• English
  • Login / Register

புதிய ஆசியான்-மாதிரி ஹோண்டா சிவிக், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது

modified on பிப்ரவரி 19, 2016 04:51 pm by raunak for ஹோண்டா சிவிக்

  • 58 Views
  • ஒரு கருத்தை எழுதுக

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஹோண்டா சிவிக்கின் விற்பனை நிறுத்தப்பட்ட நிலையில், அது மறுஅறிமுகம் செய்யப்பட உள்ளது!

10வது தலைமுறையைச் சேர்ந்த சிவிக்கின் ஆசியான் அவதாரத்தை இன்று, ஜப்பானிய வாகனத் தயாரிப்பாளர் வெளியிட்டார். ஆசியாவில் உள்ள பெரும்பாலான சந்தைகளில், இந்த கார் இந்தாண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் மறுஅறிமுகத்தின் உற்சாகத்தில் உள்ள ஹோண்டா இந்தியா, குறுகிய காலத்தில் நிறுத்தப்பட்ட ஹேட்ச்பேக்கான ஜாஸை, முதலில் மறுஅறிமுகம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இப்போது அக்கார்டு கூட திரும்பக் கொண்டு வரப்பட உள்ளது. விறுவிறுப்பான விற்பனையில் உள்ள சிட்டி மற்றும் அடுத்துவரவுள்ள அக்கார்டு ஆகிய இரண்டிற்கும் இடையே, இந்த வாகனத் தயாரிப்பாளரின் தரப்பில் வேறெந்த தயாரிப்பும் வெளியிடப்படவில்லை என்பதால், புதுப்பிக்கப்பட்ட சிவிக் காரின் வெளியீட்டிற்கு வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது. இது தவிர, சிவிக் காருக்கென ஒரு கூட்டம் ரசிகர்கள் நம் நாட்டில் உள்ள நிலையில், இதனுடன் ஒரு டீசல் தேர்வும் அளிக்கப்பட்டால், இந்த எண்ணிக்கையை வாகனத் தயாரிப்பாளரால் அதிகரித்துக் கொள்ள முடியும்.

இந்த புதிய சிவிக்-கை குறித்து பார்க்கும் போது, அதன் பாஸ்ட்பேக் வடிவமைப்பிற்கு (கூர்மையான நீண்ட ரூஃப்லைன்) பிறகு ஹோண்டாவினால் செய்யப்பட்டவைகளில் மிகவும் தடித்த மற்றும் அக்ரோஷமான சிவிக் இதுவாக தான் இருக்கும். ஒரு பாஸ்ட்பேக்காகவே, இந்த சேடனை கடந்தாண்டு அமெரிக்காவில், ஹோண்டா அறிமுகம் செய்தது. இதன் பண்புகளை குறித்து பார்க்கும் போது, இதன் அமெரிக்க பதிப்பில் இருப்பது போல முழு- LED ஹெட்லெம்ப்களை கொண்டிராமல், இந்த ஆசியான் மாதிரியில் டேடைம் ரன்னிங் LED-களுடன் கூடிய LED பிரஜெக்டர்களை கொண்டுள்ளது. அதேபோல, டெயில்லெம்ப்கள் மற்றும் LED-கள் கூட ஒத்தவையாக உள்ளது. உள்புற அமைப்பியல் கூட பெரும்பாலும் ஒரே மாதிரி தான் உள்ளது. இதில் 7-இன்ச் HD டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை கொண்டு, ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகியவை ஆதரிக்கப்படுகின்றன.

இந்தியாவில் ஹோண்டா மூலம் இது அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில், இயந்திரவியல் பகுதியில் இயல்பாக உள்ளிழுப்பு கொண்ட 1.8-லிட்டர் i-VTEC பெட்ரோல் என்ஜினை கொண்டிருக்கும். நமக்கு புதிய சிவிக் சேடன் அளிக்கப்பட்டால், டீசல் என்ஜின் என்பது தேர்விற்குரிய பட்டியலில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பெரும்பாலும் 1.6-லிட்டர் i-DTEC-யை கொண்டிருக்கலாம் என்று தெரிகிறது. அதேபோல உலகளவில் 10வது தலைமுறையைச் சேர்ந்த சிவிக் காரில் முதல் முறையாக ஹோண்டாவினால் அறிமுகம் செய்யப்படும் புதிய 1.5-லிட்டர் டர்போ VTEC-யை நம் நாட்டிற்கு அளிக்கப்படவும் வாய்ப்புள்ளது.

மேலும் வாசிக்க : இந்தூரில் ஹோண்டா புதிய டீலர்ஷிப் மையத்தை தொடங்கி உள்ளது .

was this article helpful ?

Write your Comment on Honda சிவிக்

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending சேடன் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • ஸ்கோடா ஆக்டிவா vrs
    ஸ்கோடா ஆக்டிவா vrs
    Rs.45 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜூல, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • ஆடி ஏ5
    ஆடி ஏ5
    Rs.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஆகஸ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா டைகர் 2025
    டாடா டைகர் 2025
    Rs.6.20 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    டிச்பர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • ஸ்கோடா சூப்பர்ப் 2025
    ஸ்கோடா சூப்பர்ப் 2025
    Rs.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    டிச்பர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மெர்சிடீஸ் eqe செடான்
    மெர்சிடீஸ் eqe செடான்
    Rs.1.20 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    டிச்பர், 2026: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience