ?

    Write your Comment on Maruti பாலினோ 2015-2022

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் ஹேட்ச்பேக் கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience