• English
  • Login / Register

இந்தியா முழுவதும் 14 பிரீமியம் 'MG செலக்ட்' டீலர்ஷிப்களை MG துவங்கவுள்ளது

எம்ஜி சைபர்ஸ்டெர் க்காக பிப்ரவரி 14, 2025 09:38 pm அன்று kartik ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

  • 60 Views
  • ஒரு கருத்தை எழுதுக

'செலக்ட்' பிராண்டிங்கின் கீழ் MG அறிமுகப்படுத்தும் முதல் இரண்டு கார்கள் - இந்தியாவின் முதல் ரோட்ஸ்டர் மற்றும் பிரீமியம் MVP ஆகும்.

கார் தயாரிப்பாளரான MG செலக்ட்டின் ஷோரூம்கள் இந்தியா முழுவதும் விரிவடைய உள்ளது, மேலும் பல நகரங்களில் விரைவில் அதன் கிளைகளைத் திறக்கவுள்ளது. முதல் கட்டமாக, இந்த இலக்கை அடைய 12 டீலர்களுடன் கூட்டு சேர்ந்து 13 நகரங்களில் அதன் செயல்பாடுகளைத் துவங்க MG திட்டமிட்டுள்ளது. செலக்ட் பிராண்ட் இந்திய சந்தையில் பிரீமியம் மாடல்களை அறிமுகப்படுத்துவதற்கான நுழைவாயிலாகச் செயல்படும், இது முற்றிலும் எலெக்ட்ரிக் காரன MG சைபர்ஸ்டர் ரோட்ஸ்டர் மற்றும் பிரீமியம் எலக்ட்ரிக் MVP M9 உடன் தொடங்குகிறது. MG-யின் விரிவாக்கத்தின் முதல் கட்டத்தில் உள்ளடக்கப்பட்ட நகரங்கள் மற்றும் டீலர்கள் பற்றிய விரைவான பார்வையும், செலக்ட் பிராண்டிங்கின் கீழ் அறிமுகமாகவிருக்கும்  முதல் இரண்டு மாடல்களைப் பற்றிய தகவல்களும் பின்வருமாறு:

நகரங்கள் மற்றும் டீலர்ஷிப்கள் 

 

 

நகரங்கள் 

 

 

டீலர்களின் பெயர்கள்

 

 

மும்பை

 

 

க்ரிஷிவ் ஆட்டோ

 

 

டெல்லி

 

 

சிவா மோட்டோகார்ப்

 

 

பெங்களூரு பிராந்தியம் 1

 

 

ஜூபிலண்ட் மோட்டார் ஒர்க்ஸ்

 

 

பெங்களூரு பிராந்தியம் 2

 

 

ஐகோனிக் ஆட்டோமோட்டிவ்ஸ்

 

 

ஹைதராபாத்

 

 

ஜெயலக்ஷ்மி மோட்டார்ஸ்

 

 

புனே

 

 

நோவா செலக்ட்

 

 

சென்னை

 

 

FPL வெஹிகிள்ஸ்

 

 

அகமதாபாத்

 

 

ஏரோமார்க் கார்ஸ்

 

 

கொல்கத்தா

 

 

ஏரோமார்க் கார்ஸ்

 

 

கொச்சி

 

 

கோஸ்டல் செலக்ட்

 

 

சண்டிகர்

 

 

கிருஷ்ணா மோட்டார்

 

 

தானே

 

 

தேஜ்பால் மோட்டார்ஸ்

 

 

குருகிராம்

 

 

ஜூபிலண்ட் மோட்டார்ஒர்க்ஸ்

 

 

சூரத்

 

 

ஓபுலண்ட் ஆட்டோ

இதன் முதல் கட்டமாக, MG-யின் பிரீமியம் 'செலக்ட்' டீலர்ஷிப்கள் 13 நகரங்களில் நிறுவப்படும், மேலும் இது நாடு முழுவதும் மொத்தம் 14 டீலர்ஷிப்களை உள்ளடக்கும். இந்த நெட்வொர்க்கில் வடக்கில் டெல்லி, சண்டிகர் மற்றும் குருகிராம்; மேற்கில் புனே, மும்பை மற்றும் தானே; கிழக்கில் கொல்கத்தா; மற்றும் பெங்களூருவில் இரண்டு டீலர்ஷிப்கள், சென்னை மற்றும் கொச்சியில் தலா ஒன்று ஆகியவை அடங்கும். இந்த விரிவாக்கம் நாடு முழுவதும் உள்ள முக்கியப் பிராந்தியங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் கவரேஜை உறுதி செய்கிறது.

'செலக்ட்' பிராண்டின் கீழ் வரும் கார்கள்

தற்போதைய நிலவரப்படி, 'செலக்ட்' பிராண்டிங்கின் கீழ் இரண்டு மாடல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன: MG சைபர்ஸ்டர் மற்றும் MG M9, 2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் மேலும் இரண்டு கார்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன. 'செலக்ட்' வரிசையில் எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமல்ல, பிளக்-இன் ஹைப்ரிட் கார்கள் மற்றும் வலுவான ஹைப்ரிட்களும் அடங்கும் என்று MG முன்பே அறிவித்தது. உறுதிப்படுத்தப்பட்ட இரண்டு மாடல்கள் பற்றிய விரைவான தகவல்கள் பின்வருமாறு:

MG சைபர்ஸ்டர்

MG Cyberster Front Left Side

MG சைபர்ஸ்டர் இந்தியாவில் MG-யின் முதல் ஆல்-எலக்ட்ரிக் ரோட்ஸ்டர் காராக இருக்கும். இது 77 கிலோவாட் பேட்டரி பேக் மூலம் இயக்கப்படுகிறது, இது WLTP- ஆல் கிளைம் செய்யப்படும் 443 கிலோ மீட்டர் ரேஞ்ஜை வழங்குகிறது. EV 510 PS மற்றும் 725 Nm டார்க்கை வழங்கும் அதன் டூயல்-மோட்டார் செட்-அப் அதற்கான மதிப்பை மேலும் கூட்டுகிறது, வெறும் 3.2 வினாடிகளில் 0-100 கிமீ/மணி வேகத்தை எட்டும் குறிப்பிடத்தக்க ஆற்றலைக் கொண்டுள்ளது. இதன் ஆரம்ப விலை சுமார் ரூ. 80 லட்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் பேட்டரி-ஆஸ்-எ-சர்வீஸ் (BaaS) ஆப்ஷனுடன் வருகிறது, மேலும் இதன் விலை தோராயமாக ரூ. 50 லட்சமாகக் குறைக்கப்படலாம். ரோட்ஸ்டருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கியுள்ள நிலையில் மார்ச் 2025-இல் இதன் அறிமுகம் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பார்க்க: BYD Sealion 7-இன் எக்ஸ்டிரியர் கலர் ஆப்ஷன்களைப் பற்றி அதன் படங்கள் மூலம் விரிவாகத் தெரிந்துகொள்ளுங்கள்

MG M9

MG MIFA9 Front Left Side

செலக்ட் பேனரின் கீழ் அறிமுகப்படுத்தப்படும் இரண்டாவது மாடல் இந்த M9 ஆகும், இது இந்தியாவில் ஆட்டோ எக்ஸ்போ 2025-இல் அறிமுகமானது. உலகளவில் மிஃபா 9 என்று அழைக்கப்படும் இந்த ஆல்-எலக்ட்ரிக் MPV, முன் மற்றும் இரண்டாவது வரிசை சீட்களுக்கான காற்றோட்டம், வெப்பமாக்கல் மற்றும் மசாஜ் முறைகள் உள்ளிட்ட பயணிகளின் வசதிக்காக பிரத்தியோகமாக டிசைன் செய்யப்பட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது. இது 90 கிலோவாட் பேட்டரி பேக்கால் இயக்கப்படுகிறது. இது 430 கிலோ மீட்டர் ரேஞ்ஜை வழங்குகிறது, மேலும் 245 PS மற்றும் 350 Nm டார்க்கை உருவாக்கும் சிங்கள் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. இது முன் வீல்களுக்கு அதிக சக்தியை வழங்குகிறது. M9-இன் விலை ரூ.70 லட்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது மார்ச் 2025-இல் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MG செலக்ட் டீலர்ஷிப்கள் மற்றும் வரவிருக்கும் மாடல்களான சைபர்ஸ்டர் மற்றும் M9 MPV பற்றி உங்கள் கருத்துகள் என்ன என்பதைக் கீழே உள்ள கமெண்ட்ஸ் பிரிவில் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளைப் பெற கார்தேகோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

was this article helpful ?

Write your Comment on M g cyberster

explore similar கார்கள்

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

டிரெண்டிங் எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
×
We need your சிட்டி to customize your experience