மாருதி சுசுகி விடாரா ப்ரீஸா , 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்படலாம்
published on ஜனவரி 14, 2016 11:55 am by manish for மாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020
- 19 Views
- ஒரு கருத்தை எழுதுக
மாருதி நிறுவனத்தின் சமீபத்திய தயாரிப்பான விடாரா ப்ரீஸா கார்கள் 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுசுகி விடாரா ப்ரீஸா இந்திய சாலைகளில் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்த போது பல முறை கண்ணில் தென்பட்டது. இதன் மூலம் , மாருதி நிறுவனம், உற்பத்திக்கு தயாராக உள்ள இந்த காம்பேக்ட் SUV பிரிவு வாகனத்தை எதிர் வரும் IAE 2016 ல் காட்சிபடுத்தும் என்று யூகிக்க முடிகிறது. இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ வரும் பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை கிரேடர் நொய்டாவில் நடைபெற உள்ளது.
மாருதி இந்த புதிய ப்ரீஸா காம்பேக்ட் SUV வாகனங்களின் வரைபடங்களை அதிகாரபூர்வமாக சமீபத்தில் வெளியிட்டது. இதன் மூலம், இந்த ப்ரீஸா கார்களில் ப்லோடிங் ரூஃப்லைன், ரைசிங் பெல்ட்லைன், செங்குத்தான ஹூட், சாய்வான பின்புற விளக்குகள் , நீள் சதுர வடிவிலான வீல் ஆர்செஸ் , ஹை கிரௌண்ட் கிளியரன்ஸ் , குட்டையான ஓவர்ஹேங்க்ஸ் மற்றும் பை -செனான் ப்ரோஜெக்டர்கள் ஆகிய அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளதை அதிகாரபூர்வமாக அறிய முடிகிறது. மேலும் வாகனத்தின் முன் பகுதியில் குரோம் பூச்சு கொடுக்கப்பட்டிருப்பது , நமக்கு எஸ் - க்ராஸ் கார்களின் முன்புறத்தை நினைவூட்டுகிறது.
இந்த வாகனத்தின் வடிவமைப்பு குறித்து அதன் வடிவமைப்பாளர் கூறுகையில் " ப்லோடிங் ரூஃப்லைன், ரைசிங் பெல்ட்லைன், வீல் ஆர்செஸ் செங்குத்தான ஹூட் போன்ற அம்சங்கள் இந்த ப்ரீஸா SUV வாகனங்களுக்கு கம்பீரமான தோற்றத்தை அளிக்கிறது" . “ வாகனத்தின் உடல் பகுதி மிக இயல்பாக , சரியான இடங்கள் எடுப்பாக்கப்பட்டு மிகுந்த ரசனையுடன் வடிவமைக்கப்பட்டு பல வாகனங்களின் மத்தியிலும் இந்த விடாரா ப்ரீஸா வாகனங்கள் தனித்து தெரியும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார் .
என்ஜினைப் பொறுத்தவரை மாருதியின் 1.2- லிட்டர் மற்றும் 1.4- லிட்டர் பெட்ரோல் என்ஜின், பியட் - மூலம் பெறப்பட்ட 1.4- லிட்டர் DDiS டீசல் எஞ்சின்கள் பொருத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாகனத்தின் உட்புற கேபின் பகுதியில் ஆப்பிள் கார் ப்லே மற்றும் மாருதியின் 7 - அங்குல ஸ்மார்ட் ப்ளே இன்போடைன்மென்ட் அமைப்பு பொருத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மாருதியின் ப்ரீமியம் டீலர்ஷிப் மையங்களான நெக்ஸா மூலம் இந்த புதிய ப்ரீஸா விற்பனை செய்யப்படலாம் என்றும் தெரிய வருகிறது. இந்த கார்களுக்கு போர்ட் ஈகோஸ்போர்ட், மஹிந்திரா TUV 300 மற்று இன்னும் சில SUV வாகனங்கள் போட்டியாக இருக்கும் என்று தெரிகிறது.
மேலும் வாசிக்க
0 out of 0 found this helpful