புதிய மாருதி சுசுகி டிசயர் டீசல் ஆட்டோமேடிக் கார்: ரூ. 8.39 லட்சம் என்ற விலையில் அறிமுகம்
மாருதி டிசையர் 2017-2020 க்காக ஜனவரி 08, 2016 10:42 am அன்று akshit ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 19 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்தியாவின் வாகன சந்தையில் முன்னணி நிறுவனமான மாருதி சுசுகி, பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஸ்விஃப்ட் டிசயர் காம்பாக்ட் சேடான் காரின் ஆட்டோ கியர் ஷிப்ட் (AGS) வெர்ஷனை, புத்தாண்டுப் பரிசாக அறிமுகப்படுத்தி உள்ளது. மாருதியின் முதல் டீசல் மாடல் என்ற பெருமையுடன் நான்காவதாக AGS அமைப்பு பொருத்தப்பட்டுள்ள கார் என்ற பெயரும் டிசயருக்கு கிடைத்துள்ளது. இதன் உயர்தர ZDi வேரியண்ட்டின் விலை ரூ. 8.39 லட்சங்கள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
செலேரியோ மற்றும் வேகன் ஆர் போன்ற கார்களில் உள்ள மாக்னெட்டி மாரெல்லி நிறுவனத்தின் AMT அமைப்பு, டிசயர் AGS மாடலிலும் இடம் பிடித்துள்ளது. கிளட்ச் மற்றும் ஷிஃப்ட் ஆபரேஷன்களை எளிதில் கையாள, AGS தொழில்நுட்பத்தில் ஒரு இண்டெலிஜெண்ட் ஷிஃப்ட் கண்ட்ரோல் ஆக்சுவேட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பில், கிளட்ச் மற்றும் ஷிஃப்ட் ஆபரேஷன்களை கட்டுப்படுத்த ஒரு ஆக்சுவேட்டர் மற்றும் கண்ட்ரோலர் இடம்பெற்றுள்ளன. இவை, கிளட்ச் கண்ட்ரோலை இதமாக ஒருங்கிணைப்பத்தோடு மட்டுமல்லாமல், கியர் மாற்றுவதையும் மென்மையாக்குகின்றன. மேலும், இந்த அமைப்பு ECU காலிப்ரேஷனை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்கின்றது. சாதாரண கியர் பாக்ஸ்களை ஒப்பிடும் போது, கியர் மாற்றும் நேரம் இதில் குறைவாக உள்ளது.
75 PS சக்தி மற்றும் அதிகபட்சமாக 190 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் அதே 1.3 லிட்டர் DDiS இஞ்ஜின், இந்த வெர்ஷனிலும் பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு முன் வந்த மேனுவல் மாடல் போலவே, AGS அமைப்புடன் வரும் புதிய டிசயர் மாடலும் 26.59 kmpl மைலேஜைக் கொடுக்கும் என்று, இந்த கார் தயாரிப்பாளர் குறிப்பிடுகிறார்.
மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மார்கெட்டிங் அண்ட் சேல்ஸ் பிரிவின் எக்ஸிக்யூடிவ் டைரக்டரான திரு. R.S. கல்சி, அறிமுக நிகழ்ச்சியில் பேசும் போது, “எங்கள் வாடிக்கையாளர்கள் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரத்தில் எளிதாகவும், சுமுகமாகவும் காரை ஓட்டி சமாளிக்க, இரண்டு பெடல் தொழில்நுட்பத்தில் வரும் ஆட்டோ கியர் ஷிஃப்ட் அமைப்பு உதவும். எரிபொருள் சிக்கனத்தில் எந்த வித சமரசமும் இல்லாமல், கவர்ச்சியான விலையில் இத்தகைய வசதியை நாங்கள் அவர்களுக்குத் தருகிறோம். மாருதி நிறுவனம், இந்த AGS தொழில்நுட்பத்தை முதல் முறையாக செலேரியோ காரில் அறிமுகப்படுத்தியது. தற்போது, ஆல்டோ K10 மற்றும் வேகன் ஆர் போன்ற கார்களிலும் இது இணைக்கப்பட்டுள்ளது,” என்று கூறினார்.
“இந்தியாவில் உள்ள வெற்றிகரமான கார்களில் டிசயர் மாடலும் ஒன்று. இப்போது ஆட்டோ கியர் ஷிஃப்ட் டெக்னாலஜி பொருத்தப்பட்டுள்ளதால், இது மேலும் கவர்ச்சிகரமாக இருக்கும்,” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
டிசயர் AGS அமைப்பு உயர்தர ZDi வேரியண்ட்டில் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு முன், டீசல் ஆட்டோமேடிக் காம்பாக்ட் சேடான் பிரிவில், டாடா ஜெஸ்ட் காரில் மட்டுமே AGS அமைப்பு இருந்தது. இனி, மாருதி டிசயர் டாடா ஜெஸ்ட்டுடன் சரிக்கு சமமாகப் போட்டியிடும்.
இதையும் படியுங்கள்