சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

Maruti Suzuki eVX எலெக்ட்ரிக் கான்செப்ட் காரின் இன்டீரியர் விவரங்கள் வெளியாகியுள்ளன

மாருதி இ விட்டாரா க்காக அக்டோபர் 06, 2023 02:21 pm அன்று rohit ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவில் மாருதி சுஸூகியின் முதல் EV மாடலாக இருக்கும், இது 2025 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • 2023 ஆட்டோ எக்ஸ்போவில் இது அறிமுகம் செய்யப்பட்டது.

  • ஜப்பான் மொபிலிட்டி ஷோவில் மேலும் மேம்படுத்தப்பட்ட பதிப்பு காட்சிப்படுத்தப்படும்.

  • உட்புறம் மிமிமலிஸ்ட் ஆக வடிவமைக்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது; தனித்துவமான எலமென்ட்களில் ஒருங்கிணைந்த டிஸ்ப்ளேக்கள் மற்றும் யோக் போன்ற ஸ்டீயரிங் வீல் ஆகியவை அடங்கும்.

  • வெளியே, இது இப்போது முன்புறம் மற்றும் பின்புறத்தில் திருத்தப்பட்ட LED லைட்டிங் செட்டப்பை பெறுகிறது.

  • 60kWh பேட்டரி பேக் உறுதி செய்யப்பட்ட நிலையில் 550 கி.மீ ரேன்ஜ் வரை பயணம் செய்ய முடியும் என கூறப்பட்டுள்ளது.

  • இந்தியாவில் விலை ரூ.25 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்கலாம்.

இந்த மாத இறுதியில் திட்டமிடப்பட்டுள்ள ஜப்பானிய மொபிலிட்டி ஷோவுக்கு முன்னதாக, கான்செப்ட் வடிவத்தில் புதிய தலைமுறை சுஸூகி ஸ்விஃப்ட் காரை சமீபத்தில்தான் நம்மால் பார்க்க முடிந்தது. eVX எலெக்ட்ரிக் எஸ்யூவி கான்செப்ட்டின் மிகவும் மெருகூட்டப்பட்ட பதிப்பையும் மாருதி காட்சிப்படுத்தியுள்ளது . ஆனால் நீங்கள் அதை நேரடியாகப் பார்ப்பதற்கு முன்பு, அதன் இன்டீரியரை பற்றிய முதல் பார்வை ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

கேபினின் கவரக்கூடிய அம்சங்கள்

eVX கான்செப்ட்டின் கேபின் மினிமலிஸ்ட் தோற்றத்தை கொண்டுள்ளது, ஒருங்கிணைந்த டிஸ்ப்ளேக்கள் (ஒன்று இன்ஸ்ட்ருமென்டேஷனுக்காகவும் மற்றொன்று இன்ஃபோடெயின்மெண்ட்டிற்காகவும்) மைய மேடையில் டாஷ்போர்டின் மேல் நிற்கின்றன. AC வென்ட்டுகளுக்கு இடமளிக்கும் நீண்ட செங்குத்து ஸ்லாட்டுகள், யோக் போன்ற 2-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் மற்றும் டிரைவ் மோடுகளுக்கான சென்டர் கன்சோலில் ரோட்டரி டயல் நாப் ஆகியவை பிற சிறப்பம்சங்களாகும். இருப்பினும், இந்த வடிவமைப்பை குறைவாகவே கவனத்தில் எடுத்துக் கொள்ளுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம், ஏனெனில் இது ஒரு கான்செப்ட் வடிவில் மட்டுமே உள்ளது மற்றும் இது ஏற்கனவே ஒரு ஸ்பை புகைப்படத்தில் காணப்பட்டதைப் போல உற்பத்திக்கான தனிப்பட்ட மாடலிலிருந்து பெரிய அளவில் வேறுபாடாக இருக்கும்.

வெளியில் ஏதாவது மாற்றம் உள்ளதா?


இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி -யில் மெலிதான LED ஹெட்லைட்டுகள் மற்றும் DRL -கள், முக்கோண எலமென்ட் உடன் பெரிய பம்பர்கள் கொண்ட புதிய வடிவிலான முகப்புத் தோற்றத்துடன் உள்ளது.

இதன் முன்புறம் பெரிய அலாய் சக்கரங்களால் நிரப்பப்பட்ட வளைந்த ஆர்ச்சுகள் மற்றும் ஃப்ளஷ்-ஃபிட்டிங் டோர் ஹேண்டில்களை கொண்டுள்ளது. பின்புறத்தில், புதுப்பிக்கப்பட்ட DRL லைட் சிக்னேச்சரை பிரதிபலிக்க 3-பீஸ் லைட்டிங் உறுப்புடன் கூர்மையான இணைக்கும் டெயில்லைட்டுகள் மற்றும் ஒரு பெரிய ஸ்கிட் பிளேட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இதையும் பாருங்கள்: புதிய சுஸூகி ஸ்விஃப்ட் கான்செப்ட் வெளியீடு: நான்காம் தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் முன்னோட்டம்

எலக்ட்ரிக் பவர்டிரெய்ன் விவரங்கள்

தயாரிப்பு நிலையில் உள்ள eVX மற்றும் அதன் எலக்ட்ரிக் பவர்டிரெயின் பற்றி அதிகம் அறியப்படவில்லை என்றாலும், மாருதி சுஸூகி - ஆட்டோ எக்ஸ்போ 2023 - 550 கிமீ வரை கோரப்படும் பயணதூர வரம்பிற்கு ஏற்ற 60kWh பேட்டரி பேக்குடன் வரும் என்பதை வெளிப்படுத்தியது. eVX காரில் 4x4 டிரைவ்டிரெயினுக்கான டூயல் மோட்டார் செட்டப் இடம் பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எப்போது அறிமுகமாகிறது?

ரூபாய் 25 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் 2025 ஆம் ஆண்டில் சுஸூகி, eVX ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கிறோம். மஹிந்திரா XUV400 மற்றும் புதிய டாடா நெக்ஸான் EV -க்கு பிரீமியம் மாற்றாக இருக்கும் அதே நேரத்தில், இது MG ZS EV மற்றும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் போன்றவற்றுக்கு போட்டியாக இருக்கும்.

மேலும் படிக்க: 360 டிகிரி கேமரா கொண்ட 10 மலிவு விலை கார்கள்: மாருதி பலேனோ, டாடா நெக்ஸான், கியா செல்டோஸ் மற்றும் பிற கார்கள்

Share via

Write your Comment on Maruti e vitara

explore மேலும் on மாருதி இ விட்டாரா

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை