எம்‌ஜி இசட்எஸ் இ‌வி நாளை அறிமுகமாக இருக்கிறது

published on ஜனவரி 24, 2020 01:37 pm by rohit for எம்ஜி இஸட்எஸ் இவி 2020-2022

  • 23 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஜனவரி 17 ஆம் தேதிக்கு முன்பு எஸ்யூவியை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு இது அறிமுக விலையில் கிடைக்கும்

MG ZS EV

  • 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி முதல், இந்த காருக்கான முன்பதிவு தொடங்கியது.

  • இது 44.5 கிலோவாட் மின்கல தொகுப்பு மூலம் இயக்கப்படும் (143பி‌எஸ் / 353என்‌எம்) மின்சார மோட்டாருடன் வருகிறது.

  • இது ஒரு முறை மின்னூட்டம் செய்தால் சுமார் 340 கி.மீ வரை செல்லும்.

  • இது இரண்டு வகைகளில் வழங்கப்படும்: வியப்பூட்டும் மற்றும் பிரத்தியேக வகைகள் ஆகும். 

  • இந்த காரின் விலை ரூபாய் 23 லட்சம் முதல் ரூபாய் 25 லட்சம் வரையிலும்  இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எம்.ஜி மோட்டார் அதனுடைய முதல் மாதிரியான ஹெக்டரை இந்தியாவில் நல்ல வரவேற்பைப் பெற்ற எஸ்யூவியாக மாற்றி இருக்கிறது. தற்போது, பிரிட்டிஷ் கார் உற்பத்தி நிறுவனம்  அதன் அனைத்து மின்சார எஸ்யூவியான இசட்எஸ் இவியை நாளை இந்திய சந்தைக்கு அறிமுகப்படுத்த இருக்கிறது. இது கடந்த ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி தனது இந்திய நாட்டுக்கான– தனிப்பட்ட அம்சங்களை முதன்முதலில் வெளியிட்டது.

MG ZS EV To Be Launched Tomorrow

இசட்எஸ் இவி யானது ஐபி67-மதிப்பிடப்பட்ட 44.5 கிலோவாட் அளவு இயக்கப்படும் மின்கல தொகுப்பு மற்றும் மின்சார மோட்டருடன் வருகிறது, இது 143பிஎஸ் அளவில் அதிகபட்ச ஆற்றலையும் 353என்எம் உச்சநிலை முறுக்கு விசையையும்  வெளிப்படுத்துகிறது. எம்.ஜி.யின் அனைத்து-மின்சார  எஸ்யுவியானது அதி விரைவான மின்னேற்றியைப் பயன்படுத்தி 50 நிமிடங்களில் 80 சதவீதம் வரை மின்னேற்றம்  செய்யலாம். எம்.ஜி.யின் உள் சோதனை தரவுகளின்படி இசட்எஸ் இவி ஒரு முறை மின்னேற்றம் செய்தால் சுமார் 340 கி.மீ. வரை செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

மேலும் படிக்க: எம்‌ஜி இசட்எஸ் இ‌வி க்கு எதிர்பார்க்கப்படும் விலைகள்: இது ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் காரை விட விலை குறைவாக இருக்குமா?

MG ZS EV To Be Launched Tomorrow

எம்ஜி யானது இரண்டு வகைகளில் இசட்எஸ் இவி யை வழங்குகிறது: வியப்பூட்டும் மற்றும் பிரத்தியேக. சிறப்பம்சங்களைப் பொறுத்தவரை, அனைத்து-மின்சார எஸ்யூவியானது தானியங்கி ஒளி வீழ்த்தும் முகப்பு விளக்குகள், 8 அங்குல தொடுதிரை ஒளிபரப்பு அமைப்பு, வேகக் கட்டுப்பாடு  மற்றும் டயர் அழுத்தக் கண்காணிப்பு அமைப்பு ஆகியவை அடிப்படை வகையில் இருப்பது போலவே வழங்கப்படுகிறது. இருப்பினும், வெளிப்புறக் காட்சியை ரசிப்பதற்கான மேற்கூரை, பிஎம் 2.5 வடிப்பானுடன் கூடிய ஒரு காற்று சுத்திகரிப்பான் மற்றும் இசிம்முடன் இணைக்கப்பட்ட ஐஸ்மார்ட்  தொழில்நுட்பம் போன்ற தனிச்சிறப்பு மிக்க அம்சங்களைக் கொண்டுள்ளது.

தொடர்புடையது: டாடா நெக்ஸன் இவி போட்டியாக எம்ஜி இசட்எஸ் இவி போட்டியாக ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக்: சிறப்பம்சங்கள் குறித்த ஒப்பீடு

MG ZS EV

தொடக்கத்தில், டெல்லி-என்சிஆர், ஹைதராபாத், மும்பை, அகமதாபாத் மற்றும் பெங்களூரு ஆகிய ஐந்து நகரங்களில் மட்டுமே இசட்எஸ் இவி விற்பனை செய்யப்படும். இதன் விலை ரூபாய் 23 லட்சம் முதல் ரூபாய் 25 லட்சம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைக்கு அதன் ஒரே போட்டியாளர் ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் கார் மட்டுமே.

 

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது எம்ஜி ZS EV 2020-2022

Read Full News

explore similar கார்கள்

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
  • க்யா ev9
    க்யா ev9
    Rs.80 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜூன, 2024
  • போர்ஸ்சி தயக்கன் 2024
    போர்ஸ்சி தயக்கன் 2024
    Rs.1.65 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜூன, 2024
  • வோல்வோ ex90
    வோல்வோ ex90
    Rs.1.50 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜூன, 2024
  • மினி கூப்பர் எஸ்இ 2024
    மினி கூப்பர் எஸ்இ 2024
    Rs.55 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜூன, 2024
  • மெர்சிடீஸ் eqa
    மெர்சிடீஸ் eqa
    Rs.60 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜூல, 2024
×
We need your சிட்டி to customize your experience