எஸ்-க்ராஸ் லிமிடெட் எடிஷன் கார்களை ரூ. 8.99 லட்சங்களுக்கு மாருதி அறிமுகப்படுத்தியது.
published on டிசம்பர் 10, 2015 04:28 pm by அபிஜித் for மாருதி எஸ்-கிராஸ் 2017-2020
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர் : மாருதி நிறுவனம் ப்ரீமியா என்ற பெயரில் எஸ் - க்ராஸ் வாகனங்களின் லிமிடெட் எடிஷன் ஒன்றை வெளியிட்டுள்ளது. எஸ் - கிராஸ் கார்களின் டெல்டா வேரியன்ட்களை (DDiS200 ) அடிப்படையாக கொண்டு இரண்டாவது டெல்டா வேரியன்ட் ஆக இந்த ப்ரீமியா அறிமுகமாகி உள்ளது. விலை ரூ. 8.99 லட்சங்கள்(எக்ஸ் - ஷோரூம் ,டெல்லி ) ஆகும். சராசரி எஸ் - க்ராஸ் கார்களில் இல்லாத பல சிறப்பம்சங்கள் இந்த புதிய ப்ரீமியா எஸ் - க்ராஸ் கார்களில் இணைக்கப்படுள்ளன.
அல்லாய் சக்கரங்கள் , ABS உடன் கூடிய இரட்டை ஏயர்பேக் ( காற்று பைகள் ) , கலர் டிஸ்ப்ளே உடன் கூடிய கார்மின் நேவிகேஷன் சிஸ்டம் , கேமரா உடன் கூடிய பின்புற பார்கிங் அஸிஸ்ட் மற்றும் பனி விளக்குகள் ( பாக் லேம்ப் ) போன்ற சிறப்பம்சங்கள் இந்த ப்ரீமியாவில் கொடுக்கப்பட்டுள்ளன. ப்ரீமியா ஒரு சிறப்பு பதிப்பு ( ஸ்பெஷல் எடிஷன் ) கார்கள் என்பதால் சராசரி எஸ் - க்ராஸ் டெல்டா வெர்ஷன் கார்களை விட குறைவான விலையுடன் ,அதே சமயம் நாம் மேலே குறிப்பிட்ட சிறப்பம்சங்களுடன் விற்பனை செய்யப்பட உள்ளது.
ப்ரீமியா ஒரு லிமிடெட் வெர்ஷன் என்பதால் குறைந்த காலத்திற்கே அதுவும் தேர்ந்தெடுத்த சில டீலர்ஷிப் மையங்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது. மேலும், குறைவான எண்ணிக்கையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு பதிப்பு ப்ரீமியா தேர்ந்தெடுக்கப்பட்ட சில நகரங்களில் தான் கிடைக்கும் என்றும் அறியப்படுகிறது. எஸ் - க்ராஸ் கார்களின் விற்பனையை கூட்ட வேண்டும் என்பதற்காக மாருதி நிறுவனம் செய்யும் முயற்சி இந்த ஸ்பெஷல் எடிஷன் ப்ரீமியா கார்களின் வெளியீடு என்று சொல்லலாம்.
இந்த எஸ் - க்ராஸ் DDiS200 , 1.3 லிட்டர் டீசல் என்ஜின் மூலம் சக்தியூட்டப்படுகிறது. 90PS அளவு சக்தி மற்றும் 200Nm அளவு டார்க் ஆகியவற்றை இந்த என்ஜின் உற்பத்தி செய்கிறது. இதைத் தவிர , 6 - வேக மேனுவல் கியர் அமைப்பு இணைக்கப்பட்ட 1 லிட்டர் DDiS320 என்ஜின் ஆப்ஷன் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
0 out of 0 found this helpful