15 ஆண்டுகளில் 25 லட்சம் …விற்பனையில் சாதனை படைத்த Maruti Dzire

published on செப் 18, 2023 02:07 pm by tarun for மாருதி ஸ்விப்ட் டிசையர்

  • 47 Views
  • ஒரு கருத்தை எழுதுக

2008 முதல் 2023 வரை, இது மூன்று தலைமுறைகளாக மார்க்கெட்டில் இருக்கிறது,அனைத்து காலகட்டத்திலும் இது மிகவும் பிரபலமானதாகவே இருந்தது.

Maruti Dzire

  •  10 லட்சம் (1 மில்லியன்) விற்பனையை எட்டிய முதல் மற்றும் ஒரே  செடான் கார் மாருதி டிஸையர் மட்டுமே.

  •  2008 -ல் இந்த கார் அறிமுகமானது பின்னர்  கடந்த 2017 -ல் மூன்றாம் தலைமுறை அறிமுகம் செய்யப்பட்டது.

  •  7-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு,  ரியர்வியூ கேமரா மற்றும் ஆட்டோமெட்டிக் LED புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

  •  1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது; சிஎன்ஜியும் ஆப்ஷனும் கிடைக்கிறது.

  • விலை ரூ.6.51 லட்சம் முதல் ரூ.9.39 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 மாருதி டிஸையர், 25 லட்சம் வாடிக்கையாளர்களின் கைகளில் சென்று சேர்ந்துள்ளது, இந்தியாவின் டிஸையர் சிறந்த செடான் விற்பனையாளர் என்ற நிலையை உறுதிப்படுத்தியுள்ளது, மேலும் இதுவரை எந்த செடானும் எட்டாத ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது. செடான் பிரிவில் 50 சதவீத சந்தை பங்கை பிடித்துக் கொண்டு சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும், 1 மில்லியன் விற்பனையை எட்டிய முதல் செடான் இதுவாகும்.

Maruti Dzire

மாருதி சுஸூகி இந்தியா லிமிடெட்டின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனையின் மூத்த நிர்வாக அதிகாரி ஷஷாங்க் ஸ்ரீவஸ்தவா, இந்த சாதனை குறித்து பேசும்போது, "மாருதி சுஸுகி நிறுவனம் நவீன தொழில்நுட்பம், புதுமையான அம்சங்கள் மற்றும் சமகால வடிவமைப்பு ஆகியவற்றுடன், அனைத்து பிரிவுகளிலும் உலகளாவிய தரத்தை கொண்ட கார்களை வழங்குவதில் உறுதியாக உள்ளது. வாடிக்கையாளர்கள் தொடர்ந்து தங்களுக்கு விருப்பமான செடானாகத் தேர்வு செய்வது, டிஸையர் கார் மாருதி சுஸூகி நிறுவனத்தின் மதிப்புக்கு ஒரு சான்றாக விளங்குகிறது. தற்போது 25 லட்சம் இதயங்களைக் கவர்ந்துள்ள டிஸையர் பிராண்டின் மீது எங்கள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்." எனத் தெரிவித்தார்.

மாருதி டிஸையர் கடந்து வந்த பாதை

Maruti Dzire

டிஸையர் முதன்முதலில் 2008 இல் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் அது ஹேட்ச்பேக்கின் நீட்டிக்கப்பட்ட பதிப்பாக இருந்ததால், 'ஸ்விஃப்ட்' என்ற பெயர் சேர்க்கப்பட்டது. இது ஒரு விசாலமான 4.2-மீட்டர் நீளமான சலுகையாகும், இது தனியார் மற்றும் வணிக ரீதியாக வாடிக்கையாளார்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதுஅதன் இரண்டாம் தலைமுறை மாடல் 2012 -ல் அறிமுகப்படுத்தப்பட்டது. அதே சமயயத்தில்தான் அந்த காலகட்டத்தில் வளார்ந்து வந்த பிரிவான சப்-4-மீட்டர் செடானாக மாற்றியமைக்கப்பட்டது..

மேலும் படிக்க: மாருதி டிஸையர் அல்லது ஹூண்டாய் ஆரா:  முடிவெடுக்க கடினமானது

தற்போது காரில் உள்ள சிறப்பம்சங்கள்

Maruti Dzire

மாருதி டிஸையர் தற்போது அதன் மூன்றாம் தலைமுறையில் உள்ளது மற்றும் கடந்த 15 ஆண்டுகளாக அதிகம் விற்பனையாகும் செடான் கார்களில் ஒன்றாக உள்ளது. ஆட்டோமேட்டிக் LED புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், க்ரூஸ் கன்ட்ரோல், 7-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், இரட்டை முன் ஏர்பேக்குகள், ஹில்-ஹோல்ட் அசிஸ்டுடன் கூடிய வெஹிகிள் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP)  மற்றும் பின்புற கேமரா போன்ற அருமையான அம்சங்களைக் கொண்டுள்ளது. இது சிறந்த தோற்றமுடையது மற்றும் அதன் ஹேட்ச்பேக் பதிப்பு காரிலிருந்து  மிகவும் வித்தியாசமானது.

பவர்டிரெய்ன்கள், விலை மற்றும் போட்டியாளர்கள்

Maruti Dzire

மாருதி டிஸையர் காரின் விலை ரூ.6.51 லட்சம் முதல் ரூ.9.39 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும்.மாருதி டிஸையர் 90PS/113Nm 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT  டிரான்ஸ்மிஷன்களுடன் கிடைக்கிறது. 31.12 கிமீ/கிலோ வரை மைலேஜ் கொடுக்கும் சிஎன்ஜி பவர்டிரெய்னிலும் இதைத் வாங்கலாம். இது ஹூண்டாய் அமேஸ், ஹூண்டாய் ஆரா மற்றும் டாடா டிகோர் காருக்கு போட்டியாக உள்ளது.

மேலும் படிக்க: டிஸையர் ஆன் ரோடு விலை

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது மாருதி ஸ்விப்ட் Dzire

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingசேடன் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience