சிட்ரோன் இந்தியா தனது புதிய பிராண்ட் அம்பாசிடராக எம்எஸ் தோனியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
published on மே 27, 2024 06:59 pm by sonny
- 31 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்த புதிய பார்ட்னர்ஷிப்பின் தொடக்க பிரச்சாரம் வரவிருக்கும் ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இந்திய ரசிகர்களை கவர்வதில் கவனம் செலுத்தும்
பல தகவல்கள் மற்றும் உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகளுக்குப் பிறகு சிட்ரோன் இந்தியா தனது பிராண்ட் தூதராக இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியை அறிவித்துள்ளது. பிரெஞ்சு வாகன உற்பத்தியாளரான சிட்ரோன் 2021 -ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் நுழைந்தது. தற்போது அதன் வரிசையில் 4 மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது, அவற்றில் 3 உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன.
ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு முன்னதாக பார்ட்னர்ஷிப் பிரச்சாரம் வெளியிடப்பட்டது. இதில் எம்எஸ் தோனி இடம்பெற்றிருந்த வீடியோ தேசிய கிரிக்கெட் அணிக்கு இந்திய ரசிகர்களின் ஆதரவைப் பற்றி விவாதிக்கிறது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி இந்த அறிவிப்பு குறித்து கருத்துத் தெரிவிக்கையில் "ஒரு தீவிர ஆட்டோமொபைல் ஆர்வலராக, அதன் கண்டுபிடிப்பு மற்றும் பொறியியல் சிறப்பிற்காக உலகளவில் கொண்டாடப்படும் சிட்ரோன் என்ற புகழ்பெற்ற பிராண்டுடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று கூறியிருக்கிறார்.
இந்தியாவில் சிட்ரோன் கார்கள்
ஸ்டெல்லாண்டிஸ் ஆட்டோமோட்டிவ் குழுமத்தின் துணை நிறுவனமான சிட்ரோன் ஆகஸ்ட் 2024-இல் இந்திய சந்தையில் தனது ஐந்தாவது மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது சிட்ரோன் பாசால்ட் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த வாகனம் கூபே போன்ற வடிவமைப்பு கூறுகளுடன் கிராஸ்ஓவர் எஸ்யூவி-யாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் உலகளவில் அறிமுகமானது. இந்தியா சார்ந்த மாடல் பற்றிய விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும் சிட்ரோன் C3 ஏர்கிராஸ் காம்பாக்ட் எஸ்யூவி-யுடன் பல வசதிகளை பெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மூலம் 110 PS மற்றும் 205 Nm வரை டார்க்கை உருவாக்கும். இது 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கும். அம்சங்களைப் பொறுத்தவரை பாசால்ட் மாடலில் 10.2-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 7-இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, ரியர் பார்க்கிங் கேமரா மற்றும் மேனுவல் ஏர் கண்டிஷனிங் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர், ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகன் போன்ற காம்பாக்ட் எஸ்யூவி-களுக்கு ஸ்டைலான மாற்றீட்டை வழங்கும் குறிக்கோளுடன், டாடா கர்வ்வ் போன்ற வாகனங்களுக்கு சவால் விடும் வகையில் பசால்ட் போட்டி அரங்கில் நுழையும். சிட்ரோன் இந்தியாவின் தற்போதைய வரிசையில் C3 ஹேட்ச்பேக், eC3 எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் மற்றும் C5 ஏர்கிராஸ் மிட்-சைஸ் எஸ்யூவி ஆகியவை இதில் அடங்கும்.