Maruti e Vitara-வின் வேரியன்ட் வாரியான பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் இங்கே
published on பிப்ரவரி 04, 2025 05:39 pm by shreyash for மாருதி இ vitara
- 23 Views
- ஒரு கருத்தை எழுதுக
மாருதி இ விட்டாரா - 49 கிலோவாட் மற்றும் 61 கிலோவாட் ஆகிய இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வருகிறது. 500 கி.மீ அதிகமான ரேஞ்சை வழங்குகிறது.
விற்பனைக்குத் தயாரான நிலையில் இந்தியாவின் ஆட்டோ எக்ஸ்போ 2025 -ல் மாருதி இ விட்டாரா இடம்பெற்றது. இதன் விற்பனை விரைவில் தொடங்கப்பட உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் ஆஃப்லைன் முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. விலை அறிவிப்புக்கு முன்னதாக மாருதி இ விட்டாராவின் ஒவ்வொரு வேரியன்ட்களும் வழங்கக்கூடிய பேட்டரி பேக் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் ஆப்ஷன்கள் பற்றிய விவரங்களை நாங்கள் பெற்றுள்ளோம். மாருதி இ விட்டாராவை, டெல்டா, ஜெட்டா மற்றும் ஆல்பா போன்ற மூன்று முக்கிய வேரியன்ட்களில் கிடைக்கிறது.
ஆனால் பவர்டிரெய்ன்களின் வேரியன்ட் வாரியான விவரங்களை பற்றி விரிவாகப் பார்ப்போம்:
பேட்டரி பேக் |
49 கிலோவாட் |
61 கிலோவாட் |
கிளைம் செய்யப்படும் ரேஞ்ச் |
500 கிலோமீட்டருக்கு மேல் |
|
பவர் |
144 PS |
174 PS |
டார்க் |
192.5 Nm |
192.5 Nm |
டிரைவ் டைப் |
ஃப்ரண்ட்-வீல்-டிரைவ் |
ஃப்ரண்ட்-வீல்-டிரைவ் |
இ விட்டாரா 7 கிலோவாட் AC சார்ஜிங் மற்றும் 70 கிலோவாட் வரை DC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆகிய இரண்டையும் சப்போர்ட் செய்கிறது.
வேரியன்ட் வாரியான பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
இப்போது இந்த பேட்டரி பேக்குகளின் வேரியன்ட் வாரியான விவரங்களை பார்ப்போம்:
வேரியன்ட் |
டெல்டா |
ஜெட்டா |
ஆல்பா |
49 கிலோவாட் |
✅ |
❌ |
❌ |
61 கிலோவாட் |
❌ |
✅ |
✅ |
கம்பிரமான டிஸைன்
மாருதி நிறுவனம் இ விட்டாராவை கம்பிரமான எஸ்யூவி -க்கான டிசைன் செய்து எஸ்யூவி -யின் நிலையை வழங்கியுள்ளது. முன்புறத்தில் இது Y-வடிவ LED DRL-கள், LED ஹெட்லைட்களில் தடையின்றி ஒன்றிணைக்கும் நேர்த்தியான கிளாஸி பிளாக் எலமென்ட்களுடன் கூடிய ப்ளாங்க்ட் ஆஃப் கிரில் மற்றும் ஃபாக் லைட்களை வைத்திருக்கும் ஒரு அசத்தலான பம்பர் டிசைனை கொண்டுள்ளது. பக்கவாட்டில் இருந்து இது விரிவடைந்த வீல் ஆர்ச்கள் கொண்ட 18-இன்ச் அலாய் வீல்கள் உள்ளன. அதே நேரத்தில் பின்புற டோர் ஹேன்டில்கள் C-பில்லரில் கொடுக்கப்பட்டுள்ளன. பின்புறத்தில் இது கிளாஸி பிளாக் பிளாஸ்டிக் டிரிம் மூலம் கனெக்ட் செய்யப்பட்ட 3-பீஸ் LED டெயில் லைட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
கேபின் மற்றும் வசதிகள்
கேபினில், மாருதி இ விட்டாரா ஒரு மிகச்சிறிய டேஷ்போர்டு டிசைன் செட்டப்பை கொண்டுள்ளது. இதில் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே உள்ளிட்ட டூயல் இன்டெக்ரேட்டட் டிஸ்ப்ளேகளால் சிறப்பிக்கப்படுகிறது.
மாருதி இ-விட்டாரா காரில் 10.25 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.1 இன்ச் ஃபுல் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, 10-வே பவர்டு டிரைவர்ஸ் சீட், மல்டி-கலர் ஆம்பியன்ட் லைட்டிங் மற்றும் ஃபிக்ஸ்ட் கிளாஸ் ரூஃ போன்ற வசதிகள் பொருத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பைப் பொறுத்தவரையில் இது 7 ஸ்டாண்டர்டான ஏர்பேக்குகளுடன் வருகிறது. மேலும் இது லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) கொண்ட முதல் மாருதி மாடலாக இருக்கும்.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
மாருதி இ விட்டாராவின் ஆரம்ப விலை ரூ. 17 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக், டாடா கர்வ் EV, MG ZS EV மற்றும் மஹிந்திரா BE 6 ஆகியவற்றுக்கு ஒரு சிறந்த போட்டியாக இருக்கும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற கார்தேகோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.