தனது இணையதளத்தில் விட்டாரா ப்ரீஸ்ஸாவை, மாருதி வெளியிட்டது
published on ஜனவரி 18, 2016 08:18 pm by sumit
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்தியாவின் மிகப்பெரிய வாகனத் தயாரிப்பாளர், தனது அதிகாரபூர்வமான இணையதளத்தில், அடுத்து அறிமுகம் செய்யப்பட உள்ள வாகனமான விட்டாரா ப்ரீஸ்ஸாவை வெளியிட்டுள்ளது. தனது இணையதளத்தில் இந்த காரின் எந்த படத்தையும் வெளியிடாத இந்நிறுவனம், இந்த கச்சிதமான SUV-யின் ஒரு முதல் படத்தை (டீஸர்) சமீபத்தில் வெளியிட்டுள்ளதால், அடுத்து நடைபெற உள்ள ஆட்டோ எக்ஸ்போ 2016-வில் இது காட்சிக்கு வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி நிறுவனத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ள இந்த காரின் அதிகாரபூர்வமான வெளியோட்ட மாதிரிப் படத்தை வைத்து பார்க்கும் போது, ப்ரீஸ்ஸாவில் ஒரு ஃப்ளோட்டிங் ரூஃப்லைன், ரைஸிங் பெல்ட்லைன், அப்ரைட் ஹூட், வட்டமிட்ட செவ்வக வடிவிலான வீல் ஆர்ச்சுகள், உயர் கிரவுண்டு கிளியரன்ஸ், குறுகிய ஓவர்ஹேங்க்ஸ், அங்குலர் டெயில்லெம்ப்கள் மற்றும் பை-ஸீனன் பிராஜெக்டர்கள் ஆகிய அம்சங்களை காண முடிகிறது.
இதன் உள்புற அமைப்பியல் பெரும்பாலும், S-கிராஸிடம் இருந்து பெறப்பட்டவையாக உள்ளன. ப்ரீஸ்ஸாவின் அழகியல் தன்மைகளை குறித்து விளக்கிய இந்த காரின் வடிவமைப்பாளர் கூறுகையில், “சதுர வடிவிலான வீல் ஆர்ச்சுகள், குறுகிய ஓவர்ஹேங்குகள், உயர் கிரவுண்டு கிளியரன்ஸ் மற்றும் அப்ரைட் ஹூட் ஆகியவை சீரான விகிதத்தில் அமைந்து, இவ்வாகனத்திற்கு ஒரு நம்பகமான நிலையை அளிக்கிறது. ரெய்ஸிங் பெல்ட் மற்றும் அட்டகாசமான லைன்கள், பின்புறத்திற்கு சீராக சரிந்து செல்லும் ரூஃப்லைன் ஆகியவை இவ்வாகனத்திற்கு ஒரு சக்திவாய்ந்த தோற்றத்தை அளிக்கிறது. இயற்கையான மற்றும் இனிமையை உணர வைக்கும் வகையில் சிற்பமான பாடி மேற்பரப்பு அளிக்கப்பட்டு, தகுந்த முக்கியத்துவமும், நிழலும் உருவாக்கப்பட்டுள்ளது. பார்த்தவுடனே கண்டறியும் வகையிலான ஃபிளோட்டிங் ரூஃப், கிரீன்ஹவுஸில் சுருட்டி வைக்கப்பட்டுள்ள தன்மையின் மூலம் காட்சி அமைப்பு அதிகரித்து, கூட்டத்தின் நடுவிலேயும் ப்ரீஸ்ஸாவை தனித்தன்மையுடன் காட்டுகிறது” என்றார்.
விட்டாராவிற்கு ஆற்றல் அளிக்க, பெட்ரோல் வகையில் மாருதியின் 1.2 லிட்டர் மற்றும் 1.4 லிட்டர் என்ஜின்களும், டீசல் வகையில் 1.4-லிட்டர் DDiS மில்லும் அமையப் பெற்று, இயக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல இந்த காரின் விற்பனை நெக்ஸாவில் நடைபெறாமல், மாருதியின் டீலர்ஷிப்கள் மூலம் விற்கப்படவே அதிக வாய்ப்புள்ளது.
மேலும் வாசிக்க
மாருதி சுசுகி விடாரா ப்ரீஸா , 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்படலாம்