இந்தியாவில் மினி கார்கள் அஸ்சம்பிலிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
published on jul 29, 2015 12:45 pm by cardekho
- 10 பார்வைகள்
- ஒரு கருத்தை எழுதுக
டெல்லி: புதிதாக கிடைத்துள்ள தகவலின்படி பிஎம்டபுள்யூ நிறுவனம் தன்னுடைய மினி கன்ட்ரிமேன் கார் தயாரிப்பை (அஸ்சம்பிலிங்) தற்காலிகமாக நிறுத்தி உள்ளது. ஐரோபாவிற்கு வெளியே முதல் முறையாக இந்தியாவில் உள்ள தனது ஒரே சென்னை தொழிற்சாலையில் தான் பிஎம்டபுள்யூ இதுவரை தன்னுடைய மினி கார்களின் பாகங்களை இணைத்து அஸ்சம்பிலிங் பணியினை செய்து வந்தது.
இந்தியாவில் பிஎம்டபுள்யூ நிறுவனத்திற்கு சொந்தமான இந்த மினி கார்கள் முதலில் 2012 ம் ஆண்டில்அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு வரையிலான விற்பனையை பார்த்தால் வெறும் 1,123 கார்களே இதுவரை விற்பனை ஆகி உள்ளன. சந்தையில் போதுமான தேவை இல்லாததே இந்த தயாரிப்பு நிறுத்தத்திற்கான முக்கியமான காரணம் என்று அறியப்படுகிறது.
எப்படி இருப்பினும், பிஎம்டபுள்யூ நிறுவனமோ மாடலில் செய்யப்பட்ட மாறுதல்களே அடிப்படை காரணம் என்று கூறுகிறது. இப்போது இந்தியாவில் விற்கப்படும் மினி மாடல் கார்கள் முழுமையாக வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு உள்நாட்டில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும் (ஸிபியு) முறையில் தான் இதுவரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்த பிரபலமான மினி மாடல் கார்கள் தன்னுடைய நூறாவது சந்தையாக இந்தியாவில் அறிமுகமானது. ஆனால் எதிர் பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதுதான் உண்மை. இந்த நிலைமை மினி கார்களுக்கு மட்டுமல்ல. பியட் நிறுவனத்தின் பியட்500 மாடல் கார்களும், வோல்க்ஸ்வாகன் நிறுவனத்தின் பீட்டில் மாடல் கார்களும் கூட பெரும்பான்மையான வாடிக்கையாளர்களை கவர தவறி விட்டன என்று சொல்லலாம். இருந்தும் இந்த இரண்டு கார்களும் இந்த தலைமுறைக்கு ஏற்ப புது பொலிவுடப்பட்டு மீண்டும் களத்தில் இறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிஎம்டபுள்யூ நிறுவனம் இந்தியாவில் உள்ள தனது ஒரே தொழிற்சாலையான சென்னையில் உள்ள தொழிற்சாலையில் தன்னுடைய 1 சீரீஸ், 3 சீரீஸ், 3 சீரீஸ் கிரான் துரிஸ்மோ, 5 சீரீஸ், 7 சீரீஸ், எக்ஸ்1, எக்ஸ்3 மற்றும் எக்ஸ்5 மாடல்களைதயாரிதுக்கொண்டிருக்கிறது. முழு செய்தியைபடிக்க இங்கே க்ளிக் செய்யவும.
- New Car Insurance - Save Upto 75%* - Simple. Instant. Hassle Free - (InsuranceDekho.com)
- Sell Car - Free Home Inspection @ CarDekho Gaadi Store
0 out of 0 found this helpful