டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் போலோ GTi-யை, வோல்க்ஸ்வேகன் இந்தியா கொண்டு வருகிறது – அதிகாரபூர்வமான அறிவிப்பு!
published on ஜனவரி 29, 2016 02:00 pm by raunak
- 21 Views
- ஒரு கருத ்தை எழுதுக
இதற்கு மேல் ஒரு ஹாட் ஹேட்ச்-சிடம் இருந்து வேறு என்னத்தை நாம் எதிர்பார்ப்போம்? 3-டோர் லேஅவுட்டில் அமைந்த இதில், ஒரு 1.8-லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் மோட்டாரையும், ஒரு மேனுவல் அமைப்பிற்கான தேர்வும் கொண்டுள்ளது.
இதுவரை இல்லாமல் முதல் முறையாக கவர்ச்சிகரமான போலோ-வான போலோ GTi-யின் வெளியீட்டை குறித்து, வோல்க்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அடுத்து நடைபெற உள்ள 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த வாகனத்தை, மேற்கண்ட ஜெர்மன் வாகனத் தயாரிப்பாளர் வெளியிட உள்ள நிலையில், இந்தாண்டின் பிற்பகுதியில் இதன் அறிமுகம் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. ஆட்டோ எக்ஸ்போவில் ஊடகங்களுக்கான இரண்டாவது நாளான 2016 பிப்ரவரி 4 ஆம் தேதியன்று, இவ்வாகனம் வெளியிடப்பட உள்ளது. ஹாட் ஹேட்ச்களை குறித்து பார்த்தால், ஃபியட் இந்தியா நிறுவனம் மூலம் முதல் முறையாக கடும் போட்டியாளர் என்ற வகையில் அபார்த் புண்டோ, இந்தாண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இது உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்டு, 145 குதிரை சக்தியை வெளியிட்டது! மற்றொருபுறம் வோல்க்ஸ்வேகன் போலோ GTi, துவக்க நிலையில் உள்ளூரிலேயே அசம்பிள் செய்யப்படுவதை விட, ஒரு CBU (முழுமையான கட்டமைப்புக் கொண்ட தயாரிப்பு - கம்ப்ளிட்டிலி பில்டு யூனிட்) என்ற முறையில் தான் கொண்டு வரப்படலாம் என்று தெரிகிறது.
தற்போது பயன்பாட்டில் உள்ள போலோ-வில் இருந்து, போலோ GT-யை வேறுபடுத்தும் வகையில், நம் நாட்டிற்கு மூன்று டோர் கொண்ட உருவிலான GTi கொண்டு வரப்படும் என்று வோல்க்ஸ்வேகன் நிறுவனம் உறுதி அளித்துள்ளது. மேலும் அதன் முன்பகுதியில் LED ஹெட்லைட்களுடன் கூடிய LED டேடைம் ரன்னிங் லைட்கள் மற்றும் ஒரு ஸ்போர்ட்டியர் பம்பர் ஆகியவற்றை கொண்டிருக்கும். இதன் பின்புறத்தில் LED டெயில்லெம்ப்கள் மற்றும் இரட்டை எக்சாஸ்ட் வெளியீடுகள் ஆகியவற்றை பெற்றுள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள போலோவின் டேஸ்போர்டை, GTi-க்காக ஒரு சிறிய அளவில் நேர்த்தியானதாக மாற்றப்பட்டுள்ளதோடு, அதில் ஸ்போர்ட்ஸ் சீட்களை கொண்டு, GTi பிளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீல் மற்றும் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் கூகுல் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆகிய அம்சங்களை கொண்ட ஒரு 6.5-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகியவை உடன் மற்றும் பல அம்சங்களை கொண்டுள்ளது.
போலோவின் முக்கியத்துவமே, அதில் காணப்படும் வோல்க்ஸ்வேகனின் 1.8-லிட்டர் TSi டர்போசார்ஜ்டு பெட்ரோல் மோட்டார் தான்! இந்த என்ஜின் ஒரு 6-ஸ்பீடு MT உடன் பொருத்தப்படும் போது 192 PS என்ற மகத்தான ஆற்றலையும், 320 Nm என்ற அதிகபட்ச முடுக்குவிசையையும் அளிக்கிறது. 7-ஸ்பீடு DSG இரட்டை-கிளெச் ஆட்டோமேட்டிக் உடன் பொருத்தப்பட்டால் 250 Nm-யை வெளியிடுகிறது. மேற்கூறிய 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு DSG ஆகிய இரண்டு வகையிலும் GTi கிடைக்கப் பெறும் என்பதை வோல்க்ஸ்வேகன் இந்தியா உறுதி செய்துள்ளது.
இதையும் படிக்கவும்