புதிய Renault Duster காரின் அறிமுகம் தள்ளிப்போனது
ரெனால்ட் டஸ்டர் 2025 க்காக ஜனவரி 06, 2025 10:44 pm அன்று dipan ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 41 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்த ஆண்டில் ரெனால்ட் கைகர் மற்றும் ட்ரைபரின் அடுத்த தலைமுறை மாடல்கள் அறிமுகப்படுத்தப்படும்.
-
ரெனால்ட் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் 2026 ஆம் ஆண்டில் ஒரு புதிய எஸ்யூவி அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
-
முந்தைய டீஸர்கள் இது 2025 ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட இருந்த புதிய ரெனால்ட் டஸ்டர் காராக இருக்கலாம் என்று கூறுகின்றன.
-
இது ஆல்-LED லைட்டிங் செட்டப், டூயல்-டோன் அலாய் வீல்கள் மற்றும் மிரட்டலான கிளாடிங் ஆகியவற்றை கொண்டிருக்கும்.
-
ஃபுளோட்டிங் டச் ஸ்கிரீன் மற்றும் நிறைய உடல் கட்டுப்பாடுகளுடன் நவீன உட்புறத்துடன் வரும்.
-
10.1 இன்ச் டச் ஸ்கிரீன், 7 இன்ச் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் போன்ற வசதிகள் இதில் கொடுக்கப்படலாம்.
-
இந்தியா-ஸ்பெக் மாடலின் பவர்டிரெயின் விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
-
இதன் விலை ரூ.10 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு இந்தியாவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்பட்ட ரெனால்ட் டஸ்டர் காரின் அறிமுகம் தள்ளிப்போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக ரசிகர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருக்கலாம். ரெனால்ட் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் வெங்கட்ராம் மாமில்லபல்லே, இந்திய சந்தையில் ரெனால்ட் நிறுவனத்தின் எதிர்கால திட்டங்களைப் பற்றி தெரிவித்துள்ளார். விவரங்களை பார்க்கும் முன்னர் அவரது கருத்துகள் இங்கே.
“ இந்த ஆண்டின் பிற்பகுதியில் அடுத்த தலைமுறை ட்ரைபர் மற்றும் கைகர் வாகனங்கள் வெளியாகும். இவை சிறப்பாக மற்றும் மற்றும் மகிழ்ச்சியடையச் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வெளியீடுகள் 2026 ஆண்டில் திட்டமிடப்பட்ட அனைத்து புதிய எஸ்யூவி உட்பட புதுமைகளின் சீரிஸின் துவக்கத்தைக் குறிக்கும்”.
இந்த ஆண்டு ரெனால்ட் கைகர் மற்றும் ரெனால்ட் ட்ரைபர் காரின் அடுத்த தலைமுறை மாடல்கள் என்று அறிமுகப்படுத்தப்படும். ரெனால்ட் இந்தியா நிர்வாக இயக்குனர் 2026 ஆம் ஆண்டில் ஒரு புதிய எஸ்யூவி -யை உறுதிப்படுத்தியுள்ளார். 2024 -ம் ஆண்டில் எஸ்யூவி இந்தியாவில் மீண்டும் வரும் என்று பிரெஞ்சு கார் தயாரிப்பாளர் மார்ச் மாதம் உறுதிப்படுத்தினார் மற்றும் அந்த தகவலையும் பகிர்ந்து கொண்டார். அந்த டீஸர் நவம்பர் 2024 ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் காட்சிப்படுத்தப்பட்ட ரெனால்ட் டஸ்ட்டரின் புதிய தலைமுறை 'ஆல்-புதிய எஸ்யூவி ஆக இருக்கும் என்று கருதப்பட்டது. மேலும் 2024 ஆண்டு மார்ச்சில் மீண்டும் டீஸர் வெளியிடப்பட்டது.
வரவிருக்கும் டஸ்டர் வழங்கக்கூடிய அனைத்தையும் இங்கே பார்க்கலாம்.
புதிய ரெனால்ட் டஸ்டர்: வெளிப்புறம்
புதிய தலைமுறை டஸ்ட்டர் இந்தியாவில் விற்பனையில் இருந்து நிறுத்தப்பட்ட மாடலை போன்றே பாக்ஸி டிசைனை கொண்டிருக்கும். இருப்பினும் புதிய ஜென் மாடல் LED ஹெட்லைட்கள், ஒய்-வடிவ LED டிஆர்எல்கள் மற்றும் ஒய் வடிவ LED டெயில் லைட்டுகளுடன் மிகவும் நவீனமாக இருக்கும். இது டூயல்-டோன் அலாய் வீல்கள் மற்றும் மிரட்டலான தோற்றத்திற்காக பிளாக் கலர் கிளாடிங் உடன் கூடிய சதுர வடிவிலான வீல் ஆர்ச்களுடன் வரும்.
புதிய ரெனால்ட் டஸ்டர்: உட்புறம், வசதிகளுடன் மற்றும் பாதுகாப்பு வசதிகள்
Y-வடிவ டிஸைன் எலமென்ட்கள், ஏசி வென்ட்கள் போன்ற வடிவமைப்பைக் அப்படியே இருக்கும். 3-ஸ்போக் ஸ்டீயரிங் வீலும் புதியது மற்றும் ஆடியோ மற்றும் க்ரூஸ் கன்ட்ரோலுக்கான பட்டன்களை கொண்டுள்ளது. ஃபுளோட்டிங் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஏராளமான பிஸிக்கல் கன்ட்ரோல்களுடன் கேபின் முழுவதும் அதி நவீனமானதாக தெரிகிறது.
சர்வதேச அளவில் கிடைக்கும் மாடல் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளேயுடன் 10.1 இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் 7 இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், 6-ஸ்பீக்கர் ஆர்காமிஸ் 3டி சவுண்ட் சிஸ்டம் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் ஆகியவற்றைப் பெறுகிறது. இந்தியா-ஸ்பெக் மாடலும் அதே போன்ற வசதிகளை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
பாதுகாப்புக்காக இந்தியா-ஸ்பெக் டஸ்டர் 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) மற்றும் சில அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) வசதிகளையும் பெறலாம்.
மேலும் படிக்க: வோல்வோ XC90 விபத்து இந்தியாவில் சாலை பாதுகாப்பு மேம்படுத்தப்பட வேண்டும் என்பதை மேலும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
புதிய ரெனால்ட் டஸ்டர்: பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
சர்வதேச அளவில் புதிய தலைமுறை டஸ்டர் ஹைப்ரிட் மற்றும் எல்பிஜி உள்ளிட்ட பல பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுட்ன வருகிறது. 130 PS 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் 48 V மைல்ட் ஹைப்ரிட் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. மற்றும் ஒரு ஸ்ட்ராங் ஹைபிரிட் 140 PS 1.6-லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 1.2kWh பேட்டரி பேக் மூலம் இயக்கப்படும் இரண்டு எலக்ட்ரிக் மோட்டார்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. மூன்றாவது 100 PS 1.2 லிட்டர் பெட்ரோல்-எல்பிஜி கலவையாகும், இது 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷனுடன் வழங்கப்படுகிறது.
இந்தியா-ஸ்பெக் டஸ்டரின் பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் பற்றிய கூடுதல் விவரங்கள் 2026 ஆண்டில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு வெளியிடப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
புதிய ரெனால்ட் டஸ்டர்: எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
ரெனால்ட் டஸ்டர் காரின் விலை ரூ.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இது ஹூண்டாய் கிரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா, ஹோண்டா எலிவேட், ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்ஸ்வேகன் டைகுன் போன்ற சிறிய எஸ்யூவி -களுக்கு போட்டியாக இருக்கும்.
புதிய ரெனால்ட் டஸ்டர் காரின் வெளியீடு தாமதம் ஆகிவிட்டாலும் இந்த எஸ்யூவி பற்றி நீங்கள் எவ்வளவு உற்சாகமாக இருக்கிறீர்கள் என்பதை கீழே உள்ள கமென்ட் பகுதியில் எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.