புதிய வோல்க்ஸ்வேகன் பீட்டில் : என்ன எதிர்பார்க்கலாம் ?

published on டிசம்பர் 16, 2015 01:41 pm by raunak for வோல்க்ஸ்வேகன் பீட்டில்

  • 11 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்பூர் :

வோல்க்ஸ்வேகன் நிறுவனம் இந்த வாரம் 19 ஆம் தேதி தங்களது மிகவும் பிரபலமான பீட்டில் கார்களை இந்தியாவில் மறுஅறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. முதல்முறை அறிமுகப்படுத்தப்பட்ட போது இருந்ததை விட இந்த முறை சொகுசு ஹேட்ச்பேக் பிரிவில் கடுமையான போட்டியை இந்த கார்கள் சந்திக்க வேண்டி இருக்கும் என்று தோன்றுகிறது. மினிகூபர் S மற்றும் பியட் அபர்த் 595 காம்பிடியோசோன் கார்கள் இந்த பீட்டில் கார்களுக்கு முக்கிய எதிரிகளாக இருக்கும் என்று தெரிகிறது. இவைகளை தவிர மெர்சிடீஸ் - பென்ஸ் A - க்ளாஸ் மற்றும் பிஎம்டபுள்யூ 1 சீரிஸ் கார்களும் இந்த புதிய பீட்டில் கார்களுக்கு போட்டியாக இருக்கும். ரூ.30 லட்சத்திற்கு ஒட்டியே விலை நிர்ணயம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் இந்த காரின் சிறப்பம்சங்களை கீழே பார்க்கலாம்.

என்ஜின் அம்சங்கள்

  • 7 - வேக DCT இரட்டை - க்ளட்ச் தானியங்கி ட்ரேன்ஸ்மிஷன் வசதி கொண்ட 1.4 லிட்டர் TSI - டர்போ சார்ஜ் செய்த கேசொலின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.
  • இஞ்சின் 150 PS அளவு ஆற்றலை வெளியிடவல்லது.

பாதுகாப்பு

  • மொத்தம் 6 காற்று பைகள் (ஏயர் பேக்ஸ்) - ஓட்டுனர் மற்றும் முன்புற பயணிக்கான காற்று பைகள் ( இதில் பயணியின் காற்று பையை தேவைகேற்ப டிஆக்டிவேட் செய்து கொள்ளும் வசதியுடன் ), பக்கவாட்டு மற்றும் ஒருங்கிணைகப்பட்ட கர்டைன் காற்று பைகள் பொருத்தப்பட்டுள்ளன.
  • இவை தவிர ஹில் - ஹோல்ட் பங்க்ஷன் .ESC (எலக்ட்ரானிக் ஸ்டெபிலிடி கண்ட்ரோல் ) , ABS ( ஆன்டி - லாக் ப்ரேகிங் சிஸ்டம் ), ASR ( ஆன்டி- ஸ்லிப் ரெகுலேஷன் ) , EDL ( எலெக்ட்ரானிக் டிபரென்ஷியல் லாக் ) மற்றும் EDTC ( என்ஜின் ட்ரேக் ட்ரேக் கண்ட்ரோல் ) போன்ற கூடுதல் பாதுகாப்பு வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன.

சிறப்பம்சங்கள்

  • DRL உடன் கூடிய பை - செனான் LED முகப்பு விளக்குகள் மற்றும் ஸ்டேடிக் கார்னரிங் லைட்ஸ் அம்சம் கொண்ட பாக் லேம்ப் ( பனி விளக்குகள் )
  • LED பின்புற விளக்குகள்
  • புதிய பீட்டில் வோல்க்ஸ்வேகனின் 8 ஸ்பீக்கர் இணைப்பு கொண்ட காம்போசிஷன் மீடியா டச்ஸ்க்ரீன் இந்போடைன்மென்ட் சிஸ்டம் ; USB , AUX – IN மற்றும் ப்ளூடூத் ஆகிய தொடர்புக்கான அம்சங்கள்.
  • ஸ்டீரிங் வீல், கியர் ஷிப்ட் நாப் மற்றும் ஹேன்ட் ப்ரேக் லீவர் போன்றவை தோலினால் போர்த்தப்பட்டுள்ளது.
  • தேவையான அளவு உட்புற வெளிச்சம் செய்யப்பட்டுள்ளது மற்றும் மூன்று கலர் ஆப்ஷன்களும் கொடுக்கப்பட்டுள்ளது.
  • இதைத் தவிர - பநோரமிக் சன்ரூப், உயரம் மற்றும் கீழ் முதுகு பகுதி ஆகியவைகளை அட்ஜஸ்ட் செய்துக் கொள்ளும் வசதியுடன் கூடிய முன்பற இருக்கை; அட்ஜஸ்ட் செய்யும் வசதி கொண்ட OVRM , தானாக மழை மற்றும் வெளிச்சத்தை உணர்ந்து கொள்ளும் சென்சார்கள் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல்.

பரிந்துரைக்கப்படுகிறது

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது வோல்க்ஸ்வேகன் பீட்டில்

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience