சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

சர்வதேச சந்தையில் அறிமுகமானது MG Astor (ZS) கார்

published on ஆகஸ்ட் 29, 2024 07:43 pm by dipan for எம்ஜி ஆஸ்டர்

இந்தியா-ஸ்பெக் ஆஸ்டர் 3 ஆண்டுகளாக அப்டேட் செய்யப்படாமல் இருக்கிறது. இந்த புதிய எம்ஜி ZS ஹைப்ரிட் எஸ்யூவியை இந்தியாவுக்கான ஃபேஸ்லிஃப்டாக எம்ஜி நிறுவனம் அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளது.

  • இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் எம்ஜி ஆஸ்டர் கார் சர்வதேச சந்தையில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

  • புதிய ஆக்ரோஷமான கிரில், ஸ்வீப்ட்-பேக் ஹெட்லைட்கள் மற்றும் டெயில் லைட்கள் மற்றும் புதிய அலாய்ஸ் ஆகியவை உள்ளன.

  • உள்ளே புதிய வடிவிலான டாஷ்போர்டு உடன் பெரிய 12.3-இன்ச் டச் ஸ்கிரீனை கொண்டுள்ளது.

  • பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், லெவல்-2 ADAS மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை அடங்கும்.

  • உலகளவில் ஹைப்ரிட் பவர்டிரெய்னுடன் வருகிறது; பசுமையான இயக்கத்திற்கான எம்ஜியின் முன்னெடுப்பை கருத்தில் கொண்டு பார்க்கும்போது அதே ஆப்ஷன் இந்தியாவிலும் கொடுக்கப்படலாம்.

  • ஒருவேளை இங்கே அறிமுகப்படுத்தப்பட்டால் தற்போதைய மாடலின் விலையான ரூ.9.98 லட்சம் மற்றும் ரூ.18.08 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விட அதிகமாக இருக்கும் .

எம்ஜி ஆஸ்டர் சர்வதேச அளவில் MG ZS என அழைக்கப்படும் இந்த காருக்கு சர்வதேச சந்தையில் ஒரு பெரிய அப்டேட்டை கொடுக்கப்பட்டுள்ளது. காம்பாக்ட் எஸ்யூவி ஆனது பெரிதும் மாற்றியமைக்கப்பட்ட வெளிப்புறம், புதிய வடிவிலான டேஷ்போர்டு, ஏராளமான புதிய வசதிகள் மற்றும் மிக முக்கியமாக ஒரு ஹைப்ரிட் பவர்டிரெய்ன் ஆகியவற்றுடன் வருகிறது. இந்தியாவில் ஆஸ்டர் அறிமுகப்படுத்தப்பட்டு மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் அதன்பின்னர் எந்த அப்டேட்டும் கொடுக்கப்படவில்லை ஆகவே அப்டேட்டட் செய்யப்பட்டுள்ள குளோபல் மாடல் இந்தியாவில் ஆஸ்டர் ஃபேஸ்லிஃப்ட்டாக அறிமுகப்படுத்தப்படலாம். காம்பாக்ட் எஸ்யூவி -யை பற்றிய ஒரு நெருக்கமான பார்வை இங்கே:

வெளிப்புறம்

தற்போதைய மாடலுடன் ஒப்பிடும்போது புதிய எம்ஜி ஆஸ்டருக்கு மிகவும் ஆக்ரோஷமான வடிவமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இது ஹனிகோம்ப் மெஷ் வடிவத்துடன் கூடிய பெரிய கிரில், முன்புறம் முழுவதும் கனெக்டட் LED DRL லைட் பார் மற்றும் மெல்லிய ஸ்வீப்ட்-பேக் ஹெட்லைட்கள் உள்ளன. இருபுறமும் ஆக்ரோஷமான பாணியில் சி-வடிவ ஏர் இண்டேக்குகள் உள்ளன. MG லோகோ இப்போது பானட்டில் உள்ளது. மேலும் பம்பரில் இப்போது புதிய சில்வர் ஸ்கிட் பிளேட் கொடுக்கப்பட்டுள்ளது.

பக்கவாட்டில் பார்க்கும் போது தற்போதைய இந்தியா-ஸ்பெக் ஆஸ்டர் போலவே உள்ளது. ஆனால் புதிய அலாய் வீல் மற்றும் பாடி கிளாடிங்குடன் சில்வர் கலர் டிரிமை பார்க்க முடிகிறது.

பின்புறத்தில் ஆஸ்டர் இரட்டை-எக்ஸாஸ்ட் தோற்றத்தைப் பிரதிபலிக்கும் புதிய சில்வர் எலமென்ட்களுடன் புதிய வடிவிலான பம்பர் கொடுக்கப்பட்டுள்ளது. ரேப்பரவுண்ட் டெயில் லைட்ஸ் புதிய LED எலமென்ட்களுடன் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. மேலும் பின்பக்க ஃபாக் லைட்ஸ் இப்போது இந்தியா-ஸ்பெக் மாடலை விட தாழ்வாக கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: 2024 பண்டிகை சீசனில் ரூ.20 லட்சத்துக்கு கீழ் எதிர்பார்க்கப்படும் 6 கார்கள் !

இன்ட்டீரியர், வசதிகள் மற்றும் பாதுகாப்பு

உள்ளே MG ZS ஆனது 12.3-இன்ச் பெரிய டச் ஸ்கிரீன் உடன் கூடிய புதிய டேஷ்போர்டு கொடுக்கப்பட்டுள்ளது. புதிய வடிவிலான அறுகோண ஏசி வென்ட்கள் மற்றும் மேல் மற்றும் கீழ் ஃபிளாட்டான புதிய ஸ்டீயரிங் உள்ளது. இது 7-இன்ச் டிஜிட்டல் டிரைவஸ் டிஸ்ப்ளே அப்படியே உள்ளது. புதிய வடிவிலான சென்டர் கன்சோலில் புதிய கியர் லீவருடன் கொடுக்கப்பட்டுள்ளது.

எஸ்யூவி ஆனது வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, வெர்டிகலாக கொடுக்கப்பட்டுள்ள வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், பின்புற வென்ட்கள் கொண்ட ஆட்டோமெட்டிக் ஏசி, 6-வே அட்ஜெஸ்ட்டபிள் டிரைவர் சீட் மற்றும் ஹீட்டட் முன் இருக்கைகள் மற்றும் ஸ்டீயரிங் ஆகியவற்றை கொண்டுள்ளது.

பாதுகாப்பிற்காக இதில் 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) மற்றும் ஃபார்வர்டு கொலிஷன் மிட்டிகேஷன் மற்றும் டிரைவர் டிரொளவுஸினெஸ் டிடெக்‌ஷன் போன்றவற்றை கொண்ட மேம்பட்ட டிரைவர் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை அடங்கும்.

பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்

அப்டேட்டட் செய்யப்பட்ட எம்ஜி ஆஸ்டர் உலகளாவிய சந்தைகளில் ஹைப்ரிட் பவர்டிரெய்னுடன் வருகிறது. இந்தியாவில் இன்னும் பசுமையான மாடல்களை அறிமுகப்படுத்த எம்ஜி முயற்சிப்பதால், தற்போதைய 1.3 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்களுடன் இது வழங்கப்படலாம். இந்த இன்ஜின்களுக்கான விவரங்கள் இங்கே:

விவரங்கள்

MG ZS ஹைப்ரிட் (சர்வதேச அளவில் கிடைக்கிறது)

எம்ஜி ஆஸ்டர் (இந்திய-ஸ்பெக் கார்)

இன்ஜின்

1.5-லிட்டர் ஸ்ட்ராங்-ஹைபிரிட்

1.3 லிட்டர் டர்போ-பெட்ரோல்

1.5 லிட்டர் N/A பெட்ரோல்

பவர்

196 PS

140 PS

110 PS

டார்க்

465 Nm

220 Nm

144 Nm

டிரான்ஸ்மிஷன்*

தகவல் இல்லை

6-ஸ்பீடு ஏடி

5-ஸ்பீடு MT, CVT

* AT = டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன், CVT = கான்டினியூஸ்லி வேரியபிள் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்

குளோபல்-ஸ்பெக் எம்ஜி ஆஸ்டர் ஆனது அதன் ஹைப்ரிட் பவர்டிரெய்னை தவிர்த்து பார்த்தால் தற்போதைய இந்திய மாடலில் கிடைக்கும் இன்ஜின்களை விட அதிக பவரை கொண்டுள்ளது.

மேலும் படிக்க: MG Windsor EV-இன் ஆஃப்லைன் முன்பதிவுகள் தொடக்கம்!

எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

இந்தியாவில் தற்போதைய எம்ஜி ஆஸ்டரின் விலை ரூ.9.98 லட்சம் முதல் ரூ.18.08 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) உள்ளது. ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மாடல் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டால், தற்போதைய காரை விட கூடுதல் விலையில் வரும்.

இது ஹூண்டாய் கிரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா, கியா செல்டோஸ், ஃபோக்ஸ்வேகன் டைகுன், மற்றும் ஹோண்டா எலிவேட் போன்ற காம்பாக்ட் எஸ்யூவிகளுடன் தொடர்ந்து போட்டியிடும்

இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட ZS எஸ்யூவியை ஆஸ்டர் ஃபேஸ்லிஃப்ட்டாக MG நிறுவனம் கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறீர்களா? கீழே உள்ள கமெண்ட் பகுதியில் உங்கள் கருத்துக்களை எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

கார் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

மேலும் படிக்க: எம்ஜி ஆஸ்டர் ஆன் ரோடு விலை

d
வெளியிட்டவர்

dipan

  • 84 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment on M ஜி ஆஸ்டர்

Read Full News

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை