புதிய 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் இஞ்சின் பொருத்தப்பட்ட பலேனோ கார்களை மாருதி சுசுகி சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தி வருகிறது.

published on டிசம்பர் 30, 2015 11:50 am by raunak

  • 15 Views
  • ஒரு கருத்தை எழுதுக

பலேனோ கார்களின் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் வெர்ஷன் VW போலோ GT TSI மற்றும் அபர்த் புன்டோ கார்களுடன் போட்டியிடும்

புது டெல்லி:

இந்தியாவில் பலேனோ கார்களை அறிமுகப்படுத்திய போது 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் பொருத்தப்பட்ட ஆப்ஷனை இந்தியாவில் மாருதி சுசுகி அறிமுகப்படுத்தவில்லை. ஆனால் இந்த டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் வெர்ஷன் பலேனோ கார்கள் சர்வதேச சந்தையில் கிடைக்கிறது. இப்போது இந்த கார்கள் தென்னிந்தியாவில் முழுதும் மறைக்கப்பட்டு சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டிருந்த போதும் , கருப்பு நிறத்திலும் ( இப்போது உள்ள பலேனோ கார்களில் கருப்பு நிற ஆப்ஷன் இல்லை ) நமது உளவு படங்களில் சிக்கியது. பெர்பார்மன்ஸ் ஹேட்ச்பேக் பிரிவு கார்களின் மீது வாடிக்கையாளர்களின் கவனம் திரும்பி உள்ள நிலையில் , மாருதி சுசுகி நிறுவனம் இந்த புதிய பெட்ரோல் வெர்ஷன் பலேனோ கார்களை அடுத்த வருடம் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதைக்கு இந்தியாவில் மட்டுமே பலேனோ கார்கள் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் , இந்த 1.0 பூஸ்டர்ஜெட் பெட்ரோல் எஞ்சின்கள் ஏற்றுமதி தேவைக்காக மட்டுமே இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வருகிறது என்று யூகிக்கப்படுகிறது. இந்த புதிய சக்தி வாய்ந்த என்ஜினுடன் கூடிய பலேனோ கார்கள், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் 2016 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப் படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து உள்ளன.

நேரடி இன்ஜக்க்ஷன் மற்றும் டர்போ சார்ஜிங் அம்சங்களை உள்ளடக்கிய இந்த 998 cc 3- சிலிண்டர் மோட்டார் 110 பிஎச்பி ஆற்றலையும் , அதிகபட்சமாக 170 nm அளவுக்கு டார்கையும் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இந்த என்ஜின் சக்தி பற்றிய புள்ளி விவரங்கள் போலோ GT TSI கார்களின் என்ஜின் சக்தியைப் போலவே இருந்தாலும் போலோ கார்களில் உள்ளது போல் இல்லாமல் இந்த பலேனோ கார்களில் 5 - வேக மேனுவல் ( கைகளால் இயக்கக்கூடிய ) ட்ரேன்ஸ்மிஷன் ( கியர் அமைப்பு ) பொருத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த பூஸ்டர்ஜெட் வெர்ஷன் பலேனோ கார்களில் 16-அங்குல ரேடியல் பொருத்தப்பட்டுள்ளது மட்டுமின்றி தற்போது மாருதி தயாரிப்புக்களில் பயன்படுத்தப்பட்டு வரும் அல்லாய் சக்கரங்களை விட நன்கு மேம்படுத்தப்பட்ட அல்லாய் சக்கரங்கள் இந்த புதிய பூஸ்டர்ஜெட் வெர்ஷன் பலேனோ கார்களில் பொருத்தப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

மேலும் வாசிக்க

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingகார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience