மாருதி சுசுகி நிறுவனம் ஸ்விப்ட் மற்றும் எஸ் - க்ராஸ் கார்களின் AMT வெர்ஷன்களை அறிமுகப்படுத்துமா ?
published on நவ 30, 2015 05:08 pm by sumit
- 19 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர் :
தானியங்கி ட்ரேன்ஸ்மிஷன் (ஆட்டோமேடிக் ட்ரேன்ஸ்மிஷன் ) தொழில்நுட்பம் அறிமுகமானதில் இருந்தே வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தியாவின் மிகப் பெரியதும் பிரபலமானதும் ஆன மாருதி சுசுகி நிறுவனம் தங்களது அனைத்து பிரிவு கார்களிலும் இந்த AMT தொழில்நுட்பத்தை புகுத்த ஆர்வம் காட்டி வருகிறது. இது பற்றி கருத்து தெரிவிக்கையில், மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சி.வி. ராமன் , இந்த இரண்டு பெடல் தொழில் நுட்பம் என்று அழைக்கப்படும் AMT ட்ரான்ஸ்மிஷன் தொழில்நுட்பம் கொண்ட வெர்ஷன் ஒன்றை தனது அனைத்து பிரிவு கார்களிலும் பொருத்துவதற்கான ஆயத்த வேலையை மாருதி சுசுகி நிறுவனம் தொடங்கி விட்டதாகவும் வாடிக்கையாளருக்கு கூடுதல் ஆப்ஷன் விரைவில் கிடைக்கும் என்றும் கூறினார். மேலும் அவர், மேனுவல் ட்ரேன்ஸ்மிஷன் வசதியை விட இந்த தானியங்கி ட்ரேன்ஸ்மிஷன் வசதி கூடுதல் விலையுடன் இருப்பதை முடிந்த வரை குறைத்து அனைத்து தரப்பட்ட வாடிக்கையாளர்களும் வாங்குகின்ற அளவுக்கு குறைந்த விலையில் இந்த தொழில்நுட்பத்தை வழங்கவேண்டும் என்றும் மாருதி முயன்று வருகிறது என்றும் கூறினார்.
மாருதி சுசுகி நிறுவனம் தற்போது தன்னுடைய ஆல்டோ கே10, செலீரியோ, ரிட்ஸ், ஸ்விப்ட் டிசையர் ஆகிய கார்களில் இந்த ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் அமைப்பு கொண்ட வெர்ஷன்களை வெளியிட்டு வருகிறது. இந்த வரிசையில் அடுத்தப்படியாக ஸ்விப்ட் மற்றும் S -கிராஸ் கார்களில் ஐரோப்பிய சந்தைக்கான மாடல்களில் உள்ளது போன்ற இந்த CVT யூனிட் பொருத்தப்படலாம் என்றும் தெரிய வருகிறது. இதில் மிகவும் எதிர்பார்க்கப்படுவது அதிகமான சந்தைப் பங்கை (மார்கெட் ஷேர் ) கொண்டுள்ள ஸ்விப்ட் கார்களே ஆகும். மேக்னடி மரேலி ( மாருதி நிறுவனத்திற்கான AMT சப்ளையர் ) சமீபத்தில் மனேசரில் ஒரு தொழிற்சாலையை தொடங்கி உள்ளனர். அது மாருதி நிறுவனத்திற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று தெரிகிறது. மாருதி நிறுவனம் இந்த AMT தொழில்நுட்ப அறிமுகத்திற்கான எந்த விதமான காலக் கெடுவையும் சொல்லவில்லை என்றாலும் , இந்த க்ளட்ச் பயன்பாடு இல்லாத புதிய தொழில்நுட்பம் பெற்று வரும் வேகமான வளர்ச்சியை பார்க்கும் போது மாருதி நிறுவனம் வெகு விரைவில் இந்த AMT வெர்ஷன்களை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வாசிக்க
0 out of 0 found this helpful