• English
  • Login / Register

புதிய Skoda Superb கார் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டது

ஸ்கோடா சூப்பர்ப் 2024 க்காக ஜனவரி 17, 2025 08:44 pm அன்று rohit ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

  • 46 Views
  • ஒரு கருத்தை எழுதுக

புதிய தலைமுறை சூப்பர்ப் காருக்கு உள்ளேயும் வெளியேயும் புதிய தோற்றம் கொடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக கேபினுக்குள் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

New Skoda Superb revealed at auto expo 2025

  • ஸ்கோடா புதிய சூப்பர்ப் காரை இந்தியாவில் முழுமையாக கட்டமைக்கப்பட்ட யூனிட் (CBU) காராக வழங்கப்படலாம்.

  • இது நேர்த்தியான எல்இடி ஹெட்லைட்கள், 19-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் ரேப்பரவுண்ட் எல்இடி டெயில் லைட்ஸ் ஆகியவற்றைப் பெறுகிறது.

  • கேபின் முழுவதும் சில்வர் ஆக்ஸென்ட்கள் மற்றும் 2-ஸ்போக் ஸ்டீயரிங் வீலுடன் டூயல்-டோன் தீம் உள்ளது.

  • 13-இன்ச் டச் ஸ்கிரீன், 10 ஏர்பேக்குகள் மற்றும் ADAS ஆகிய வசதிகள் காரில் கிடைக்கும்.

  • குளோபல்-ஸ்பெக் மாடல் 2-லிட்டர் டீசல் உட்பட பல பவர்டிரெய்ன்களுடன் வருகிறது.

  • இந்தியாவில் 2025 -ஆண்டில் வெளியீடு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது; விலை ரூ.50 லட்சத்தில் இருந்து தொடங்கலாம் (எக்ஸ்-ஷோரூம்).

நான்காவது தலைமுறை ஸ்கோடா சூப்பர்ப் இந்தியாவில் அதன் முதல் காலை எடுத்து வைத்துள்ளது. ஆனால் ஸ்கோடா நிறுவனம் இதை பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் மட்டுமே காட்சிக்கு வைத்துள்ளது. இது 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் உலகளவில் வெளியிடப்பட்டது. மேலும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் அதன் எதிர்பார்க்கப்படும் வெளியீடு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சூப்பர்ப் -ன் விரைவான பார்வை இங்கே:

2025 ஸ்கோடா சூப்பர் வடிவமைப்பு

New Skoda Superb front

ஒரு ஜெனரேஷன் அப்டேட் என்பதால் இதில்  உள்ளேயும் வெளியேயும் ஒரு புதிய வடிவமைப்பைக் கொடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அதன் முக்கிய எலமென்ட்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது. கிரில்லுக்கான வழக்கமான பட்டர்ஃபிளை பேட்டர்ன், ஷார்ப்பான எல்இடி டிஆர்எல்களுடன் கூடிய நேர்த்தியான எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் ரேப்பரவுண்ட் எல்இடி டெயில் லைட்ஸ் ஆகியவை இதில் உள்ளன. புதிய ஸ்கோடா சூப்பர்ப் காரில் நீங்கள் 19-இன்ச் அலாய் வீல்களையும் தேர்வு செய்யலாம்.

2025 ஸ்கோடா சூப்பர்ப் இன்ட்டீரியர்ஸ் மற்றும் வசதிகள்

New Skoda Superb cabin

புதிய சூப்பர்ப் -ன் கேபினில் டூயல்-டோன் தீம் உள்ளது. இது சுற்றிலும் சில்வர் ஆக்ஸென்ட்கள் மற்றும் காலநிலை கன்ட்ரோல்க்கான பாடி டயல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தியா-ஸ்பெக் ஸ்லாவியா மற்றும் குஷாக் உள்ளிட்ட புதிய ஸ்கோடா சலுகைகளில் காணப்படுவது போல் இது 2-ஸ்போக் ஸ்டீயரிங் பெறுகிறது. மேலும் டூயல் டிஜிட்டல் டிஸ்ப்ளே -கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இது ஒரு பெரிய 13-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட், 10.25-இன்ச் முழு-டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, பல வண்ண ஆம்பியன்ட் லைட்ஸ், பிராண்டட் சவுண்ட் சிஸ்டம் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவற்றுடன் வருகிறது. இது ஹீட்டிங் மற்றும் கூலிங் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜருடன் எலக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட்டபிள் முன் இருக்கைகளையும் பெறுகிறது.

ஸ்கோடா 10 ஏர்பேக்குகள், பார்க் அசிஸ்ட், ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் மற்றும் பல அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) போன்ற பாதுகாப்பு வசதிகளை வழங்கியுள்ளது.

மேலும் படிக்க: BH பதிவுக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டுமா ? கேரள உயர் நீதிமன்ற தீர்ப்பு விளக்கமளித்துள்ளது

2025 ஸ்கோடா சூப்பர்ப் பவர்டிரெய்ன்

விவரங்கள்

1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் மைல்ட்-ஹைப்ரிட்

1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் பிளக்-இன் ஹைப்ரிட்

2-லிட்டர் டர்போ-பெட்ரோல்

2 லிட்டர் டீசல்

பவர்

150 PS

204 PS

204 PS/ 265 PS

150 PS/ 193 PS

டிரான்ஸ்மிஷன்

7-ஸ்பீடு DCT

6-ஸ்பீடு DCT

7-ஸ்பீடு DCT

7-ஸ்பீடு DCT

டிரைவ்டிரெய்ன்

FWD^

FWD^

FWD^/ AWD*

FWD^/ AWD*

^FWD - ஃபிரன்ட்-வீல் டிரைவ்

*AWD - ஆல்-வீல் டிரைவ்

புதிய குளோபல்-ஸ்பெக் சூப்பர்ப் இரண்டு ஹைபிரிட் பவர் ட்ரெய்ன்களின் தேர்வுடன் கிடைக்கிறது: ஒரு 150 PS 1.5-லிட்டர் மைல்ட்-ஹைப்ரிட் மற்றொன்று 204 PS 1.5-லிட்டர் பிளக்-இன் ஹைப்ரிட். பிந்தையது 25.7 kWh பேட்டரி பேக்கை பயன்படுத்துகிறது. எலக்ட்ரிக் மோடில் 100 கி.மீ செல்ல உதவும். இந்தியாவில் எது வழங்கப்படும் என்பதைப் பார்க்க வேண்டும். ஆனால் இது ஃபிரன்ட்-வீல் டிரைவ் செட்டப்பை கொண்ட 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினாக இருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். 

2025 ஸ்கோடா சூப்பர்ப் வெளியீடு மற்றும் விலை

New Skoda Superb rear

2025 ஸ்கோடா சூப்பர்ப் இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ. 50 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் நேரடி போட்டியாளராக புதிய டொயோட்டா கேம்ரி இருக்கும்.

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

was this article helpful ?

Write your Comment on Skoda சூப்பர்ப் 2024

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

டிரெண்டிங் சேடன் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience