செக்மென்ட்- ஃபர்ஸ்ட்அம்சங்களுடன் வரப்போகும் புத ிய-தலைமுறை ஹீண்டாய் வெர்னா
published on மார்ச் 13, 2023 06:19 pm by shreyash for ஹூண்டாய் வெர்னா
- 22 Views
- ஒரு கருத்தை எழுதுக
மார்ச் மாதம் 21 ஆம் தேதியில் ஹீண்டாயின் அடுத்த-தலைமுறை காம்பாக்ட் செடான் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
-
2023 வெர்னா முதல் முறையாக வென்டிலேட் செய்யப்பட்ட மற்றும் ஹீட்டட் முன்புற இருக்கைகளைக் கொண்டுள்ளது.
-
இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் ஆட்டோ ஏசி அமைப்பிற்கு ஸ்விட்சபிள் டச் கன்ட்ரோல் கன்சோலைப் பெறுகிறது.
-
இரு என்ஜின் ஆப்சன்களை காம்பாக்ட் செடான் பெறுகிறது, அவை: 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல்.
-
முன்பணமாக ரூ. 25,000 மட்டுமே செலுத்தி முன்பதிவு செய்யும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ டீசர்கள் மற்றும் ஸ்பை ஷாட்டுகளின் மூலம் 2023 ஹீண்டாய் வெர்னா வைப் பற்றிய பல விவரங்கள் முன்னரே நமக்குத் தெரிய வந்துள்ளது. இப்போது, ஆட்டோமேக்கர் புதிய தலைமுறை செடானைப் பற்றிய கூடுதல் உட்புற அம்சங்களைப் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளார். மேலும் ஏற்கனவே பரவியுள்ள தகவல்களையும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் கிளைமேட் கண்ட்ரோல் பற்றிய விவரங்கள்
புத்தம்புதிய டீசர், 10.25 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்பிளேக்கான ஒருங்கிணைக்கப்பட்ட திரைகளைக் காட்டுகிறது. அது ஏற்கனவே டீசர் மூலம் நமக்குத் தெரிந்த போஸ் நிறுவனம் வழங்கும் எட்டு ஸ்பீக்கர் ஒலி அமைப்பை உறுதிபடுத்தியுள்ளது.
மேலும் விவரம் அறிந்து கொள்ளுங்கள் : புதிய ஹீண்டாய் வெர்னாவின் சோதனை ஓட்டம் தனது சொந்த நாட்டில் அதிரடியாகப் பரவியது, இதோ அதன் விளைவுகள்
அதன் புதிய டேஷ்போர்டை இதுவரை நாம் முழுமையாக ஆராயவில்லை, புதிய-தொடுதல் அடிப்படையிலான கிளைமேட் கன்ட்ரோல் பேனலை நாம் காண முடிகிறது. அது இரு பக்கமும் ஃபிசிக்கல் டயல்களுடன் கூடிய தகவல்போக்கு கட்டுப்பாடுகளுடன் இரட்டை அம்சங்களாக நம்மை வியக்க வைக்கிறது. இது கியா EV6 இலும் காணப்பட்ட ப்ரீமியம் சென்ட்ரல் கன்சோல் வடிவமைப்பு ஆகும். கூடுதலாக, தனது கார்களிலேயே ஹீட்டட் இருக்கைகளை முதலில் வழங்கி அதனை வென்டிலேட் இருக்கை செயல்பாட்டுடன் விரிவுபடுத்திய முதல் பிராண்டாக வெர்னா உள்ளது.
மேலும் படிக்க: ஹூண்டாய் புதிய தலைமுறை வெர்னாவின் வடிவமைப்பு மற்றும் பரிமாணங்களை வெளியிடுகிறது
எதிர்பார்க்கப்படும் பாதுகாப்பு அம்சங்கள்
பயணியர் பாதுகாப்பைப் பொருத்தவரை, ஆறு ஏர்பேகுகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESC மற்றும் EBD உடன் ABS பொருத்தப்பட்டுள்ளதாக காம்பாக்ட் செடான் வெளிவந்துள்ளது. சாலை உதவி, மாறும் குரூஸ் கண்ட்ரோல் கருவி மற்றும் ஆட்டோ எமர்ஜென்சி பிரேக்கிங் போன்ற அம்சங்களுடன் அடாஸ் (அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்ஸ்) தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய வெர்னா வடிவமைக்கப்பட்டுள்ளதை டீசர்களும் உறுதிப்படுத்தியுள்ளன.
பவர்டிரெய்ன் விவரங்கள்
ஹூண்டாய் புதிய 1.5 லிட்டர் T-GDi (டர்போ பெட்ரோல்) எஞ்சினை (160 PS மற்றும் 253 Nm உருவாக்கும்) புதிய தலைமுறை வெர்னாவுக்குக் கொண்டுவருவதாக ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது, 1.5 லிட்டர் MPi (நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் ) பெட்ரோல் எஞ்சினைத் தக்கவைத்துக்கொள்ளலாம் (115PS மற்றும் 144Nm) இதன் அம்சமாகும். இரு யூனிட்டுகளும் நிலையானதாக ஆறு ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனைப் பெறுகின்றன, அதேநேரத்தில் அதற்கு முந்தைய கார் ஏழு-ஸ்பீடு DCT ஆப்ஷனையும் அதற்கு பிறகு CVT ஆட்டோமெட்டிக் தேர்வுடனும் வரும்.
எதிர்பார்க்கப்படும் விலைகள் & போட்டியாளர்கள்
மார்ச் 21 ஆம் தேதி புதிய வெர்னா காரின் விலையை ஹுண்டாய் வெளியிட உள்ளது மேலும் அதன் விலை ரூ.10 இலட்சம் (எக்ஸ் ஷோரூம்) இலிருந்து தொடங்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். அறிமுகம் ஆனவுடன் ஹோண்டா சிட்டி , ஸ்கோடா ஸ்லேவியா, வோல்க்ஸ்வேகன் வெர்சூஸ் மற்றும் மாருதி சுசுகி சியாஸ் கார்களுடன் போட்டியிடத் தொடங்கும்
0 out of 0 found this helpful