• English
    • Login / Register

    ரூ. 55.90 லட்சம் விலையில் Mini Cooper S ஜான் கூப்பர் ஒர்க்ஸ் பேக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

    மினி கூப்பர் எஸ் க்காக ஜனவரி 19, 2025 05:42 pm அன்று dipan ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 28 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    கூப்பர் S ஜான் கூப்பர் ஒர்க்ஸ் பேக் -ல் தொழில்நுட்ப ரீதியாக எந்த மாற்றங்களும் இல்லை. ஆனால் வெளிப்புற மற்றும் உட்புற வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

    Mini Cooper S JCW Pack launched At Auto Expo 2025

    • மினி கூப்பர் எஸ் ஜேசிடபிள்யூ பேக் ஹேட்ச்பேக் வரிசையில் புதிய டாப் வேரியன்ட் ஆகும்.

    • வெளிப்புறத்தில் முன்பக்க மற்றும் பின்புற பம்பர்களின் வடிவம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    • உட்புறத்தில் ரெட் ஆக்ஸென்ட்களுடன் புதிய ஆல் பிளாக் தீம் கொடுக்கப்பட்டுள்ளது.

    • வட்ட வடிவ OLED, HUD மற்றும் ஆட்டோ ஏசி ஆகியவை உள்ளன.

    • 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), ADAS மற்றும் 360 டிகிரி கேமரா ஆகிய பாதுகாப்பு வசதிகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

    • 7-ஸ்பீடு DCT ஆப்ஷன் உடன் 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் வருகிறது.

    • இதன் விலை ரூ 44.40 லட்சம் முதல் ரூ 55.90 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) உள்ளது.

    இந்தியாவில் அதன் நான்காம் தலைமுறை அவதாரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மினி கூப்பர் எஸ் இப்போது புதிய ஜான் கூப்பர் ஒர்க்ஸ் (JCW) பேக் வேரியன்ட்டை பெற்றுள்ளது. இதன் விலை ரூ. 55.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வேரியன்ட்டில் மெக்கானிக்கலாக எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. வெளிப்புறத்திலும் , உட்புறத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.  புதிய மினி கூப்பர் எஸ் JCW காரை பற்றி இங்கே பார்ப்போம்:

    காரில் மாற்றப்பட்டுள்ள விஷயங்கள் என்ன?

    Mini Cooper S JCW Pack front

    ஜான் கூப்பர் ஒர்க்ஸ் பேக் மூலமாக மினி கூப்பர் எஸ்-க்கு வித்தியாசமான வடிவமைப்பு பாணி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் வட்ட வடிவ LED ஹெட்லைட்கள் மற்றும் பிரபலமான யூனியன் ஜாக் டெயில் லைட் டிசைனுடன் ஒட்டுமொத்த தோற்றமும் ஒரே மாதிரியாக இருக்கும். காருக்கு ஸ்போர்ட்டி தோற்றத்தை கொடுக்க முன் மற்றும் பின்புற பம்பர்கள் ஆக்ரோஷமான கட்ஸ் மற்றும் ஃபோல்டுகள் கொடுக்கப்பட்டுள்ளனன. இருப்பினும் கிரில், மினி பேட்ஜ்கள், பம்ப்பர்கள், அலாய் வீல்கள் பிளாக் கலரில் உள்ளன. கிரில்லில் ஜான் கூப்பர் ஒர்க்ஸ் பேட்ஜ் கொடுக்கப்பட்டுள்ளது.

    Mini Cooper S JCW Pack interior

    டாஷ்போர்டு இருக்கைகள் மற்றும் சென்டர் ஆர்ம்ரெஸ்ட் ஆகியவற்றில் ரெட் ஆக்ஸென்ட்கள் மற்றும் லைட் எலமென்ட்களுடன் பிளாக் தீம் கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர மினி கூப்பர் எஸ் இன் உட்புறம் ஜான் கூப்பர் ஒர்க்ஸ் (ஜேசிடபிள்யூ) பேக்குடன் எந்த வித்தியாசத்தையும் பார்க்க முடியவில்லை.

    மினி கூப்பர் எஸ்: ஒரு கண்ணோட்டம்

    இந்தியாவில் நான்காவது தலைமுறை அவதாரத்தில் 2024 ஜூலையில் மினி கூப்பர் எஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. சற்று மாற்றியமைக்கப்பட்ட வெளிப்புற மற்றும் உட்புற வடிவமைப்புடன், இது ஜான் கூப்பர் ஒர்க்ஸ் பேக்கால் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. 

    இருப்பினும் அம்சத் தொகுப்பு வழக்கமான மாடலை போலவே உள்ளது. இதில் டச் ஸ்கிரீன், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே (HUD) மற்றும் ஆட்டோ ஏசி போன்ற 9.4-இன்ச் வட்ட OLED டிஸ்ப்ளே ஆகியவை உள்ளன. இது மல்டி கலர் ஆம்பியன்ட் லைட்ஸ் மற்றும் ஓட்டுநர் இருக்கைக்கு மசாஜ் ஃபங்ஷன் ஆகியவற்றை கொண்டுள்ளது.

    பாதுகாப்புக்காக மினி கூப்பர் எஸ் 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), ஆட்டோ ஹோல்ட் செயல்பாடு கொண்ட எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் லெவல்-1 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே கொடுக்கப்பட்டுள்ளன.

    மினி கூப்பர் எஸ்: பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்

    JCW பேக்குடன் கூடிய மினி கூப்பர் எஸ் வழக்கமான மாடலில் உள்ள அதே 2-லிட்டர் நான்கு சிலிண்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் இன்ஜினுன் இதில் உள்ளது. விரிவான விவரங்கள் பின்வருமாறு:

    இன்ஜின்

    2-லிட்டர் நான்கு சிலிண்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின்

    பவர்

    204 PS

    டார்க்

    300 Nm

    டிரான்ஸ்மிஷன்

    7-ஸ்பீடு DCT*

    டிரைவ்டிரெய்ன்

    ஃபிரன்ட் வீல் டிரைவ் (FWD)

    *DCT = டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்

    மினி கூப்பர் எஸ்: விலை மற்றும் போட்டியாளர்கள்

    Mini Cooper S JCW Pack rear

    வழக்கமான மினி கூப்பர் S -ன் விலை இப்போது ரூ.44.90 லட்சம் ஆக உள்ளது. மேலும் JCW பேக் வேரியன்ட் விலை ரூ.55.90 லட்சம் ஆக உள்ளது. மினி கூப்பர் எஸ்க்கு நேரடி போட்டியாளர்கள் இல்லை. ஆனால் மெர்சிடிஸ் பென்ஸ் GLA, BMW X1 மற்றும் ஆடி Q3 ஆகிய கார்களுக்கு மாற்றாக இருக்கும்.

    அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா

    ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

    was this article helpful ?

    Write your Comment on Mini கூப்பர் எஸ்

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience