• English
    • Login / Register

    இந்தியாவில் புதிய தலைமுறை Skoda Kodiaq வெளியிடப்பட்டுள்ளது

    ஸ்கோடா கொடிக் க்காக ஜனவரி 17, 2025 10:24 pm அன்று dipan ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 40 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    புதிய கோடியாக் வெளிப்புறத்தில் ஒரு வழக்கமான வடிவமைப்பை கொண்டுள்ளது. ஆனால் உட்புறத்தில் ஏராளமான டெக்னாலஜியுடன் புத்தம் புதிய டாஷ்போர்டு கொடுக்கப்பட்டுள்ளது.

    Skoda Kodiaq

    • புதிய கோடியாக் ஸ்லீக்கரான LED ஹெட்லைட்கள், புதிய 20-இன்ச் அலாய்கள் மற்றும் C-வடிவ கனெக்டட் LED டெயில் லைட்ஸ் ஆகியவற்றைப் பெறுகிறது.

    • உள்ளே இது 13-இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் முக்கியமான செயல்பாடுகளுக்கான பாடி டயல்களுடன் கூடிய புதிய டாஷ்போர்டு வடிவமைப்புடன் வருகிறது.

    • 10.25-இன்ச் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, பனோரமிக் சன்ரூஃப் மற்றும் பிராண்டட் சவுண்ட் சிஸ்டம் ஆகிய வசதிகள் உள்ளன.

    • பாதுகாப்புக்காக பல ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, TPMS மற்றும் ADAS ஆகியவை உள்ளன.

    • விலை ரூ.45 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    2024 -ல் உலகளவில் வெளியிடப்பட்ட பிறகு புதிய தலைமுறை ஸ்கோடா கோடியாக் மாடல் இந்தியாவில் இப்போது பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வு மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இப்போது அதன் இரண்டாம் தலைமுறை அவதாரத்தில், இந்தியாவில் செக் கார் தயாரிப்பாளரின் ஃபிளாக்ஷிப் எஸ்யூவி ஆனது மேம்பட்ட வெளிப்புற வடிவமைப்பு, புதிய கேபின், ஏராளமான புதிய வசதிகள் ஆகியவற்றுடன் பல பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் வருகிறது. புதிய ஸ்கோடா கோடியாக் காரில் உள்ள அனைத்தையும் பார்ப்போம்:

    வெளிப்புறம்

    2025 Skoda Kodiaq front

    வெளிப்புற வடிவமைப்பு முந்தைய காரை போல உள்ளது மற்றும் முந்தைய ஜெனரேஷன் மாடலில் இருந்து இதேபோன்ற கிரில் வடிவமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இது இப்போது மெல்லிய LED ஹெட்லைட் யூனிட்கள் மற்றும் ஹனிகோம்ப் மெஷ் வடிவமைப்புடன் வரும் புதிய வடிவிலான பம்பர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஹெட்லைட்டுக்கு கீழே இரண்டு புதிய ஏர் இன்டேக்குகள் எஸ்யூவி -க்கு முன்பை விட கூடுதலான ஆக்ரோஷமான தோற்றத்தைக் கொடுக்கின்றன.

    பக்கவாட்டில் பார்க்கும் போது 20-இன்ச் அலாய் வீல்கள் புதியவையாக தெரிகின்றன. புதிய கோடியாக்கில் ரூஃப்லைன் பின்புறத்தை நோக்கி மிகவும் குறுகலாக இருப்பது முக்கிய மாற்றம் ஆகும். இது முந்தைய ஜென் மாடலாக பிளாக் கிளாடிங் கொண்ட அதிக வட்டமான வீல் ஆர்ச்களுடன் வருகிறது.

    பின்புற வடிவமைப்பும் முன்பை விட நேர்த்தியாக சி-வடிவ கனெக்டட் டெயில் லைட்ஸ் ஸ்கோடா எழுத்துகள் கொடுக்கப்பட்டுள்ளன. பின்புற பம்பர் வடிவமைப்பும் எஸ்யூவி -யை கம்பீர தோற்றத்தை கொடுக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

    இன்ட்டீரியர்

    2025 Skoda Kodiaq cabin

    வெளிப்புற வடிவமைப்பு மாற்றங்கள் நுட்பமானவை என்றாலும், கோடியாக்கிற்கு அதிக சந்தை மற்றும் நவீன முறையீட்டை வழங்க உட்புற வடிவமைப்பு முற்றிலும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதிய தலைமுறை மாடல் லேயர்டு டேஷ்போர்டு வடிவமைப்புடன் வருகிறது மற்றும் உள்ளே சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களைப் பயன்படுத்துகிறது.

    இது ஒரு பெரிய 13-இன்ச் ஃப்ரீஸ்டாண்டிங் டச் ஸ்கிரீன் உடன் வருகிறது. ஆனால் 2-ஸ்போக் ஸ்டீயரிங் பழைய மாடலை போலவே உள்ளது. இது தற்போதைய-ஸ்பெக் ஸ்கோடா சூப்பர்ப், ஸ்கோடா குஷாக் மற்றும் ஸ்கோடா கைலாக் ஆகியவற்றிலும் உள்ளது.

    மற்றொரு பெரிய மாற்றம் என்னவென்றால், ஸ்டீயரிங் வீலுக்கு பின்னால் கியர் ஸ்டாக் இடம் பெயர்ந்துள்ளது, இது சென்டர் கன்சோலுக்கு அதிக இடத்தை அளித்துள்ளது. பிஸிக்கல் கன்ட்ரோல்களும் உள்ளன. அவற்றை வெவ்வேறு செயல்பாடுகளுக்கு பயன்படுத்தலாம் மற்றும் டாஷ்போர்டிற்கு நவீன மற்றும் உன்னதமான தோற்றத்தை கொடுக்கும்.

    வசதிகள் மற்றும் பாதுகாப்பு

    10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, பனோரமிக் சன்ரூஃப், சுற்றுப்புற லைட்ஸ், பிராண்டட் சவுண்ட் சிஸ்டம் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் ஆகிய வசதிகள் உடன் வருகிறது. இது முதல் முறையாக ஆப்ஷனலான ஹெட்-அப் டிஸ்ப்ளே (HUD) உடன் வருகிறது.

    பாதுகாப்பைப் பொறுத்தவரையில் புதிய கோடியாக் மல்டி ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் ஹில் ஹோல்ட் அசிஸ்ட் ஆகியவற்றுடன் வருகிறது. மேம்படுத்தப்பட்ட ஸ்கோடா எஸ்யூவி ஆனது ஆட்டோமெட்டுக் எமர்ஜென்ஸி பிரேக்கிங், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், பிளைண்ட் ஸ்பாட் டிடெக்‌ஷன், லேன் அசிஸ்ட் மற்றும் பார்க்கிங் அசிஸ்ட் செயல்பாடுகள் போன்ற அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) -களையும் கொண்டுள்ளது.

    பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்

    குளோபல்-ஸ்பெக் கோடியாக் நான்கு இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது.

    விவரங்கள்

    1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் மைல்ட்-ஹைப்ரிட்

    1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் பிளக்-இன் ஹைப்ரிட்

    2-லிட்டர் டர்போ-பெட்ரோல்

    2 லிட்டர் டீசல்

    பவர்

    150 PS

    204 பி.எஸ்

    204 PS/ 265 PS

    150 PS/ 193 PS

    டிரான்ஸ்மிஷன்

    7-ஸ்பீடு DCT

    6-ஸ்பீடு DCT

    7-ஸ்பீடு DCT

    7-ஸ்பீடு DCT

    டிரைவ்டிரெய்ன்

    FWD^

    FWD^

    FWD^/ AWD*

    FWD^/ AWD*

    இந்தியா-ஸ்பெக் கோடியாக்கில் இந்த பவர்டிரெய்ன் ஆப்ஷன்களில் எவை இருக்கும் என்பதை ஸ்கோடா இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும் கூட இது 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் வரலாம் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

    எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

    2025 Skoda Kodiaq rear

    புதிய ஸ்கோடா கோடியாக் காரின் விலை ரூ.45 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது டொயோட்டா ஃபார்ச்சூனர், ஜீப் மெரிடியன் மற்றும் எம்ஜி குளோஸ்டர் போன்ற முழு அளவிலான எஸ்யூவி -களுக்கு போட்டியாக இது இருக்கும்.

    ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

    was this article helpful ?

    Write your Comment on Skoda கொடிக்

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience