கியா செல்டோஸ் டர்போ-பெட்ரோல் DCT மைலேஜ் ஒப்பீடு: புதியது மற்றும் பழையது

published on அக்டோபர் 25, 2023 08:25 pm by ansh for க்யா Seltos

  • 27 Views
  • ஒரு கருத்தை எழுதுக

செல்டோஸ் கார் பெரிய டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் வேகமானதுதான், ஆனால் பழைய வாகனம் குவார்ட்டர் மைல் ஓட்டத்தில் இன்னும் முன்னால் உள்ளது

Kia Seltos Turbo-petrol DCT Real-world Performance Comparison: New vs Old

2023 கியா செல்டோஸ் இந்த ஆண்டின் தொடக்கத்தில் புதிய வடிவமைப்பு, பல புதிய அம்சங்களுடன் அதன் பவர்டிரெயினில் பெரிய மாற்றத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டது. ஃபேஸ்லிஃப்ட் செய்யப்படுவதற்கு முந்தைய செல்டோஸில் 1.4 லிட்டர் டர்போ-பெட்ரோல் யூனிட் வழங்கப்பட்டது, இது ஃபேஸ்லிஃப்ட்டிற்குப் பிறகு, 1.5 லிட்டர் டர்போ யூனிட்டால் மாற்றப்பட்டது. 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் செட்டப், ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் கூடிய காம்பாக்ட் எஸ்யூவியின் இரண்டு பதிப்புகளின் செயல்திறனை நாங்கள் சோதித்துள்ளோம். ஆனால் முடிவுகளைப் பார்ப்பதற்கு முன், இன்ஜின் விவரக்குறிப்புகளை பாருங்கள்.

வெவ்வேறு டர்போ என்ஜின்கள்

விவரக்குறிப்புகள் 

2023 கியா செல்டோஸ்

ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் செல்டோஸ்

இன்ஜின்

1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல்

1.4 லிட்டர் டர்போ-பெட்ரோல்

 

 

டிரான்ஸ்மிஷன்

6-ஸ்பீடு ஐஎம்டி

 / 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன்

6-ஸ்பீடு மேனுவல்

/ 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் 

பவர்

160 PS

140 PS

டார்க்

253 Nm 

242 Nm

மேம்படுத்தப்பட்ட செல்டோஸ், மேனுவல் டிரான்ஸ்மிஷனுக்குப் பதிலாக ஐஎம்டியுடன் பெரிய டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை பெறுகிறது. இருப்பினும், கோட்பாட்டில் டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் இன்னும் அப்படியே உள்ளது, இதைத்தான் நாங்கள் சோதித்தோம்.

இதையும் பார்க்கவும்: கியா சோனெட் ஃபேஸ்லிஃப்ட் காரின் வெளிப்புற மறைக்கப்படாத படங்கள் ஆன்லைனில் வெளியாகியுள்ளன

இதன் புதிய இன்ஜின், முதன்முதலில் காணப்பட்ட கியா கேரன்ஸ் போல், 20 PS அதிக ஆற்றலையும், 11 நியூட்டன் மீட்டர் அதிக டார்க்கை உருவாக்குகிறது. இந்த கூடுதல் செயல்திறன் 2023 கியா செல்டோஸ் -ன் செயல்திறன் நிஜ உலகில் எவ்வாறு மாற்றம் காண்கிறது என்பதை இப்போது பார்க்கலாம்.

செயல்திறன்: ஆக்சலரேஷன்

2023 Kia Seltos

 

சோதனைகள் 

 

2023 கியா செல்டோஸ்

 

ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் கியா செல்டோஸ்

 

மணிக்கு 0-100 கி.மீ

 

9.24 வினாடிகள்

 

9.51 வினாடிகள்

 

குவார்டர் மைல்

 

மணிக்கு 135.15 கிமீ வேகத்தில்17.19 வினாடிகள் 

 

மணிக்கு 135.44 கிமீ வேகத்தில் 17.02 வினாடிகள்

 

கிக் டவுன் (மணிக்கு 20-80 கிமீ)

 

5.18 வினாடிகள்

 

5.47 வினாடிகள்

புதிய இன்ஜின் கியா செல்டோஸை விரைவாக்கியுள்ளது. மணிக்கு 0-100கிமீ வேகத்தில், மற்றும் கிக் டவுனில், புதுப்பிக்கப்பட்ட செல்டோஸ் முந்தைய பதிப்பை விட வேகமானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 1.4-லிட்டர் யூனிட் கொண்ட பழைய செல்டோஸ் குவார்ட்டர் மைலை விரைவாக முடிக்க முடிந்தது.

செயல்திறன்: பிரேக்கிங்

Pre-facelift Kia Seltos

 

சோதனைகள் 

 

2023 கியா செல்டோஸ்

 

ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் கியா செல்டோஸ்

 

மணிக்கு 0-100-கிமீ

 

39.67 மீட்டர் 

 

40.93 மீட்டர்

 

மணிக்கு  80-0 கிமீ

 

23.92 மீட்டர்

 

25.51 மீட்டர்

100 கிமீ வேகத்தில் திடீரென நிறுத்தப்படும் போது, ​​இரண்டுக்கும் இடையே உள்ள நிறுத்த தூரத்தில் 1 மீட்டருக்கு மேல் வித்தியாசம் உள்ளது. 80 கிமீ முதல் 0 வரையிலான சோதனையில், அதே முடிவுகள் காணப்பட்டன, ஆனால், புதிய செல்டோஸ் காரின் நிறுத்தும் தூரம் 1.5 மீட்டருக்கும் குறைவாக இருந்தது. சோதனை செய்யப்பட்ட இரண்டு கார்களும் டிஸ்க் பிரேக்குகளுடன் உள்ளன, ஆனால் டயர்களில் வித்தியாசம் உள்ளது. ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் செல்டோஸ் 215/60 ரப்பரால் மூடப்பட்ட 17 இன்ச் அலாய்களில் இயங்கியது, அதே நேரத்தில் அப்டேட்டட் எஸ்யூவி 215/55 டயர்களுடன் 18 இன்ச் அலாய்களில் இயங்கியது.

இதையும் படியுங்கள்: உலகத் தரத்திலான EV -களை இந்தியாவில் தயாரிக்கவுள்ள கியா மோட்டார்ஸ்... மேலும் EV -க்கான பிரத்யேக கடைகளை திறக்கவுள்ளது

புதிய இன்ஜினுடன் கூடிய 2023 செல்டோஸ் பழையதை விட சிறப்பாக செயல்படுவது போல் தெரிகிறது, அதே நேரத்தில் பழைய 1.4 லிட்டர் இன்ஜின் கால் மைல் ஓட்டத்தில் மட்டுமே சிறப்பாக செயல்பட்டது. எஸ்யூவி -கள் பக்கவாட்டில் சோதிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

விலை வித்தியாசம்

Kia Seltos

 

வேரியன்ட்ஸ்

 

2023 கியா செல்டோஸ்

 

ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் செல்டோஸ்

 

வித்தியாசம்

X-Line Turbo DCT

எக்ஸ்-லைன் டர்போ டிசிடி 

Rs 20.30 lakh

ரூ 20.30 லட்சம்

Rs 18.70 lakh

ரூ 18.70 லட்சம்

+ Rs 1.6 lakh

+ ரூ 1.6 லட்சம்

* விலை எக்ஸ்-ஷோரூம்

எங்கள் சோதனைகளுக்காக, புதிய மற்றும் பழைய கியா செல்டோஸ் இரண்டின் டாப்-ஸ்பெக் வேரியன்ட்டை எடுத்தோம். அதே எக்ஸ்-லைன் டூயல் கிளட்ச் டிரான்மிஷன் வேரியன்ட்டுக்கு, புதிய செல்டோஸ் ரூ. 1.6 லட்சத்தை கூடுதலாக விலையுடன் வருகிறது மற்றும் சிறந்த அம்சங்கள், புதிய வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட செயல்திறன் ஆகியவற்றை வழங்குகிறது.

மேலும் படிக்க: செல்டோஸ் டீசல்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது க்யா Seltos

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience