• English
  • Login / Register

பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் வெளியிடப்பட்டது Maruti e Vitara

published on ஜனவரி 18, 2025 02:18 pm by dipan for மாருதி இ vitara

  • 14 Views
  • ஒரு கருத்தை எழுதுக

புதிய மாருதி இ விட்டாரா ஆனது மாருதியின் முதல் ஆல்-எலக்ட்ரிக் காராகும். இது ஃபிரன்ட் வீல்-டிரைவ்-செட்டப் உடன் மட்டுமே வருகிறது. இது வரும் மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்படும்.

Maruti e Vitara

  • இ விட்டாரா மாருதியின் முதல் ஆல் எலக்ட்ரிக் கார் ஆகும்.

  • நேர்த்தியான லைட்டிங் எலமென்ட்கள் மற்றும் பிளாக் 18 இன்ச் வீல்களுடன் வெளிப்புற தோற்றம் கம்பீரமாக உள்ளது.

  • ஃபுளோட்டிங் இன்டெகிரேட்டட் டூயல் ஸ்கிரீன் செட்டப் உடன் நவீன தோற்றமுடைய டாஷ்போர்டு கொடுக்கப்பட்டுள்ளது.

  • ஆட்டோ ஏசி, பனோரமிக் சன்ரூஃப் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் ஆகிய வசதிகளுடன் இ விட்டாரா வருகிறது.

  • பாதுகாப்புக்காக 7 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), 360 டிகிரி கேமரா மற்றும் ADAS ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

  • இதன் விலை ரூ.17 லட்சம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது (அறிமுக எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா).

இந்தியாவில் மாருதியின் முதல் எலக்ட்ரிக் காரான மாருதி இ விட்டாரா ஆட்டோ எக்ஸ்போ 2025 -வில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உற்பத்திக்கு தயாராகவுள்ள இந்த கார் மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது 49 kWh அல்லது 61 kWh பேட்டரி பேக் என இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. இரண்டும் முன் ஆக்ஸிலில் (FWD) பொருத்தப்பட்ட எலக்ட்ரிக் மோட்டாரை கொண்டுள்ளன. இது 500 கி.மீ -க்கு மேல் கிளைம்டு ரேஞ்சை கொண்டுள்ளது. இ விட்டாரா இந்தியாவில் தயாரிக்கப்பட்டு மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். மாருதி சுஸுகியின் முதல் ஆல் எலக்ட்ரிக் காரில் உள்ள அனைத்தையும் இங்கே விரிவாகப் பார்ப்போம்:

வெளிப்புறம்

Maruti e Vitara

Y வடிவ LED DRLகளுடன் கூடிய நேர்த்தியான LED ஹெட்லைட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கீழ் பம்பரில் இரண்டு ஃபாக் லைட்ஸ், ஒரு பெரிய ஸ்கிட் பிளேட் மற்றும் ADAS தொழில்நுட்பத்திற்கான ரேடார் சென்சார் உள்ளது. இது இந்தியாவில் மாருதி கார்களில் முதல் முறையாக கொடுக்கப்பட்டுள்ளது

பக்கவாட்டில் இருந்து பார்க்கையில் தடிமனான பாடி கிளாடிங் மற்றும் 18-இன்ச் அலாய் வீல்களுடன் இ விட்டாரா முரட்டுத்தனமாகத் தெரிகிறது. முந்தைய தலைமுறை மாருதி ஸ்விஃப்ட்டை போலவே பின்புற டோர் ஹேண்டில்கள் சி-பில்லரில் கொடுக்கப்பட்டுள்ளன.

Maruti e Vitara

பின்புறத்தில் இ விட்டாரா அதன் கான்செப்ட் பதிப்பில் இருந்தது போலவே 3 பீஸ் லைட்களை LED டெயில் விளக்குகள் இணைக்கப்பட்டுள்ளன. முரட்டுத்தனமான பாணியில் உள்ள பின்புற பம்பர் ஒட்டுமொத்த வெளிப்புற வடிவமைப்பிலும் சில்வர் ஸ்கிட் பிளேட்டுடன் தனித்து தெரிகிறது.

உள்பக்கம்

Maruti e Vitara dashboard

2-ஸ்போக் பிளாட்-பாட்டம் ஸ்டீயரிங் வீல், 10.1 இன்ச் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் 10.25 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் டூயல்-டோன் பிளாக் மற்றும் டான் கேபின் தீம் கொடுக்கப்பட்டுள்ளது. டாஷ்போர்டு 3 லேயர்களாக பிரிக்கப்பட்டுள்ளது: மேல்பகுதியில் டூயல் டிஸ்பிளேக்கள் உள்ளன. நடுப்பகுதியில் ஏசி கண்ட்ரோல் பட்டன்கள் மற்றும் ஏசி வென்ட்களுக்கு இடையே ஸ்பான்கள் கொண்ட டான் பேனல் உள்ளது. மேலும் கீழ் லேயரில் பிளாக் கலரில் க்ளோவ்பாக்ஸ் மற்றும் பிற முக்கியமான கன்ட்ரோல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஏசி வென்ட்களை சுற்றி குரோம் ஃபினிஷ் கொடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கிளாஸி பிளாக் சென்டர் கன்சோலில் இரண்டு கப்ஹோல்டர்கள், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் டெரெய்ன் மற்றும் டிரைவ் மோடு தேர்வுக்கான ரோட்டரி டயல் ஆகியவை உள்ளன. கன்சோல் டான் லெதரெட் மெட்டீரியலில் ஃப்னிஷ் செய்யப்பட்ட மைய ஆர்ம்ரெஸ்டில் உள்ளது.

அனைத்து பயணிகளுக்கும் அட்ஜெஸ்ட்டபிள் ஹெட்ரெஸ்ட்கள் மற்றும் 3-பாயின்ட் சீட்பெல்ட்களுடன் கூடிய செமி-லெதரெட் அப்ஹோல்ஸ்டரி இருக்கைகளைக் கொண்டுள்ளது.

வசதிகள் மற்றும் பாதுகாப்பு

டூயல் ஸ்கிரீன்களுடன் கூடுதலாக ஆட்டோ ஏசி, 10-வே அட்ஜெஸ்ட்டபிள் டிரைவர் சீட், பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் ஆகியவற்றை கொண்டுள்ளது.

பாதுகாப்பை பொறுத்தவரையில் 7 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), 360 டிகிரி கேமரா மற்றும் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் கொலிஷன் அவாய்டன்ஸ் வார்னிங் போன்ற தொழில்நுட்பத்துடன் இது லெவல்-2 ADAS வசதிகள் உடன் வருகிறது.

எலக்ட்ரிக் பவர்டிரெய்ன்

Maruti e Vitara centre console

இந்த காரில் இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரே ஒரு எலக்ட்ரிக் மோட்டார் அல்லது டூயல் மோட்டார் செட்டப் உடன் இணைக்கப்பட்டுள்ளது. விரிவான விவரங்கள் பின்வருமாறு:

பேட்டரி பேக்

49 kWh

61 kWh

பவர்

144 Ps

174 Ps

டார்க்

192.5 Nm

192.5 Nm

டிரைவ்டிரெய்ன்

FWD*

FWD

எலக்ட்ரிக் மோட்டார்கள் எண்ணிக்கை

1

1

கிளைம்டு ரேஞ்ச்

அறிவிக்கப்பட வேண்டும்

500 கி.மீ -க்கு மேல்

*FWD = ஃபிரன்ட் வீல் டிரைவ்

ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷன்கள் உட்பட பல்வேறு சார்ஜிங் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

Maruti e Vitara

மாருதி இ விட்டாரா காரின் விலை ரூ. 17 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா கர்வ்வ் EV, MG ZS EV, மற்றும் வரவிருக்கும் ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும். விரைவில் முழுமையான விலை விவரங்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

was this article helpful ?

Write your Comment on Maruti இ vitara

explore மேலும் on மாருதி இ vitara

space Image

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
  • டாடா சாஃபாரி ev
    டாடா சாஃபாரி ev
    Rs.32 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • புதிய வகைகள்
    மஹிந்திரா be 6
    மஹிந்திரா be 6
    Rs.18.90 - 26.90 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • புதிய வகைகள்
    மஹிந்திரா xev 9e
    மஹிந்திரா xev 9e
    Rs.21.90 - 30.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • ஆடி க்யூ6 இ-ட்ரான்
    ஆடி க்யூ6 இ-ட்ரான்
    Rs.1 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மஹிந்திரா xev 4e
    மஹிந்திரா xev 4e
    Rs.13 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience