பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 -ல் MG 7 Trophy வெளியிடப்பட்டுள்ளது
dipan ஆல் ஜனவரி 19, 2025 08:32 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
- 33 Views
- ஒரு கருத்தை எழுதுக
MG 7 செடான் 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் 265 PS மற்றும் 405 Nm அவுட்புட்டை கொடுக்கிறது.
-
ஸ்லீக்காரான எல்இடி ஹெட்லைட்கள், 19-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் ஆக்டிவ் ஸ்பாய்லர் ஆகியவற்றுடன் நேர்த்தியான வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
-
உள்ளே இது லெதரெட் அப்ஹோல்ஸ்டரி மற்றும் டூயல்-டோன் கேபினுடன் கூடிய ஸ்போர்ட்டியான சீட்களுடன் வருகிறது.
-
12.3-இன்ச் டச் ஸ்கிரீன், 10.25-இன்ச் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவற்றைப் கொண்டுள்ளது.
-
பாதுகாப்புக்காக பல ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் ADAS ஆகியவற்றுடன் வருகிறது.
-
விலை ரூ.40 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் பல நிறுவனங்கள் கார்களை அறிமுகம் செய்துள்ளன. அந்த வரிசையில் எம்ஜி நிறுவனம் இந்தியாவில் MG 7 டிராபி செடானை வெளிப்படுத்தியுள்ளது. MG செடான் ஒரு நேர்த்தியான உடல் பாணி, ஆடம்பரமான மற்றும் அம்சம் நிறைந்த உட்புறம் மற்றும் சக்திவாய்ந்த பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. எம்ஜி 7 டிராபி வழங்கும் அனைத்தையும் விரிவாகப் பார்ப்போம்:
வெளிப்புறம்
MG 7 டிராபியின் வெளிப்புற வடிவமைப்பு நேர்த்தியானதாக உள்ளது. பல ஆக்ரோஷமான கட்ஸ் மற்றும் ஃபோல்டுகளை கொண்டுள்ளது. எம்ஜி 7 டிராபி டி-வடிவ LED டிஆர்எல்களுடன் கூடிய நேர்த்தியான LED ஹெட்லைட்கள் மற்றும் சில சில்வர் எலமென்ட்களை கொண்ட கிரில்லை கொண்டுள்ளது. போனட் முன்பக்கமாக சாய்ந்து அதிக ஏரோடைனமிக் நிலைப்பாட்டை காருக்கு கொடுக்கிறது.
பக்கவாட்டில் இது 19-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் டோர்களின் கீழ் பகுதியில் பாடி கிளாடிங்குடன் வருகிறது. ஜன்னல்கள் ஃபிரேம் இல்லாததாக வடிவமைக்கப்பட்டுள்ளன மற்றும் அவற்றைச் சுற்றி குரோம் ஃபினிஷ் கொடுக்கப்பட்டுள்ளது.
பின்புறம் ஒரு பெரிய டெயில்கேட் பொருத்தப்பட்ட ஆக்டிவ் ஸ்பாய்லர், கனெக்டட் எல்இடி டெயில் லைட் செட்டப் மற்றும் செடானின் இருபுறமும் இரண்டு எக்ஸாஸ்ட் டெயில்பைப்புகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. MG 7 டிராபிக்கு ஒரு ஸ்போர்ட்டி அப்பீல் கொடுக்க செடானின் கீழ் பகுதி பிளாக்டு அவுட் செய்யப்பட்டுள்ளது.
இன்ட்டீரியர்
செடானின் உட்புற வடிவமைப்பும் ஸ்போர்ட்டியாக உள்ளது. உள்ளே எம்ஜி 7 டிராபி பந்தய இருக்கைகளுடன் வருகிறது. அவை லெதரெட் அப்ஹோல்ஸ்டரி மற்றும் டூயல்-டோன் கேபின் தீம் ஆகியவற்றைக் கொண்டுள்ளன.
டேஷ்போர்டில் 12.3-இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே உள்ள ஒரு இன்டெகிரேட்டட் பேனல் உள்ளது. இது 3-ஸ்போக் ஸ்டீயரிங் வீலை அதன் ஸ்போர்ட்டி தன்மையை சேர்க்க ஃபிளாட் மேல் மற்றும் கீழ் பகுதிகளை கொண்டுள்ளது. மெர்சிடிஸ்-ஏஎம்ஜி கார்களில் நாம் பார்ப்பது போன்ற சூப்பர்ஸ்போர்ட் பட்டனுடன் இதுவும் வருகிறது. சென்டர் கன்சோலில் சில்வர் ஃபினிஷ் உள்ளது. கியர் லீவர், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் பிற கன்ட்ரோல்களும் உள்ளன.
வசதிகள் மற்றும் பாதுகாப்பு
டூயல் ஸ்கிரீன்களை தவிர எம்ஜி டிராபியில் பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், 9-ஸ்பீக்கர் போஸ் ஆடியோ சிஸ்டம், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே மற்றும் 6-வே எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் சீட் ஆகியவை உள்ளன.
பாதுகாப்பைப் பொறுத்தவரையில் இது மல்டி ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் ரியர் கொலிஷன் டிடெக்ஷன் மற்றும் லேன் கீப் அசிஸ்ட் போன்ற சில அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) போன்றவற்றுடன் வருகிறது.
பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
MG 7 செடான் 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் வருகிறது. அதன் விரிவான விவரங்கள் இங்கே:
இன்ஜின் ஆப்ஷன் |
2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் |
பவர் |
265 PS |
டார்க் |
405 Nm |
டிரான்ஸ்மிஷன் |
9-ஸ்பீடு MT^ |
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
MG 7 ஆனது டொயோட்டா கேம்ரி மற்றும் இந்தியாவிற்கு வரவிருக்கும் ஸ்கோடா சூப்பர்ப் -க்கு மிகவும் விலை குறைவான போட்டியாளராக இருக்கும். இதன் விலை சுமார் ரூ. 40 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.