• English
  • Login / Register

30 புதிய பாதுகாப்பு அம்சங்களை ஸ்டாண்டர்டாக பெறும் புதிய ஹீண்டாய் வெர்னா, டாப் வேரியண்ட்டில் ADAS கிடைக்கிறது.

published on மார்ச் 17, 2023 06:47 pm by rohit for ஹூண்டாய் வெர்னா

  • 52 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஆறு ஏர்பேக்குகள், ஆட்டோ ஹெட்லேம்புகள் மற்றும் அனைத்து பயணிகளுக்கும் த்ரீ-பாயின்ட் சீட் பெல்ட்டுகள் உள்ளிட்டவற்றை இதன் நிலையான பாதுகாப்பு அம்சங்களாக இது பெற்றுள்ளது.

2023 Hyundai Verna

  • ஹூண்டாய் நிறுவனம் ஆறாவது-ஜெனரேஷன் வெர்னாவை மார்ச் 21-ஆம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது.

  • ஃபார்வர்டு-கொலிசன் வார்னிங் மற்றும் அடாப்டிவ் குரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட ADAS அம்சங்களை முதல் முறையாகப் பெறுகிறது.

  • ஆன் போர்டில் உள்ள மற்ற பாதுகாப்பு அம்சங்கள் ESC மற்றும் முன்புற பார்க்கிங் சென்சார்கள் அடங்கியது.

  • இரு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களை 2023 வெர்னா பெறுகிறது. 115PS, 1.5-லிட்டர் பெட்ரோல் மற்றும் 160PS, 1.5-லிட்டர் டர்போ பெட்ரோல்.

  • விலை ரூ. 10 இலட்சத்தில் (எக்ஸ் ஷோ ரூம்)இருந்து நிர்ணயிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நமக்கு தெரிந்த வரையில்   ஆறாவது-தலைமுறை ஹீண்டாய் வெர்னா சிக்கிரமே அறிமுகம் ஆக உள்ளது. அறிமுகத்திற்கு முன்னரே, புதிய செடானில் ஆன்போர்டில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை கார் உற்பத்தியாளர்கள் இப்போதே சிறப்பாக விளக்கியுள்ளார்கள். அது 65 -க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது. அவற்றில் 30 நிலையானதாக இருக்கும் - அதில் அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ட் சிஸ்டம்ஸ் (ADAS) ம் அடங்கும்.

பாதுகாப்பில் ஸ்டாண்டர்டாக கிடைப்பவை

த்ரீபாயின்ட் சீட் பெல்ட்டுகள் (அனைத்து பயணிகளுக்கும்), ஆறு ஏர்பேக்குகள், சீட் பெல்ட் ரிமைன்டர்கள், EBD உடன் கூடிய ABS ISOFIX சைல்ட் சீட் ஆங்கரேஜ், ஆட்டோ ஹெட்லைட்டுகள், பின்புற டீஃபாகர் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை 2023 வெர்னாவின் நிலையான ஸ்டாண்டர்டு கிட்டில் அடங்கியுள்ளன.

அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள ADAS

இந்த புதிய தலைமுறை புதுப்பித்தலுடன் , ஹீண்டாய்  சில ADAS அம்சங்களுக்காக சென்சார்கள் மற்றும் ஒரு முன்புற கேமராவை அதன் சிறிய செடானிற்கும் வழங்கவுள்ளது. பிராண்டின் ஸ்மார்ட்சென்ஸ் சூட்டில், ஃபார்வர்டு-கொலிசன் வார்னிங், ப்ளைன்ட் ஸ்பாட் அலர்ட், லேன் கீப்பிங் அசிஸ்ட், லேன் டிபார்ச்சர் வார்னிங் மற்றும் அடாப்டிவ் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி உள்ளிட்டவை அடங்கும். பிற ADAS அம்சங்களில் டிரைவர் அட்டென்சன் வார்னிங், ஹை பீம் அசிஸ்ட் மற்றும் லீட் வெஹிகிள் டிபார்ச்சர் அலர்ட் ஆகியவை அடங்கும்.

மேலும் படிக்க: ஹூண்டாய் இந்தியா,  GM இன் தலேகான் ஆலையை வாங்குவதற்கான டெர்ம் ஷீட்டில் கையெழுத்திட்டது

பிற பாதுகாப்பு அம்சங்கள்

2023 Hyundai Verna disc brake

எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல்(ESC), முன்புற பார்க்கிங் சென்சார்கள், ஆல் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் டயர் பிரஷர் கண்காணிப்பு அமைப்பு ஆகியவை வெர்னாவில் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் அனைத்தும் உயர் டிரிம்முகளுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன.

பெட்ரோல் பவர் மட்டுமே

Hyundai Verna 1.5 Turbo badge

ஆறாவது-தலைமுறை ஹீண்டாய் வெர்னா பெட்ரோல்-தேர்வை மட்டும் வழங்குகிறது. இது தற்போதுள்ள 1.5-லிட்டர் இயல்பாகவே விரும்பப்படும் இன்ஜின் (115PS/144Nm) மற்றும் புதிய 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் யூனிட் (160 PS/253 Nm) உடன் வரும். ஆறு-வேக மேனுவல் டிரான்ஸ்மிஷன் நிலையானதாக  இருக்கும்,  முந்தையது ஒரு CVT-ஐ பெறும் அதேசமயம் பிந்தையது ஒரு செவன்-ஸ்பீட் DCT -ஐ விருப்பத்தேர்வுகளாகப் பெறும்.

தொடர்புடையவை:  புதிய ஹீண்டாய் வெர்னாவின் இந்த பதிப்பை இந்தியாவில் நீங்கள் பெற முடியாது!

அறிமுகம் மற்றும் போட்டியாளர்கள்

2023 Hyundai Verna rear

இந்தியாவில் மார்ச் மாதம் 21 ஆம் தேதி புதிய வெர்னாவை ஹீண்டாய் அறிமுகப்படுத்த உள்ளது. இதன் விலை ரூ. 11 இலட்சமாக (எக்ஸ் ஷோரூம்) நிர்ணயிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய காம்பாக்ட் செடான்  ஸ்கோடா ஸ்லேவியா , வோல்க்ஸ்வேகன் வெர்சூஸ், மாருதி சியாஸ் மற்றும்  ஃபேஸ்லிப்டட் ஹோண்டா சிட் ஆகியவற்றுக்கு போட்டியாக வர உள்ளது.

மேலும் படிக்க: ரூ.10 இலட்சத்திற்கும் குறைவான விலையில்  ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்சனுடன் வந்துள்ள 10 மிக மலிவான கார்கள்

was this article helpful ?

Write your Comment on Hyundai வெர்னா

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending சேடன் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • ஆடி ஏ5
    ஆடி ஏ5
    Rs.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஆகஸ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா டைகர் 2025
    டாடா டைகர் 2025
    Rs.6.20 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    டிச்பர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • ஸ்கோடா ஆக்டிவா vrs
    ஸ்கோடா ஆக்டிவா vrs
    Rs.45 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜூல, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • ஸ்கோடா சூப்பர்ப் 2025
    ஸ்கோடா சூப்பர்ப் 2025
    Rs.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    டிச்பர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மெர்சிடீஸ் eqe செடான்
    மெர்சிடீஸ் eqe செடான்
    Rs.1.20 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    டிச்பர், 2026: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience