சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

ரினால்ட் CEO: கார்களைத் திரும்பப் பெற்றதன் பின்னணியில் எந்த மோசடியும் இல்லை

sumit ஆல் ஜனவரி 25, 2016 06:30 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
24 Views

Mr. Carlos Ghosn, Renault CEO

சமீபத்தில் ரினால்ட் நிறுவனம் தனது கார்களை திரும்பப் பெற்றதன் பின்னனியில், எந்த விதமான மோசடி செய்கைகளும் இடம்பெறவில்லை என்று, தற்போது இந்நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனத்தின் கார்களின் மாசு கட்டுப்பாட்டு சோதனை முடிவுகளுக்கும் தற்போது இந்த கார்கள் விளைவிக்கும் மாசுபாட்டிற்கும் வித்தியாசம் இருப்பதனால், சுமார் 15,000 வாகனங்களை பிரெஞ்சு கார் தயாரிப்பாளரான ரினால்ட் நிறுவனம் கடந்த வாரத்தில் திரும்பப் பெற்றுக் கொண்டது.

‘சுற்றுசூழலை அதிகமாக பாதிக்கும் கார்களை உருவாக்குவது எங்கள் நிறுவனத்தின் நோக்கமில்லை. மேலும், கார்களின் மாசுபாட்டைத் தடுப்பதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய கடுமையான ஐரோப்பிய சோதனைகளில் எங்கள் நிறுவனத்தின் கார்கள் வெற்றிபெறும்' என்று ரினால்ட்-நிஸ்ஸான் நிறுவனத்தின் தலைவரான கார்லோஸ் கோசன் தெரிவித்தார். சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்தின் (வேர்ல்டு எக்கனாமிக் ஃபோரம்) நடுவே, திரு. கோசன் கொடுத்த ஒரு பேட்டியின் போது, “குறுகியகால கண்ணோட்டத்தில் பார்க்கும் போது, எங்கள் நிறுவனத்தின் நன்மதிப்பை இந்த செய்தி எந்த விதத்திலும் பாதிக்காது. எங்களது திட்டங்களையும், இத்தகைய சூழ்நிலைகள் மாற்றாது,” என்று கூறினார்.

Renault Captur

ரினால்ட் நிறுவனம், தனது 15,000 கார்களை திரும்பப் பெற்றுக் கொள்ளப் போகிறது என்ற செய்தி காட்டுத் தீ போல பரவிய அடுத்த நொடியே, மக்கள் வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் ‘டீசல்கேட்' மோசடியுடன் இதை ஒப்பிட்டு பார்க்க ஆரம்பித்துவிட்டனர். எனவே, ‘ஜெர்மானிய கார் தயாரிப்பு நிறுவனத்தைப் போல, தங்களது கார்களில் எந்தவிதமான மோசடி கருவிகளும் (மென்பொருள்) பொருத்தப்படவில்லை', என்று திரு. கோசன் குறிப்பிட்டு, இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் உள்ள வேறுபாட்டைத் தெளிவு படுத்தினார். மேலும், அவர், “பொதுவாக, மக்கள் எங்களிடம் மூன்று கேள்விகளைக் கேட்கின்றனர். முதல் கேள்வி- எங்கள் கார்களுக்குள் ஏதாவது மோசடி கருவி பொருத்தப்பட்டிருக்கிறதா? இதற்கான பதில், இல்லை. இரண்டாவது கேள்வி – நாங்கள் மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றுகிறோமா? இதற்கான பதில், ஆம், நாங்கள் விதிமுறைகளை சரியாகப் பின்பற்றுகிறோம்,” என்று விரிவாகத் தெளிவு படுத்தினார்.

‘வாடிக்கையாளர்களை திருப்தி படுத்துவதே பிரெஞ்சு வாகன தயாரிப்பு நிறுவனமான ரினால்ட்டின் முக்கிய நோக்கமாகும்', என்று இவர் உறுதியளித்தார். தரத்தை சோதனையிட, தானாகவே முன்வந்துள்ள இந்நிறுவனத்தை நாம் பாராட்ட வேண்டும். “எங்களின் வாடிக்கையாளர்களின் மனதில் உள்ள குழப்பத்தைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக, எங்கள் வாகனங்களின் உண்மையான டிரைவிங் எக்ஸ்பீரியன்சை தெளிவாக விளக்குவது முக்கியமாகிறது. இதன் மூலம், தேவையில்லாத குழப்பங்களைத் தவிர்க்க முடியும்,” என்று கூறினார்.


மேலும் வாசிக்க

ரெனால்ட் க்விட் காரின் தயாரிப்பு மையமாக இந்தியா அறிவிப்பு

மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறிய 15,000-க்கும் மேற்பட்ட கார்களை, ரெனால்ட் திரும்ப அழைக்கிறது

Share via

Write your கருத்தை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
பேஸ்லிப்ட்
Rs.46.89 - 48.69 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.10 - 19.52 லட்சம்*
எலக்ட்ரிக்புதிய வேரியன்ட்
Rs.17.49 - 22.24 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.92.90 - 97.90 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை