இந்தியாவில் Nissan Magnite காரின் லோவர் வேரியன்ட்கள் ரீகால் செய்யப்பட்டுள்ளன
published on ஏப்ரல் 18, 2024 06:48 pm by rohit for நிசான் மக்னிதே 2020-2024
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
நவம்பர் 2020 மற்றும் டிசம்பர் 2023 -க்கு இடையில் தயாரிக்கப்பட்ட யூனிட்கள் ரீகால் செய்யப்பட்டுள்ளன
நிஸான் மேக்னைட் காரின் முன் கதவு கைப்பிடி சென்சார்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்தியாவில் ரீகால் செய்யப்பட்டுள்ளது. நிஸான் நிறுவனம் இந்த சிக்கல் உள்ள யூனிட்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடவில்லை என்றாலும் கூட நவம்பர் 2020 முதல் டிசம்பர் 2023 வரை தயாரிக்கப்பட்ட யூனிட்களுக்கு இந்த ரீகால் பொருந்தும் என தெரிவித்துள்ளது. டிசம்பர் 2023 -க்கு பிறகு தயாரிக்கப்பட்ட மேக்னைட்டின் யூனிட்களுக்கு ரீகால் அழைப்பு பொருந்தாது.
ரீகால் பற்றிய கூடுதல் விவரங்கள்
சப்-4m எஸ்யூவி -யின் பேஸ்-ஸ்பெக் XE மற்றும் மிட்-ஸ்பெக் XL வேரியன்ட்கள் மட்டுமே இந்த சிக்கலால் பாதிக்கப்பட்டுள்ளன. ஆகவே இவை மட்டுமே ஆய்வுக்காக மீண்டும் அழைக்கப்பட்டுள்ளன பாதிக்கப்பட்ட யூனிட்களின் உரிமையாளர்களை நிஸான் தொடர்பு கொண்டு, அவர்களின் வாகனத்தில் உள்ள பழுதடைந்த பாகங்களை எந்தவித கட்டணமும் இன்றி ஆய்வு செய்து மாற்றித்தரும். உரிமையாளர்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் மேக்னைட் எஸ்யூவியை டிரைவ் செய்யலாம் என நிஸான் தெரிவித்துள்ளது.
மேக்னைட் காரின் உரிமையாளர்கள் என்ன செய்ய வேண்டும்
நிஸான் எஸ்யூவியின் உரிமையாளர்கள் தங்கள் காரை தங்கள் அருகில் உள்ள அங்கீகாரம் பெற்ற வொர்க்ஷாப்பிற்கு எடுத்துச் செல்லலாம். அதேசமயம் நிஸான் இந்தியா இணையதளத்தில் உள்ள ‘ஓனர் விஐஎன் செக்’ பிரிவிற்கு சென்று, தங்கள் காரின் விஐஎன் (வாகன அடையாள எண்) விவரத்தை உள்ளிட்டு தங்கள் வாகனம் ரீகால் செய்யப்பட்டுள்ளதா என்பதையும் சரிபார்க்கலாம். ஏதேனும் கேள்விகள் அல்லது விவரங்கள் தேவைப்பட்டால் நிஸான் இந்தியாவின் வாடிக்கையாளர் சேவை மையத்தை 1800-209-3456 என்ற கட்டணமில்லா எண்ணில் அழைக்கலாம்.
நிஸான் நிறுவனம் ரீகால் செய்யப்பட்டுள்ள வேரியன்ட்களை அறிவித்தாலும் கூட துல்லியமான எத்தனை யூனிட்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்பதைக் குறிப்பிடவில்லை. எனவே உங்கள் வாகனம் ரீகால் செய்யப்பட்டுள்ளதா என்பதை விரைவில் தெரிந்து கொள்ளுமாறு பரிந்துரைக்கிறோம். ஆம் என்றால், உங்கள் வாகனத்தை சிறந்த ஆரோக்கியத்துடன் வைத்திருக்க எந்த தாமதமும் இன்றி அதை பரிசோதிக்கவும்.
மேலும் பார்க்க: பாருங்கள்: கோடைக்காலத்தில் உங்கள் காரில் ஏன் சரியான டயர் அழுத்தம் இருக்க வேண்டும்
மேலும் படிக்க: நிஸான் மேக்னட் AMT