மாருதி சுசுகி நிறுவனம் இந்திய ராணுவத்திற்கு 2,071 ஜிப்சிகளை தயாரித்துக்கொடுக்கும் மற்றுமொரு ஆர்டரைப் பெற்றுள்ளது.
published on ஜூலை 21, 2015 11:22 am by sourabh
- 18 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர்: மாருதி சுசுகி தன்னுடைய கட்டுறுதி மிக்கதும், காடு மேடுகளில் சிறப்பாக பயணிக்க கூடியதுமான ஜிப்சி வாகனங்களை இந்திய ராணுவத்திற்கு சப்ளை செய்யும் வாய்ப்பை மீண்டும் ஒரு முறைப்பெற்றுள்ளது. இந்த முறை 125 கோடி ரூபாய் மதிப்பிலான2,071 ஜிப்சிகளை தயாரித்து அளிக்கவுள்ளது.. இதற்கு முன்னர் தன்னுடைய பழைய SUV ரக வாகனங்களை மாற்றும் முகமாக 3,200 மஹிந்திரா ஸ்கார்பியோ மற்றும் டாட்டா சபாரி வாகனங்களை ஏற்கனவே இந்திய ராணுவம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் ஆர்டர் செய்து விட்டது .
இந்திய ராணுவம் ஜி எஸ் 500 வகை வாகனங்களின் கீழ் இந்த ஆர்டரை கடந்த சில வாரங்களுக்கு முன்னரே கொடுத்து விட்டதாகவும் இன்னும் சில மாதங்களில் சப்ளை தொடங்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த டிசம்பர் மாதமும் 4000 ஜிப்சி வாகனங்களுக்கான ஆர்டரை மாருதி சுசுகி நிறுவனம் இந்திய ராணுவத்திடம் இருந்து பெற்றது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
1991 ஆம் ஆண்டில் இருந்து அதிகமாக ஜிப்சியை வாங்குவதில் முதலிடம் வகிப்பது இந்திய ராணுவம் என்பது குறிபிடதக்கது. முதல் ஆண்டு (1991) இல் 1500 ஜிப்சிகளை வாங்கியுள்ள இந்திய ராணுவம் இது வரை 35,000 ஜிப்சி எஸ்யுவி ரக வாகனங்களை மாருதி சுசுகி நிறுவனத்திடம் இருந்து வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, கடந்த டிசம்பர் மாதம் இந்திய ராணுவத்தால் கொடுக்கப்பட்ட 4,000 ஜிப்சிகளுக்கான ஆர்டர் தான் இதுவரையில் கொடுக்கப்பட்ட ஆர்டர்களிலேயே மிகப் பெரிது.
ராஜஸ்தான்,லடாக் மற்றும் அசாம் போன்ற கடுமையான பிரதேசங்களில் சிறப்புடன் செயல்படும் விதத்தில் இந்திய ராணுவத்திற்கு என்றே பிரத்யேகமாக ஜிப்சி வாகனங்களை மாருதி சுசுகி நிறுவனம் படு நேர்த்தியாக வடிவமைத்துள்ளது. முழு இருட்டான நேரத்தில் சக்தி வாய்ந்த பச்சை நிற ஒளிகதிரை உமிழும் கான்வாய் விளக்குகள் மற்றும் ஆயுதங்களையும் இன்னும் பிற ராணுவ தளவாடங்களையும் இணைத்துக்கொள்ள வசதியாக மிக பலமான கொக்கிகளும் (ஹூக்ஸ்) ஜிப்சி வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ளது.
மூலம்: இ டி